விழுப்புரம் : விழுப்புரத்தில், சிறுவனிடம் பாலியல் தொந்தரவு செய்த, உடற்கல்வி ஆசிரியரை, போலீசார் கைது செய்தனர். விழுப்புரம், கீழ்ப்பெரும்பாக்கம் ரசாக் லே-அவுட் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாமணி, 43. இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், அப்பகுதியில் உள்ள செயின்ட் சேவியர் பள்ளியில், உடற்கல்வி ஆசிரியராகப் பணி புரிந்தார். பின், அவர் அங்கு சம்பளம் குறைவாக இருந்த காரணத்தால், பள்ளி பணியை விட்டு, வெளியே வந்தார். இவரது வீட்டின் அருகே வசிக்கும் ரியாஸ், 9, (பெயர் மாற்றப் பட்டுள்ளது) எனும் சிறுவன், செயின்ட் சேவியர் பள்ளியில், நான்காம் வகுப்புப் படித்து வருகிறான். நேற்று முன்தினம் மாலை, 4:30 மணிக்கு, ராஜாமணி வீட்டிற்குச் சென்ற ரியாஸ் கால்பந்து தருமாறு கேட்டுள்ளான். வீட்டில் தனியே இருந்த ராஜாமணி, சிறுவன் ரியாசிற்கு முத்தம் கொடுத்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். சிறுவனின் பெற்றோர் தரப்பில், விழுப்புரம் டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இதன்பேரில், இன்ஸ்பெக்டர் ராமநாதன் வழக்குப் பதிந்து ஆசிரியர் ராஜாமணியை கைது செய்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.