பதிவு செய்த நாள் :
கருத்துகள் (19)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

தமிழகத்தில் நிலவும் தொடர் மின் தடையால், பெரும்பாலான மாவட்டங்களில், மூன்று மாதமாக, விலையில்லா கிரைண்டர், மிக்சி, பேன் வழங்குவது, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. குடோன்களில் பொருட்கள் தேங்கியே கிடப்பதால், துருப்பிடித்து பாழாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
"டெண்டர்'
தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி, ஆட்சி பொறுப்பேற்றவுடன், தமிழக முதல்வர் ஜெயலலிதா, விலையில்லா கிரைண்டர், மிக்சி, பேன் வழங்கும்திட்டத்தை அறிவித்தார்.இதற்காக, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை உருவாக்கப்பட்டது. வெளிநாடுகளைச் சேர்ந்த பிரபல தொழில் நிறுவனங்கள் மூலம், "டெண்டர்' கோரப்பட்டு, பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டன.நடப்பு, 2012 - 13ல், மாநிலம் முழுவதும், 25 லட்சம் பயனாளிகளுக்கு, இலவச பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த ஆறு மாதத்துக்கும் மேலாக, தமிழகம் முழுவதும் கடுமையான மின்வெட்டு அமலில் உள்ளது.கிரைண்டர், மிக்சி உற்பத்திக்கு பெயர் பெற்ற கோவை மாவட்டத்தில், தொழில் முடங்கி போயுள்ளது. சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில், 16 மணி நேர மின்வெட்டு உள்ளது. மின்வெட்டால், தொழில்கள் அனைத்தும் நசிவடைந்து உள்ளன.இந்நிலையில், கிரைண்டர், மிக்சி வழங்கினால், பொதுமக்கள் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என, அரசுஅமைதி காக்கிறது. பெரும்பாலான மாவட்டங்களில், இலவச பொருட்கள் வழங்குவது,தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.
வீணாகும் பொருட்கள்
மாவட்டங்களில், தாலுகாவில் உருவாக்கப்பட்ட சிறப்பு திட்டங்கள் துறைக்கான தாசில்தார்கள், வேலை ஏதுமின்றி காத்து வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement

குடோன்களில் வைக்கப்பட்டுள்ள கிரைண்டர், மிக்சி, பேன் உள்ளிட்டவை, துருப்பிடிக்கும் நிலையில் உள்ளன. என்ன செய்வதென தெரியாமல் அதிகாரிகள் அப்படியே கிடப்பில் போட்டு உள்ளனர்.
வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது:கிரைண்டர், மிக்சி, பேன் வழங்கி, மூன்று மாதத்துக்கு மேல் இருக்கும். அமைச்சர்களும், கலெக்டர்களும், விலையில்லா பொருட்கள் வழங்குவதைப் பற்றி, எதுவும் எங்களிடம் கூறவில்லை. ஒவ்வொருதாலுகாவிலும், குடோனில் பொருட்கள் தேக்கி வைக்கப்பட்டுள்ளன.பல நாட்களாகி விட்டதால், பேன், கிரைண்டர் துருப்பிடித்துள்ளது.

கிரைண்டர் இருந்தால், மிக்சி இல்லை; மிக்சி இருந்தால், பேன் இல்லை என்ற நிலை தான் உள்ளது.தாலுகாவில் நியமிக்கப்பட்ட, சிறப்பு திட்ட துணை தாசில்தார்கள், வேலையின்றி உள்ளனர். மின்வெட்டு பிரச்னை தீர்ந்தால் தான், கிரைண்டர், மிக்சி, பேன் திட்டம் முழுமையாக செயல்படும் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

-நமது சிறப்பு நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (19)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
27-நவ-201212:39:13 IST Report Abuse
முருகவேல் சண்முகம்.. உஷ்.... யாரும் சத்தம் போடக்கூடாது... எங்களுக்கு வரவேண்டியது வந்துடிசில்ல.. அப்புறம் என்ன எங்களுக்கு கவலை.... இது இப்படியே வச்சுகிட்டு... அடுத்த ஆர்டர் ரூம்...போட்டு.... நாங்க வாங்கவேண்டியத்தை..வாங்கிடுவோமுள்ள...நாங்க யாரு....
Rate this:
Share this comment
Cancel
Kumaraswami Balasubramanian - erode ,இந்தியா
27-நவ-201201:53:39 IST Report Abuse
Kumaraswami Balasubramanian வருகிற பாராளுமன்ற தேர்தலில் மின்வெட்டு பிரச்னை பூதாகரமாக இருக்கும். இதே நிலைமை நீடித்தால் அரசியல்வாதிகள் வாக்கு சேகரிக்க வரும்போது தெரிந்துகொள்வார்கள் மக்களின் மன நிலையை
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - Madurai,இந்தியா
23-நவ-201200:09:22 IST Report Abuse
மதுரை விருமாண்டி கமிஷன் வந்திடுச்சி இல்லே... இனிமே எது நாசமாப் போனா மம்மிக்கு என்ன?
Rate this:
Share this comment
Cancel
பிரபு கே - கோயம்புத்தூர்,இந்தியா
22-நவ-201223:03:04 IST Report Abuse
பிரபு கே தமிழ்நாடு அரசு: ஜெயலலிதா அறிவிப்பு... ஜெயலலிதா அறிவிப்பு... ஜெயலலிதா அறிவிப்பு... ஜெயலலிதா அறிவிப்பு... (இந்த வரியை தெருவில் காய் கறி விற்பவர்கள் கூவி விற்பது போல படிக்கவும்) திருவாளர் பொதுஜனம்: யோவ்... என்னையா அறிவிப்பு... அறிவிப்புனு தினம் தினம் கூவிட்டே இருக்கீங்க... காரியத்தில ஒன்னையுமே காணோம்... தமிழ்நாடு அரசு: எங்களுக்கு அறிவிக்க மட்டும்தான் தெரியும்... செயல்படுத்த தெரியாது... தமிழ் நாட்டு மக்களுக்கு பட்டை நாமம் போடுவது எப்படி என்பதும் எங்களுக்கு தெரியும். முட்டாள் தமிழ் பசங்க எது சொன்னாலும் நம்பிருவாணுங்க... நாளைக்கே நாங்க, வெள்ளை காக்கா பறக்குதுன்னு அறிக்கை விட்டா அதையும் நம்பிடுவாங்க. தமிழர்களுக்கு மறதியும் ஜாஸ்தி... சில நாட்களில் நாங்கள் சொன்னதை மறந்துவிட்டு மீண்டும் .....பார்கள்
Rate this:
Share this comment
Cancel
சச்சின் - சென்னை,இந்தியா
22-நவ-201222:09:49 IST Report Abuse
சச்சின் அப்படியா குடோனில் அப்டி எவ்ளோவு சார் இருக்கு
Rate this:
Share this comment
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
27-நவ-201212:51:16 IST Report Abuse
முருகவேல் சண்முகம்..///சச்சின் அப்படியா குடோனில் அப்டி எவ்ளோவு சார் இருக்கு /// கட்சி காரங்களெல்லாம் எடுத்தது போக மிச்சம்... ஆனா எவ்வளவுன்னு தெரியாது... என்ன... இன்னும் கட்சிகாரகள்..வந்துக்கிட்டுருக்காங்க... அவங்களெல்லாம் எடுத்தது போக தான் தெரியும்.......
Rate this:
Share this comment
Cancel
KMP - SIVAKASI ,இந்தியா
22-நவ-201219:21:37 IST Report Abuse
KMP இப்படித் தான் மக்கள் வரிப் பணம் வீணாகும் போல் தெரிகிறது ....
Rate this:
Share this comment
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
27-நவ-201212:49:40 IST Report Abuse
முருகவேல் சண்முகம்..///மகேந்திரபிரபு . கா இப்படித் தான் மக்கள் வரிப் பணம் வீணாகும் போல் தெரிகிறது .... /// பராவயில்ல.... இப்பவாவதும்...புரிஞ்சுதே... ஆனா...இப்படி மட்டுமில்ல...இப்படியும் வீணாகும்.... நன்றி..தினமலர்....புரியவைக்கும்...உங்கள் முயற்சிக்கு..........
Rate this:
Share this comment
Cancel
பாவப்பட்ட makkal - india,இந்தியா
22-நவ-201217:11:52 IST Report Abuse
பாவப்பட்ட makkal அது என்ன சென்னை மட்டும் தமிழ்நாடுன்னு நெனசிகிட்டங்க போலிருக்கு . மத்திய அரசு கரண்ட் கொடுக்க முடியாதுன்னு சொலுறது பத்த நாம எல்லாம் வேற நட்டு காருங்க மாதிரில்லா தெரியுது . அப்போ டக்ஸ் மட்டும் வாங்குறதுக்கு மட்டும் வந்துடுவானுங்க ப்ரிசினான கனுட்க்க மாட்டுனுங்க அப்போ எதுக்கு ஒரு அரசு ?
Rate this:
Share this comment
Cancel
rangarajank - chennai,இந்தியா
22-நவ-201215:44:47 IST Report Abuse
rangarajank இலவச பொருட்களை வாங்கியும் பலன் இல்லை. மாவட்டங்களில், 16 மணி நேர மின்வெட்டு உள்ளது. மின்வெட்டு எப்பொழுது சரியாகும் அப்பொழுதான் மக்கள் முகத்தல் சதோஷம்.
Rate this:
Share this comment
Cancel
சுரேஷ் - sathyamangalam,இந்தியா
22-நவ-201212:40:13 IST Report Abuse
சுரேஷ் தினமலருக்கு நன்றி
Rate this:
Share this comment
Cancel
suresh - sathyamangalam,இந்தியா
22-நவ-201212:37:29 IST Report Abuse
suresh எங்க ஊரில 20 மணிநேர மின்வெட்டு நிர்வாகம் பண்ண துப்பிலேன்னா ஆட்சிய கலைச்சிட்டு ஹைதராபாத் போய் ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே ஏன் எங்க வைத்தெரிச்சல கொட்டி நாசமா போறீங்க தூ இதெல்லா ஒரு பொழப்பு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.