கர்நாடகா தண்ணீர் திறந்து விட உத்தரவிடக்கோரி புதிய மனு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி:"தமிழகத்தில், 15 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள, சம்பா பயிர்களை காப்பாற்ற, அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை, காவிரியில், 52.8 டி.எம்.சி., தண்ணீரை திறந்து விடும்படி, கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

காவிரி கண்காணிப்பு குழுவின், 30வது கூட்டம், இம்மாதம், 15ம் தேதி டில்லியில் நடந்தது. அந்தக் கூட்டத்தில், தமிழகத்துக்கு, 4.8 டி.எம்.சி., தண்ணீர் வழங்க வேண்டும் என, கர்நாடக அரசுக்கு, உத்தரவிடப்பட்டது.இந்நிலையில், தமிழக அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது; அந்த மனுவில் கூறப்பட்டுள்ள தாவது:

காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவுப்படி, ஜூன் முதல் அக்டோபர் வரை, தமிழகத்திற்கு, 100.85 டி.எம்.சி., தண்ணீரை, காவிரியில் கர்நாடகா திறந்து விட வேண்டும். இது, இம்மாதம், 15ம் தேதி நடைபெற்ற காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.அதன்படி, அக்டோபர் மாதம் வரை, தமிழகத்திற்கு, 37,13 டி.எம்.சி., தண்ணீர் கர்நாடக பாக்கி வைத்துள்ளது என்ற முடிவுக்கு கண்காணிப்பு குழு வந்தது. பாக்கியாக தர வேண்டிய தண்ணீரைப் பற்றி, காவிரி கண்காணிப்பு குழு எந்த முடிவும் எடுக்கவில்லை. அதற்குப் பதிலாக, குறிப்பிட்ட அளவு தண்ணீரை, கடந்த, 15ம் தேதி முதல், வரும், 30ம் தேதி வரை திறந்து விட உத்தரவிட்டுள்ளது.

மேலும், டிசம்பர் மாதம், பருவமழை காலம் முடிவடைகிறது. அப்போது, எவ்வளவு தண்ணீர் தமிழகத்திற்கு தர வேண்டியுள்ளது என்பதை முடிவு செய்து கொள்ளலாம் என, காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில், கர்நாடகா தெரிவித்தது. அதனால், எந்தப் பலனும் இல்லை.தமிழகத்தில், மேட்டூர் அணையில், தற்போது போதுமான தண்ணீர் இல்லை. இப்போதுள்ள தண்ணீரைக் கொண்டு, 10 நாட்களுக்குத்தான், தமிழகத்தில், 15 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள, சம்பா பயிர்களை காப்பாற்ற முடியும்.

எனவே, தமிழகத்தில் சம்பா பயிரை காப்பாற்ற, தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழகத்திற்கு தர வேண்டிய, 52.8 டி.எம்.சி., தண்ணீரை தமிழகத்திற்கு தர வேண்டியது கட்டாயம்.அத்துடன் காவிரி நடுவர் மன்ற இடைக்கால உத்தரவுப்படி, தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரையும், அடுத்த ஆண்டு, பிப்ரவரி மாதம் வரை திறந்து விட, கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும்.மேலும், விவசாயிகளின் நலனை பாதுகாக்கவும், அவர்களின் பயிர்களுக்கு போதுமான தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யவும், காவிரி நடுவர் மன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள, "சீசன்' என்ற வார்த்தைக்கு(டெல்டா பகுதியில் பயிரிடும் காலம்) உரிய விளக்கத்தையும் அளிக்க வேண்டும். இவ்வாறு தமிழக அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முல்லைபெரியார் - குமிளி,இந்தியா
23-நவ-201215:39:16 IST Report Abuse
முல்லைபெரியார் தமிழகத்திற்குத் தண்ணீரும் கேரளாவிற்கு பாதுகாப்பும் என்று கேரளா அரசு கூறிய போது ஒன்றும் அறியாத அப்பாவிகளுக்கு சாராயமும், சாப்பிட கொஞ்சம் பணமும் கொடுத்து பல ஆட்களை கேரளா நோக்கி படை எடுத்து போகச் செய்த V.கோபால்சாமி இப்போது என் சும்மா இருக்கிறான். அவருடைய சொந்தங்கள் கர்நாடகாவில் இருப்பதால் அடி விழுந்தால் என்ன செய்வது என்றதாலா? இப்போது அங்கு படை எடுக்க வேண்டியது தானே? இப்போது பதுங்கி இருப்பதேன்?
Rate this:
Share this comment
Cancel
Ding Tong - trichy,இந்தியா
23-நவ-201212:30:04 IST Report Abuse
Ding Tong மனு குடுத்த காகிதத்தை எல்லாம் மக்களுக்கு குடுத்திருந்தா தொடச்சி துக்கிபோடவாவது பயன்பட்டிருக்கும்
Rate this:
Share this comment
Cancel
ராஜா - சென்னை,இந்தியா
23-நவ-201212:12:13 IST Report Abuse
ராஜா இது கர்நாடகம் செய்யும் பொருளாதார தாக்குதல் என்று கூட வைத்து கொள்ளலாம் ,ஏன் என்றால் இங்கு விவசாயம் சரி இல்லாமல் அரிசி விளைய வைக்க முடியவில்லை என்றால் கர்நாடகத்தில் இருந்து தான் அரிசி வாங்க வேண்டும் அப்பொழுது அவர்கள் வைத்தது தான் விலை
Rate this:
Share this comment
Cancel
ராஜா - சென்னை,இந்தியா
23-நவ-201212:10:27 IST Report Abuse
ராஜா நாட்டில் தேங்கி கடக்கும் வழக்குகள் போதாது என்று இவர்கள் வேறு வாரத்திற்கு இரண்டு வழக்கு தொடுக்கிறார்கள் ,எரிவதை பிடுங்கி விட்டால் கொல்லி தன்னை போல் அடங்கும் பேசாமல் நெய்வேலியில் உற்பத்தி ஆகும் மின்சாரம் முழுவதும் தமிழகத்திற்கு திருப்பி விடுங்கள் குறைந்தது மக்கள் கொசு கடி இல்லாமல் மின் வெட்டு இல்லாமல் நிம்மதியாக தூங்கலாம்
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
23-நவ-201212:00:54 IST Report Abuse
Pugazh V சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழலாம். நம் முதல்வர், சுப்ரீம் கோர்ட் போவதற்கு பதில், கர்நாடகா முதவரிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் கொண்டு தனது அதிகாரிகளுடன் சென்று நேரில் பேசி ஒரு தீர்மானத்திற்கு வரலாம். நான் இன்னொருவரிடம் அப்பாயின்ட்மென்ட் கேட்பதா என்று இறுமாப்புடன் இருந்தால் ஒன்றும் நடக்காது. இது வரை தண்ணீர் தர மத்திய அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும், கலைஞர் வற்ப்புறுத்த வேண்டும் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லோரும் சொல்லிப் பார்த்தாகிவிட்டது. கோர்ட்டும் நதி நீர் ஆணையமும் சொல்லியாகிவிட்டது. தமிழக பி ஜே பி தலைகள் எங்கே? வேலைக்காகாத விஷயங்களுக்கு வழக்குகள் போடும் சு. சாமி எங்கே? எத்தனை மனு போடுவீர்கள்? முதல்வர், அவர் ஆதரித்த ஜஸ்வந்த் சின்ஹாவிடம் வற்புருத்தலாமே? ஆக்க பூர்வமாக ஏதாவது செய்வாரா? தென் மாநில முதல்வர்கள் மாநாட்டிற்க்கே போகாமல் ஒ. பி யை அனுப்புகிறார்.
Rate this:
Share this comment
Cancel
23-நவ-201210:25:29 IST Report Abuse
விழுப்புரம் ஜீவிதன் கேசு முடிவதற்குள் பயிர் சீசனே முடிந்துவிடும் போலிருக்கு. ஆமா டாஸ்மாக் தண்ணி எல்லாம் உபயோகமாகாதா?
Rate this:
Share this comment
Cancel
jeeva - kuwait,குவைத்
23-நவ-201209:24:21 IST Report Abuse
jeeva இது எப்பவும் நடக்கும் கூத்து தானே,இதனை பார்த்து பார்த்து சலித்து போய்விட்டது எத்தனனையோ மனுக்கள் எத்தனையோ தீர்ப்புக்கள் எல்லாவற்றிலும் தமிழகத்துக்கு தண்ணீர் விடவேண்டும் இதுதான் தீர்ப்பு ,ஆனால் நடப்பது என்ன,அதுக்கு நேரேதிர்மாறாக கர்நாடகம் எப்பவும் நடக்கும் இதுதான் எப்பவுமே நடக்கும் நாடகம், இதிலே என்ன புதிய மனு, இது கொஞ்சம் ஓவரா தெரியலே இதிலே ரெண்டு மாநிலமும் சேர்ந்து நடத்தும் நாடகமோ ன்னு சந்தேகம் தோணுது ,கர்நாடகா ,அவர்களின் மக்களை காப்பாற்றும் நோக்கத்திலே எல்லாமே செய்கிறது பக்கத்துக்கு மாநிலம் எப்படி போனால் என்ன ,என்னமோ நதிகள் அனைத்தும் தங்களுக்குதான் சொந்தம் என கொண்டாடி வருகிறது அதுக்கு நமது மாநில அரசாங்கமும்,துணை போகுதோ ன்னு மிக பலமான சந்தேகம் எழுகிறது, மத்திய அரசாங்கம் ,நமது தமிழகத்தை எப்பவுமே ,மாற்றாந்தாயின் பிள்ளையாகத்தான் நடத்திவருகிறது இதுதான் நாம் கண்கூடாக பார்த்துவருவது காலம் காலாமாக,இதுக்கு எல்லாம் என்னதான் முடிவு ,நமது அரசியல் வாதிகளுக்கு இதனை பத்தி யோசிக்கவோ ,அல்லது மக்களின் நலத்தை பத்தி சிந்திக்கவோ மனம் கிடையாது ,நமது தமிழகத்திலே இருந்து மத்திய அரசாங்கத்திலே அங்கம் வகிக்கும் எந்த அமைச்சர்களுக்கும் ,தமிழகத்தின் நலனிலே அக்கறை இருக்கவே இருக்காது ,அடுத்த ,அண்டை மாநிலத்துக்கு தான் ஆதரவு அளிப்பார்கள் எப்பவுமே ஆனால் தேர்தல் நேரம் வந்துவிட்டால் தமிழகத்துக்கு ஓடோடி வருவார்கள் எல்லாவத்தையும் நாம் தாங்கிக்கொண்டு ,வந்தோரை வாழ வைக்கும் செந்தமிழ் நாடுன்னு பல்லவி பாடிக்கொண்டு நம்மிடம் இருக்கும் அனைத்தும் ,நாங்களும் பகிர்ந்து உண்டு வாழ்வோம்,இதுதான் விருந்தோம்பல் என வீண் பெருமை பேசிக்கொண்டு இருப்போம் ,ஹ்ம்ம்ம் எல்லாம் தமிழகத்துக்கு வந்த சோதனை ,இதையெல்லாம் மாற்ற வேண்டுமென்றால் தேர்தலிலே காட்டுங்கள் இந்த மோசமான அரசியல்வாதிகளை தேர்ந்து எடுக்காமல் நல்லவர்களை தேர்ந்து எடுக்க முயற்சி பண்ணுங்கள் .
Rate this:
Share this comment
Cancel
Ambaiyaar@raja - Nellai to chennai ,இந்தியா
23-நவ-201208:44:33 IST Report Abuse
Ambaiyaar@raja வழக்கு போட்டு போட்டு எந்த பயனும் கிடைக்கபோவதில்லை இதற்க்கு முன்பே பலமுறை கோர்ட் சொல்லியே அவர்கள் கேட்கவில்லை இரக்கமே இல்லாதவர்கள் எனவே நாம் மாற்று வழியை தான் கண்டறியவேண்டும். காவேரி ஆற்றில் நாம் வேறுஒரு அணையினை கட்ட முடியுமா என்பதை ஆய்வு செய்யலாம் அது எந்த இடம் என்று கண்டுபிடித்து அதில் நீரை கொஞ்சமாவது சேமிக்கலாம். பொதுவாக பவானி, அமராவதி, அணைகள் நிரம்பினால் அதில் இருந்து திறக்கப்படும் நீர் முழுவதும் கடலில் தான் கலக்கின்றது வீணாகிறது எனவே கரூரை தாண்டியபின் அந்த அணையை காவிரியில் கட்ட முடியுமா என்று ஆய்வு செய்யவேண்டும். இங்கு என்ன காமராஜரா முதல்வராக உள்ளார் அப்படி உடனே செய்வதற்கு.
Rate this:
Share this comment
Cancel
Sami - கோவை,இந்தியா
23-நவ-201206:16:46 IST Report Abuse
Sami என்னது தமிழகத்துக்கு தண்ணீர் தரணுமா?. யாரு அவங்க?. தமிழகம் நம்ம நாட்டை சேர்ந்தது இல்லையே. அப்புறம் எதுக்கு கொடுக்கணும். அப்படி கொடுத்துட்டா அவங்க வளர்ந்திடுவாங்களே. அப்படியெல்லாம் சொல்லக்கூடாது. தண்ணீர் நம்மளுக்கு மட்டுமே. யாரு சொன்னாலும் கேட்க மாட்டோம். போயி ஊழல் பண்ணறது எப்படி என்று யோசிங்க. அதைவிட்டு எங்களுக்கு புத்தி சொல்லிட்டு....இப்படிக்கு கர்நாடகம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்