24 thousand people work in the same year, natraj information | 24 ஆயிரம் பேருக்கு வேலை தேர்வாணய தலைவர் தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

24 ஆயிரம் பேருக்கு வேலை தேர்வாணய தலைவர் தகவல்

Updated : நவ 24, 2012 | Added : நவ 22, 2012 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 24 ஆயிரம் பேருக்கு வேலை தேர்வாணய தலைவர் தகவல்

சென்னை:""இந்தாண்டு இறுதிக்குள், 24 ஆயிரம் பேர் பணியமர்த்தப்பட உள்ளனர்,'' என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நட்ராஜ் கூறினார்.சென்னை பல்கலைக்கழக, மேலாண்மை கல்வி துறை சார்பில், "மனித வள மேலாண்மை தற்போதைய முன்னேற்றம்' குறித்த கருத்தரங்கம், மயிலாப்பூரில் உள்ள சவேரா ஓட்டலில் நடந்தது. கருத்தரங்கை துவக்கி வைத்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் நட்ராஜ் பேசியதாவது:

மனித வளத்தை மேம்படுத்தும் வகையில், நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஆனால், நிறுவனங்களில் உள்ள மனித வள மேம்பாட்டு அலுவலர்கள், ஊழியர்களின் குறைகளை மட்டும் கூறுபவர்களாக உள்ளனர். புதிதாக சிந்திப்பவர்களாகவும், வேலை பார்ப்பவர்களோடு சேர்ந்து, குழுவாகவும் செயல்படுவதில்லை. அனைத்து துறைகளில் இருக்கும் மனித வள அதிகாரிகள் மிக திறமையுடன் செயல்படுவர்களாக இருக்கும் பட்சத்தில், வேலை பார்ப்பவர்களும் தங்களுடைய பொறுப்பை உணர்ந்து செயல்படுவர்.

செப்டம்பர், 30ம் தேதி நடைபெற்ற வி.ஏ.ஓ., தேர்வு முடிவுகள், இம்மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும். குரூப்-2 தேர்வு வினாத்தாள் வெளியானதால், நவ., 4ல் மறுதேர்வு நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகள், வரும் டிச., 15க்குள் வெளியிடப்படும்.

அரசு பணியாளர் தேர்வாணைய வரலாற்றில் முதன் முறையாக, ஓராண்டுக்குள், 24,400 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர். குரூப்-1 காலி பணியிடங்கள் எண்ணிக்கை குறித்த விவரங்களை, அரசு துறைகளிடம் கேட்டுள்ளோம். அவர்கள் தரும் பட்சத்தில், காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு, நட்ராஜ் பேசினார்.நிகழ்ச்சியில், உயர் கல்வி துறை செயலர் ஸ்ரீதர், சென்னை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) கோடீஸ்வர பிரசாத், பேராசிரியர்கள், மாணவர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
HMT .ANSARI - Dubai,இந்தியா
24-நவ-201200:55:55 IST Report Abuse
HMT .ANSARI உயர் திரு தினமலர் ஆசிரியர் அய்யா அவர்களுக்கு வணக்கம் இதைப்போல நல்ல விசயங்களை தாங்கள் தெரியப்படுத்துங்கள் ,என்னிடமும் மக்களுக்கு பயன் தரும் நல்ல நல்ல,ப்ரோஜெக்ட்ஸ் தொழில்கள் இருக்கின்றன தாங்கள் டி.என்.பி.எஸ்.சி.தலைவர் திரு.நடராஜ் அவர்களுக்கு என் ஈமெயில் முகவரியை தாங்கள் கொடுக்கவும். businessansari@gmail .கம நன்றி தினமலர் ஆசிரியர் அய்யா .
Rate this:
Share this comment
Cancel
C.jeyakumaar - Tenkasi,இந்தியா
23-நவ-201217:19:15 IST Report Abuse
C.jeyakumaar Congratulation sir.you are a gentleman.
Rate this:
Share this comment
Cancel
sivakumar - Pattukkottai,இந்தியா
23-நவ-201215:44:11 IST Report Abuse
sivakumar பட்டதாரிகளுக்கு நல்ல வாய்ப்பு
Rate this:
Share this comment
Cancel
சாமிநாதன் - மும்பை,இந்தியா
23-நவ-201213:07:17 IST Report Abuse
சாமிநாதன் தமிழகத்தில் வேலையில்லா திண்டாடும் இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாகும், டி.என்.பி.எஸ்.சி.தலைவர் திரு.நடராஜ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
அழகர் சாமீ - tiruchi,இந்தியா
23-நவ-201213:02:52 IST Report Abuse
அழகர் சாமீ சத்துணவு பரிச்சை நடத்தப்படுமா டி.என்.பி. சி . எப்போ
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
23-நவ-201210:59:42 IST Report Abuse
N.Purushothaman அரசில் உள்ள அணைத்து துறையும் செவ்வனே செயல்பட இது போன்ற நேர்மையான தேர்வுமுறை கண்டிப்பாக அவசியம்....தேர்ந்தேடுக்கபடுபவர்கள் நேர்மையாகவும் புத்திசாலித்தனத்துடன் நடந்து கொண்டாலே அரசுத்துறை அரசு வேலை ஜொலிக்கும்......
Rate this:
Share this comment
Cancel
saminathan - sankagiri,இந்தியா
23-நவ-201208:35:22 IST Report Abuse
saminathan வாழ்த்துகள் சார் . இது போல பல callfor வெளீட்டு இளனர்களை தேர்வு செய்து அரசு நிர்வாகத்தில் புதுமைகளை புகுத்துங்கள்
Rate this:
Share this comment
Cancel
Ambaiyaar@raja - Nellai to chennai ,இந்தியா
23-நவ-201207:32:52 IST Report Abuse
Ambaiyaar@raja சொல்லி கொண்டு தான் இருக்கின்றார்கள் என்று தான் அதை செய்யபோகிரார்களோ. செய்தால் சரிதான்
Rate this:
Share this comment
Cancel
saran - gingee,இந்தியா
23-நவ-201206:50:21 IST Report Abuse
saran sir please also release physical director posting list. we waiting more than 3 years. wrote the exam on 2009 and atte n ded the interview on 2010 but still tnpsc not release the final s e l e c tion list . 43 colleges in tamilnadu running without physical director for past 3 years
Rate this:
Share this comment
Cancel
T R Radhakrishnan - Nagpur,இந்தியா
23-நவ-201206:08:24 IST Report Abuse
T R Radhakrishnan ஐயா நடராஜ் அவர்களே, உங்கள் பேச்சின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கு. நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஊழியர்களாவது, மக்களுக்கு, பதவியில் இருக்கும் அரசுக்கு விசுவாசம் இருப்பவர்களாய் தேர்ந்தெடுங்கள். தற்போது அரசு பதவியில் இருப்போரில் பெரும்பாலோர் தி.மு.க. வின் அராஜக, ஊழல் செயலுக்கு துணை போகும் முகவர்களாகவே செயல் படுகின்றனர். அரசு ஊழியர்களின் ஆதரவு காரணமாகவே, தி.மு.க.வினரின் ஊழல்களை நீதிமன்றத்தில் நிரூபணம் செய்வது கடினமாய் உள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை