பொள்ளாச்சி:ஊராட்சிகளில், மேற்கொள்ளப்படும் பசுமை வீடுகள் கட்டுமான பணியை வரும் 30ம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என, அதிகாரிகள், பயனாளிகளுக்கு இறுதிக்கெடு விதித்துள்ளனர். பணியை நிறைவு செய்த வீடுகளுக்கு மட்டும் சோலார் இணைப்பு வழங்கப்படும் என, கிடுக்கிப்பிடி போட்டுள்ளதால் பயனாளிகள் தவிப்புக்குள்ளாகின்றனர்.
கிராமங்களில், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு, மாநில அரசு சார்பில் 300 சதுர அடியில், 1.80 லட்சம் ரூபாய் மதிப்பில், சூரிய ஒளிசக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டப்படுகின்றன. பொள்ளாச்சி தாலுகாவில், வடக்கு, தெற்கு, ஆனைமலை, கிணத்துக்கடவு ஒன்றியங்களுக்குட்பட்டுள்ள 118 ஊராட்சிகளில், கடந்த 2011-12ம் ஆண்டு தலா 125 முதல் 175 வீடுகள் வரை தேர்வு öŒ#து கட்டப்பட்டு வருகிறது.இதில், பல வீடுகள் கட்டுமான பொருட்களின் விலையேற்றம் காரணமாக அஸ்திவாரத்துடனும், கூரை மட்டதுடன் நிற்கின்றன. பணிகளின் நிலை குறித்து ஒவ்வொரு முறை மாவட்ட நிர்வாகம் அறிக்கை கேட்கும் போதும், இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை, பயனாளிகளிடம் வீடுகள் ஒப்படைக்காததால், பிற மாவட்ட அதிகாரிகள் கொண்டு ஒவ்வொரு ஒன்றியத்திலும், கட்டுமான பணிகளின் நிலை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க அரசு உத்தரவிட்டது.கோவை மாவட்டத்துக்குட்பட்ட ஒன்றியங்களில், திருப்பூர் ஊரக வளர்ச்சி திட்ட முகாமை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, மூன்று நாட்கள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு குறித்த அறிக்கை அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்தாண்டு நிர்ணயிக்கப்பட்ட பசுமை வீடுகளுக்கு, சோலார் இணைப்பு வழங்க ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து வரும் இக்குழுவினர், அடுத்த மாதம் முதல் வீடுகளுக்கு இணைப்பு வழங்கவுள்ளனர்.
பல மாவட்டங்களில், சோலார் இணைப்பு வழங்க சென்ற இக்குழுவினர் அனைத்து பணிகளும் நிறைவு செய்தால் மட்டுமே இணைப்பு வழங்கப்படும் என, கெடுபிடியாக தெரிவித்து விடுகின்றனர். பணிகள் நிறைவு செய்யாத வீடுகள் என மாநில அரசுக்கும் அறிக்கை சமர்ப்பிக்கின்றனர். அதிகாரிகளின் கிடுக்கிப்பிடியால், திணறும் அதிகாரிகளுக்கு பணியை நிறைவு செய்ய பயனாளிகளுக்கு நெருக்கடி கொடுப்பதால், தவிப்புக்குள்ளாகின்றனர். கடந்தாண்டு துவங்கப்பட்ட பசுமை வீடுகளை, இம்மாதம் 30ம் தேதிக்குள் நிறைவு செய்ய வேண்டும் என, இறுதிக்கெடு விதித்துள்ளனர். ஊராட்சி நிர்வாகமும் பணியை வேகப்படுத்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், "பசுமை வீடுகள் குறித்த ஒவ்வொரு நிலையையும் அரசுக்கு தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணிகளின் நிலை குறித்து போட்டோ எடுத்து ஆவணங்கள் சமர்ப்பிக்க அறிவுறுத்தியுள்ளதால், கூடுதல் கெடுபிடியாகியுள்ளது. பயனாளிகளும் அதற்கேற்ப பணிகளை வேகப்படுத்தினால் மட்டுமே நிர்ணயித்த இலக்கை எட்ட முடியும். பணிக்கு தேவையாகன சிமென்ட், கம்பி, கதவு, ஜன்னல் ஆகியவை ஒன்றிய அலுவலகத்தில் தயார் நிலையில் உள்ளது. ஒவ்வொரு கட்ட பணிகளுக்கான ஆவணம் சமர்பித்தால் உடனடியாக மானிய விலையில் பொருட்கள் வழங்கப்படும்,'' என்றனர்.
"மானியம் கிடைக்கலை':பசுமை வீடுகளில் சோலார் விளக்கு அமைப்பதற்கு ஒரு வீட்டுக்கான மானிய தொகையாக 30 ஆயிரம் ரூபாய் ஒதுக்கப்படுகிறது. இதை எரிசக்தி முகமைக்கு அரசு செலுத்தி விடுகிறது. மீதமுள்ள 1.50 லட்சம் ரூபாய் நான்கு கட்டங்களாக வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு நிலை பணியை நிறைவு செய்து சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் சரிபார்த்தபின், பயனாளிகளுக்கு மானியம் ஒதுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், பல ஊராட்சிகளில், பயனாளிகளுக்கு மானியம் சரிவர கிடைக்கவில்லை என, ஊராட்சி தலைவர்களும் புகார் தெரிவிக்கின்றனர். இதனால், பணமின்றி கட்டுமான பணியை பாதியில் நிறுத்துகின்றனர். "அதிகாரிகள் மானியத்தை வழங்கினால், பணியில் வேகம் இருக்கும்' என்கின்றனர் பயனாளிகள். "இப்பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.