Advertisement
நிர்வாக சீர்கேடுகளால் செம்மொழி நிறுவன பணிகள் தேக்கம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2012,23:24 IST

நிர்வாக சீர்கேடுகளால், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின், தமிழ் மொழி வளர்ச்சி பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதற்கு தீர்வை எட்ட, முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழ் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.செம்மொழி தமிழாய்வை வளர்க்கும் நோக்கதோடு, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், சென்னையில், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை, 2007ம் ஆண்டு நிறுவியது.

ஐம்பெருங்குழு:கி.பி.600க்கு முந்தைய காலத்தை, செவ்வியல் காலமாக கொண்டு, பண்டைய தமிழ் சமூகம் பற்றிய தகவல்களை, ஆவணப்படுத்துவதையும், பாதுகாப்பதையும், இந்நிறுவனம் செய்து வருகிறது. மனிதவள மேம்பாட்டு அமைச்சக நிறுவனத்தின் திட்டங்களையும், செயல்பாடுகளையும் நடைமுறைப்படுத்த, "ஐம்பெருங்குழு, எண்பேராயம்' அடங்கிய உயர்நிலை குழுவை அமைத்துள்ளது.பல்துறை சார்ந்த அறிஞர்களை ஒருங்கிணைத்து, தமிழின் தொன்மை குறித்து ஆய்வு செய்தல், தமிழ் பிற திராவிட மொழிகள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து விரிவாக ஆராய்தல், பண்டைய தமிழ் இலக்கணம், இலக்கியம், தொல்லியல் சார்ந்த செய்திகளை குறும்படங்களாக உருவாக்குதல் ஆகிய பணிகளை, இந்நிறுவனம் செய்யவேண்டும்.

பன்னாட்டு அறிஞர்:@மலும், இணையவழி செம்மொழி தமிழ் கற்பித்தல், உலக அளவில் ஆய்வு களங்களை உருவாக்கி, பன்னாட்டு அறிஞர்களை ஆய்வில் ஈடுபடுத்துதல், பழந்தமிழ் நூல்களை ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளிலும், மொழி பெயர்த்து வெளியிட நிதி வழங்குதல் உள்ளிட்ட பணிகளையும், இந்நிறுவனம் @மற்கொள்ள வரையறை செய்யப்பட்டது. ஆனால், ‌‌செம்மொழி நிறுவன நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள சீர்கேடுகளால், தமிழ் மொழி வளர்ச்சி பணிகள் கிடப்பில் @பாடப்பட்டுள்ளதாக, தமிழ் ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அறிஞர்கள் இல்லை:இதுகுறித்து, தமிழ் ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுவதாவது:செம்மொழி நிறுவனம் துவங்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளாகியும், இரண்டு கட்டுரைகள், ஏழு புத்தகங்கள் மட்டுமே, வெளியாகியுள்ளன. சரியான ஆய்வு அறிஞர்கள் இல்லாத காரணத்தால், செவ்வியல் நூல்களின் சொல்லடைவு, செவ்வியல் நூல்களின் செம்பதிப்பு, செவ்வியல் நூல்களின் தொடரடைவு உள்ளிட்ட பணிகளில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.செம்மொழி நிறுவன செயல்பாடுகள் அடங்கிய செய்தி மடல், ஓராண்டாக வெளிவரவில்லை. ஆய்வு திட்ட அறிக்கைக்கு கொடுக்கப்படும் தொகை, பயிலரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்டவற்றை நடத்துவதற்கு கொடுக்கப்படும் தொகையும் குறைக்கப்பட்டு உள்ளது.

செயல்பாடுகள் குறைந்த காரணத்தால், செம்மொழி நிறுவனத்தின் திட்டத்திற்கும், செயல்பாட்டிற்கும், மத்திய அரசு தந்த, பல கோடி ரூபாய் நிதி, செலவழிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டது.செம்மொழி தமிழாய்வில், குறிப்பிடத்தக்க பங்களிப்பு தந்தோருக்கு, இரண்டாண்டுகளாக விருதுகள் வழங்கப்படவில்லை. ஆய்வு அறிஞர், முதுநிலை ஆய்வு அறிஞர் உள்ளிட்டோர், நிறுவன வேலைகளில் ஈடுபடாமல், தங்களுடைய புத்தகம் வெளியிடுதல், இதழ்கள் நடத்துதல் என, சொந்த வேலைகளை மேற்கொள்கின்றனர்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

பயிலரங்கம்:இதுகுறித்து, செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவன இயக்குனர் ஞானமூர்த்தி கூறியதாவது:செம்மொழி நிறுவன செய்தி மடல், தற்காலிகமாக தான் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. அவ்வப்போது, நூல்களை வெளியிடுகிறோம். நிறுவனம் சார்பில் நடக்கும் பயிலரங்கம், கருத்தரங்குகளுக்கு வழங்கும் தொகை முறைப்படுத்தப்பட்டு உள்ளது.
இத்தொகையை, முழுமையாக பயன்படுத்த முடியாமல், 10 சதவீதம் தொகையை நிகழ்ச்சி நடத்துவோர், திருப்பிக் கொடுக்கின்றனர்.

ஆறு மாதங்களுக்கு முன், விருதுக்கான அறிஞர்கள் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டு, அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அரசு பதிலளிக்கும் பட்சத்தில், விருதுகள் வழங்கப்படும்.இவ்வாறு, ஞானமூர்த்தி கூறினார்.செம்மொழி நிறுவனத்திற்கு, மாநில முதல்வர் என்ற முறையில், தலைவர் பொறுப்பில் உள்ள, தமிழக முதல்வர் ஜெயலலிதா, நிர்வாக சீர்கேடுகளை களைந்து, செம்மொழி நிறுவன மறுமலர்ச்சி பணிகளை ஆற்ற உதவ வேண்டும் என, தமிழ் ஆர்வலர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

- நமது சிறப்பு நிருபர் -




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (10)
தமிழவேல் - சென்னை,இந்தியா
24-நவ-201202:27:09 IST Report Abuse
தமிழவேல் புது தலைமை செயலகம், புது நூலகம், புது பூங்கா என கிடப்புகளில் இதுவும் ஒன்று .. இது உங்களுக்கு ஆச்சரியம் தருகின்றதா ? தவறு தாத்தா மேல்தான் பிள்ளைகளா ... மக்கள் வரி பணத்தை எப்படி எல்லாம் வீனாக்கலாமேன்று சொல்லித்தரவேண்டிய அவசியமில்லை...
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
giri srinivasan - CHENNAI,இந்தியா
24-நவ-201201:30:59 IST Report Abuse
giri srinivasan இங்கதான் கலைஞர் ஆட்சியில் செய்த எல்லாமே பயனற்று கிடக்கின்றன மொழியும் சேர்த்துதான் ....எந்த ஒரு நாட்டிலும் நடக்காத ஒன்று.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
தமிழன் - ஸ்டாம்போர்ட்,யூ.எஸ்.ஏ
23-நவ-201221:14:04 IST Report Abuse
தமிழன் கன்னடர்களிடம் தமிழை வளர்ப்பதை எதிர்பார்க்க முடியாது. என்ன செய்வது தமிழர்களின் தலைஎழுத்து
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
BALASUBRAMANIAN S - COIMBATORE,இந்தியா
23-நவ-201214:26:53 IST Report Abuse
BALASUBRAMANIAN S தண்ட கருமாந்திர துறை..
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
சு. ராசேந்திரன் - Chennai,இந்தியா
23-நவ-201212:58:11 IST Report Abuse
சு. ராசேந்திரன் செம்மொழி நிறுவனப் பணிகள் தேக்கம் என்று முழக்கம் செய்பவர்கள் வேறு யாருமில்லை. அந்நிறுவனத்தில் பணிபுரிபவர்கள்தான் என்பதால் இது நிறுவனத்தின் உள்பிரச்சினை என்பது தெளிவு. சேற்றை யார் முகத்தில் தெளிப்பது எனத் தெரியாமல் தங்கள் முகத்திலேயே இவர்கள் பூசிகொண்ட கதைதான் இது.
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
23-நவ-201210:49:38 IST Report Abuse
வில்லுபுரம் ஜீவிதன் முதலில் மாணவர்களிடம் நல்ல தமிழ் புலமையை ஏற்படுத்தவேண்டும். அடுத்து, எந்த ஒரு கட்சியின் மீதும் பற்று அற்ற, நடு நிலை நோக்கம் கொண்ட தமிழ் புலமை பெற்றவர்களையும் உருவாக்கவேண்டும். இது நம் தமிழ்நாட்டில் முடியாத காரியம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
காசிமணி பாஸ்கரன் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
23-நவ-201209:32:14 IST Report Abuse
காசிமணி பாஸ்கரன் செம்மொழியாம் தமிழ் மொழி இந்த கழகங்களிடம் படும் பாடு சொல்லி மாளாது.. அவர்களுக்கு ஆதாயம் இல்லை என்றால் தமிழை என்ன யாரை வேண்டுமானாலும் கண்டம் செய்து விடுவார்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
சி்.சின்னக்கருப்பன் - சிரங்காட்டுப்பட்டி.நத்தம்வட்டம்திண்டுக்கல்மாவட்டம்.,இந்தியா
23-நவ-201209:04:42 IST Report Abuse
சி்.சின்னக்கருப்பன் ஆங்கில மீடியத்தில் படிக்கும் மாணவர்கள் தமிழில் வாசிக்க எழுத தத்தளிக்கிறார்கள்.தற்போது அரசுப்பள்ளிகளிலும் ஆரம்பமுதலே ஆங்கிலவழி கல்வி என்பது தமிழையே ஒழிப்பதுபோல்தான் உள்ளது. எனவே தயவு செய்து ஐந்தாம் வகுப்பு வரை கட்டாயம் தமிழ் வழி கல்வி கொடுத்தால் தமிழ் வாழும். கலைஞர் தமிழ் தமிழ் என்று ஊருக்குதான் உபதேசம் செய்தார். நான் எப்போதும் அ.தி.மு.க. அனுதாபிதான் அதற்காக தமிழை தாரைவார்துவிண்டு வாழ நினைக்கவில்லை. இங்குள்ள அ.தி.மு.க. வினரின் நினைவும் இதுதான். மேலும் செந்தமிழ் ஆய்வு நிறுவனம் செயல்படவில்லை என்பது நெஞ்சில் வேல் பாய்சியது போல் உள்ளது. தமிழக முதல்வர் அவர்கள் இதை கவனிக்க வேண்டும். தான் தமிழகத்தின் முதல்வர் என்பதை மறந்து விட வேண்டாம்.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
thangai raja - dammam,சவுதி அரேபியா
23-நவ-201208:07:07 IST Report Abuse
thangai raja செம்மொழின்னா என்னாங்க.....ஓ....அந்த கருணாநிதியோட மொழியா....? அதைத்தான் நாங்க ஆட்சிக்கு வந்ததுமே ஒழிச்சு கட்டிட்டோமே....இப்ப யாரு அதை கிளருறது.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
கோவிந்த் - தில்லி,இந்தியா
23-நவ-201203:42:10 IST Report Abuse
கோவிந்த் இந்த திமுகவும் அதிமுக ஒன்றுக்கும் லாயக்கில்லாதவர்கள் என்பதை தான் நமக்கு இது வலயுருத்துகிறது. வெறும் வாய் பேச்சு வாய் சவடால் கவர்ச்சிகரமான அறிவுப்புகள். வெறும் குப்பை !
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.