E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2012,02:37 IST
கருத்துகள் (1)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

மேட்டூர்:மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்து விட்டதால், வறண்ட நிலப்பரப்பில் பயிர் சாகுபடி செய்வதற்காக, விவசாயிகள், கிணற்றில் டீஸல் இன்ஜின் பொருத்துவதால், பழைய டீஸல் இன்ஜின்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அணை, 152 சதுர கி.மீ., நீரப்பரப்பு பகுதியை கொண்டது. அணையின் நீர்மட்டம் குறையும் போது, சேலம், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அணை கரையோர விவசாயிகள், வறண்ட நிலப்பரப்பில் எள், கடலை, மிளகாய், பருத்தி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்வர்.
சில ஆண்டுகளாக மேட்டூர் அணை நீர்மட்டம், 80 அடிக்கு மேல் நீடித்ததால் பெரும்பாலான விவசாயிகளால் மேட்டூர் அணை நீர்பரப்பு பகுதியில் பயிர் சாகுபடி செய்ய முடியவில்லை. மேட்டூர் அணை நீர்மட்டம் ஐந்தாண்டுக்கு பின்

வெகுவாக குறைந்துள்ளது. நேற்று நீர்மட்டம், 54அடியாகவும், நீர் இருப்பு, 20 டி.எம்.சி.,யாகவும் குறைந்ததால் அணையில் நீர் தேங்கியிருந்த, 100 சதுர கி.மீ., நீர்பரப்பு பகுதி வறண்டு விட்டது.

பருவமழை தீவிரம் அடைந்து, அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க மேலும் சில மாதம் ஆகும் என்பதால், கரையோர விவசாயிகள் அணையின் உட்பகுதியில், 15 ஆயிரம் ஏக்கர்நிலப்பரப்பில் பயிர் சாகுபடி செய்வதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அணை நீர்மட்டம் குறைந்து விட்டதால் தற்போது நீரில் மூழ்கியிருந்த கிணறுகள் அனைத்தும் வெளியில் தெரிகிறது.

சாகுபடி செய்யும் பயிர்களுக்கு தொடர்ந்து மூன்றுமாதம் நீர்பாசனம் செய்வதற்காக கிணறுகளில் விவசாயிகள் டீஸல் இன்ஜின்

Advertisement

பொருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அணை நீர்பரப்பு பகுதியில், 200க்கும் மேற்பட்ட கிணறுகள் உள்ளன. அனைத்து கிணறுகளிலும் விவசாயிகள் டீஸல் இன்ஜின் பொருத்துகின்றனர்.மூன்று மாதம் மட்டுமே உபயோகிக்க முடியும் என்பதால் அதிக விலை கொடுத்து புதிய டீஸல் இன்ஜின் வாங்க விவசாயிகள் தயங்குகின்றனர்.

அதற்கு பதிலாக பழையடீஸல் இன்ஜின்களை விலைக்கு வாங்கியோ அல்லது பிற விவசாயிகளிடம் மூன்று மாதத்துக்கு மட்டும் வாடகைக்கு வாங்கியோ பொருத்துகின்றனர்.

இதில், எட்டு குதிரை திறன் கொண்ட டீஸல் இன்ஜின்களை மூன்று மாதத்துக்கு, 4,500 ரூபாய்க்கும், ஆறு குதிரை திறன் இன்ஜின்களை, 2,500 ரூபாய்க்கும் வாடகைக்கு வாங்கி விவசாயிகள் பொருத்துகின்றனர்.
இதனால், மேட்டூர் அணை கரையோரம் பழைய டீஸல் இன்ஜின்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JAYACHANDRAN - TANJORE,இந்தியா
23-நவ-201208:32:55 IST Report Abuse
JAYACHANDRAN நிலைமை இன்னும் மோசமாகப்போகிறது. பருவம் தவறிவிட்டது. மேட்டுர் நீர் 30 நாள் முன்னரே வந்திருந்தால் நாத்து நட்டு ஓரளவு வளர்ந்திருக்கும் பயிர் நாளாகியிருக்கும். நிலம் புயல் மழையால் பாதிப்பு வந்திருக்காது. இப்போது டிசம்பர் கடைசியிலிருந்து பிப்ரவரி வரை பால் கதிராக இருக்கும் பயிரை காப்பாற்ற பகீரத பிரயத்தனம் செய்ய போகிறார்கள். சுப்ரிம் கோர்ட்டை மட்டும் நம்பியே.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.