Advertisement
பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2012,03:27 IST
கருத்துகள் (91)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

சென்னை: பொங்கலுக்கு மஞ்சக்குலை வாங்கிட்டு வருவது போல் இப்போது சாலையில் செல்வோர் கையில் எல்லாம் கொசுவை அடிக்கும் எலக்ட்ரிக்பேட் வாங்கிட்டு போவதை பார்க்க முடிகிறது. அப்பா எனக்கு ஆபீஸ் முடிந்து வரும் போது முருகன் பேரில் உள்ள பவனில் சில்லி புரோட்டா வாங்கிட்டு வாங்கப்பா என்று சொல்வது போல செல்லக்குழந்தைகள் இப்போது, அப்பா ., அப்பா., கொசு அடிக்கிற பேட் வாங்கிட்டு வாங்கப்பா,. இந்த முறை எனக்கு முகத்திற்கு கீரீம் வேண்டாம்., கொசு கடிக்காத ஆயின்ட்மென்ட் வாங்கிட்டு வாங்கப்பா என்று எல்லா மொபைல்போனிலும் இந்த குரல் மட்டுமே ஒலிக்கிறது.

விளையாட்டுக்கும் சிரிப்புக்கும் சொன்ன இந்த கொசுத்தொல்லை தாங்க முடியலைப்பா என்ற வாசகம் இப்போது அனைவரையும் உள்ளார பாதித்த குமுறலாக ஒலிக்கிறது. ஆனால் மாநில அரசு எந்தவொரு நடவடிக்கையிலும் இறங்காமல் யாருக்கு கடித்தால் எனக்கென்ன என எந்தவொரு நடவடிக்கையிலும் இறங்காமல் இருப்பதுதான் வேதனையான விஷயம். சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் அலுவலர்கள் என ஏ.சி., அறையில் தூங்கும் அதிகாரிகள் கொசுக்கடியில் இருந்து தப்பித்து விடுகின்றனர் என்பதே இதற்கான உண்மை.

காய்ச்சல் வந்தது இறந்து விட்டார்:
இந்தியா முழுவதும் டெங்கு காய்ச்சல் பீதி நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. டில்லியில் மட்டும் 400 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் டெங்கு ஒழிப்புக்கான ஆலோசனை கூட்டம் நடந்தாலும் எவ்வித சீரிய நடவடிக்கையும் சொல்லும்படியாக இல்லை. தமிழகத்தில்

டெங்கு காய்ச்சல் பரவலாக பல்வேறு மாவட்டங்களில் பெருகி வருகிறது. காய்ச்சல் வந்தது இறந்து விட்டார் என்று பல சாவுகள் அதிகரித்து வருகிறது. மதுரை மாவட்டம் மேலூர் தாலுகாவில் மட்டும் இதுவரை 44 பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக இறந்திருக்கின்றனர். இது அதிகாரப்பூர்வமானது ஆனால் வெளியே வராத சாவுகளும் உண்டு. தமிழகத்தில் இது வரை 400 க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கக்கூடும் என்று அதிகாரப்பூர்வமற்ற ஒரு தகவல் தெரிவிக்கிறது. எப்படியும் ஒரு தொகுதிக்கு தலா 2 பேர் வைத்தாலும் ( 234 எம்.எல்.ஏ.,க்கள் ) 468 பேர் இறந்திருக்கலாம்.

பொது இடங்களில் ஆட வைத்த கொசு: குறிப்பாக தற்போது சுகாதாரம் என்ன விலை என்ற கேள்வி எழுந்துள்ளன. இதனால் கொசுக்கள் இனப்பெருக்கம் பல மடங்காக பெருகிஉள்ளது.மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கழிவுநீர் பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. ஆளும் கட்சியை சேர்ந்தவர்களே மாநகராட்சியை ஆட்சி செய்துவந்தும் முறையான செயல்பாடு இருப்பதாக இல்லை. குடி நீர் கேட்டு மறியல் செய்த காலம் போய் தற்போது மின்வெட்டு கண்டித்து ஆங்காங்கே மறியல் நடக்க துவங்கியிருக்கிறது.கொசு ஒழிப்புக்கென போராட வேண்டிய நிலையில் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். முக்கிய வீதிகளில் கொசுக்கள் கூட்டம் கூட்டமாக ஆயத் துவங்கியிருக்கிறது. சாலையில் நிற்கும் மனிதர்கள் யாரும் அசையாமல் நிற்க முடியாத அளவிற்கு கொசுக்கள் விரட்டி , விரட்டி கடித்து வருகிறது. அனைவரும் கை, கால்களை ஆட்டியபடியே தான் நிற்க முடிகிறது. அப்போது அவர்கள் உச்சரிக்கும் வார்த்தை கொசுத்தொல்லை தாங்க முடியலைப்பா., என்பதே.

Advertisement

இந்த புலப்பம் அரசுக்கோ, அதிகாரிகளுக்கோ கேட்காமல் இருப்பதுதான் வேதனையின் உச்சம்.இரவு நேரத்தில் யாரும் நிம்மதியாக தூங்க முடியாத அளவிற்கு கொசுக்கள் லட்சம், லட்சமாக பெருகி நிற்கிறது. மின்சாரம் போகும்போது உறக்கம் கலைந்தாலும் கொசுக்கள் வேறு கடித்து மக்களின் வேதனையை அதிகரிக்க செய்கிறது. இதற்கெல்லாம் அரசு தரப்பில் எடுத்த நடவடிக்கை ஏதாவது உண்டா என்றால் அது பூஜ்யமாகத்தான் இருக்கும்.

அமைச்சர் டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர் விஜய்., : கடந்த தி.மு.க., காலத்தில் மின்சாரம் துண்டிக்கும்போது அமைச்சர்ஆற்காட்டுக்கு விழுந்த அர்ச்சனைகள் இப்போது சுகாதாரத்துறை அமைச்சருக்கு இல்லாமல் போகிறது. காரணம் எந்த துறைக்கு எந்த அமைச்சர் என்றே மக்களுக்கு தெரியாமல் போனதே காரணம். தற்போதைய சுகாதார துறை அமைச்சர் டாக்டர்ர்ர்ர்ர்ர்ர்ர் விஜய்., ஆனால் இவர் சார்பில் கொசு ஒழிப்பு தொடர்பாக சொல்லும்படியாக எந்தவொரு ஆலோசனையும் நடக்கவில்லை. பிறகு நடவடிக்கை எந்த அளவிற்கு இருக்கும் என்பது மக்களுக்கு தெரியாதா என்ன..,


பயங்கரவாதிகள் ஒழிப்புக்கு பல ஆயிரம் கோடி செலவழிக்கும் மத்திய அரசு போல கொசுக்கள் ஒழிப்புக்கு மாநில அரசு உரிய நடவடிக்கையில் இறங்கும்காலம் இது. இதனை தவிர்க்கும் போது யாரையும் நிம்மதியாக வாழ விடாமல் ஆக்கிவிடும் இந்த சின்னஞ்சிறு கொசு. மனித இறப்புகளும் நாளுக்குநாள் அதிகரிக்கும். எனவே போர்க்கால நடவடிக்கையாக கொசு ஒழிப்பு நடவடிக்கையில் மாநில சுகாதாரத்துறை களம் இறங்க வேண்டும் என கொசுத்தொல்லையால் அவதிப்பபடும் மக்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (91)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
senthilnathan - ramanathapuram,இந்தியா
24-நவ-201200:33:33 IST Report Abuse
senthilnathan கொசுவை விரட்ட மூன்று வழிகள்! எனக்குக் கிடைத்த தகவலை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் எனக்குப் பெருமகிழ்ச்சி. கொசுக்களை விரட்ட, விலை குறைவான, அனைவராலும் கடைப்பிடிக்கக் கூடிய வழிகள் ஒன்றல்ல, மூன்று சொல்லப் போகிறேன், கவனியுங்கள்! வீட்டில் அனேகமாக சூடம் (கற்பூரம்) இருக்குமல்லவா? அதில் இரண்டு பில்லைகளை எடுத்துக் கொள்ளுங்கள்: muதல் வழி: வீட்டில் கொசு மேட் வைக்கும் கருவி இருந்தால் அதனுள் அந்த இரண்டு சூட பில்லைகளை உள்ளே வைத்து ’பிளக்’கில் சொருகிவிடுங்கள். இதைக் காலையிலும், மாலையிலும் ஒரு மணி நேரம் மட்டும் செய்தால்...கொசு போயே போச்சே அடுத்தது: கற்பூர பில்லைகளை (அந்துருண்டை போல) அறையில் கொசு அடையும் இடங்களில் போட்டுவைத்தால் அந்த வாசனைக்குக் கொசு வாராது. மூன்றாவதாக, (அறையின் அளவைப் பொறுத்து) ஒரு தட்டில் நீர் நிரப்பி, அதில் இரண்டு சூட பில்லைகளைப் போட்டு வையுங்கள். தண்ணீர் ஆவியாகும் போது, கற்பூர வாசனை அறை எங்கும் பரவும். அறையும் மணக்கும், கொசுவும் விரட்டப் படும்! உடனடி பலனுக்கு வெதுவெதுப்பான தண்ணீரை உபயோகிக்கலாம். இலவச இணைப்பாக: வீட்டில் யாருக்கேனும் நெஞ்சில் சளி கட்டியிருந்தால், கற்பூர எண்ணையைக் கொஞ்சம் மார்பில் தேய்த்துவிடுங்கள். சளியும், மூக்கடைப்பும் அகன்றுவிடும். செய்துதான் பாருங்களேன்!
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
செல்வம் - Doha,இந்தியா
23-நவ-201223:10:26 IST Report Abuse
செல்வம் தமிழ்நாட்டில் அரசாங்க ஆட்சி ஏதும் உண்டோ. அமைச்சர்கள் எல்லாருக்கும் அம்மா மந்திரம் ஓத நேரம் போதவில்லை
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
raja ராஜன் - Usilampatty,Maduraiதட்,இந்தியா
23-நவ-201222:26:02 IST Report Abuse
raja ராஜன் அம்மா நாளைக்கு சட்டசபையில் ஆவேசமாக சொல்லுவார்.தமிழத்தில் யாருமே டெங்கு காய்ச்சலில் சாகவே இல்லை.இதற்க்கு காரணமான மத்திய அரசின் மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்படும்.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
cheenumeenu - chennai,இந்தியா
23-நவ-201222:12:08 IST Report Abuse
cheenumeenu எங்கே நிம்மதி, எங்கே நிம்மதி, அங்கே எனக்கோர் இடம் வேண்டும். எங்கே கொசு கடிக்காத இடமோ ! அங்கே ஓர் இடம் வேண்டும். போயஸ் கார்டனில் சுத்தம், சுகாதாரம் இருப்பது போல் சென்னை முழுவதும் பராமரிக்கப்பட வேண்டும். தற்பொழுது தினசரி குப்பைகளே எங்கும் இறைந்து சென்னையின் முக்கிய தெருக்கள், மூக்கை முடிக்கொண்டு செல்லும் அளவிற்கு, நாறிக்கொண்டு இருக்கிறது .
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
chandrasekaran k - MADURAI,இந்தியா
23-நவ-201222:08:31 IST Report Abuse
chandrasekaran k Thanks to DINAMALAR for publishing the very important article regarding masquitto menace. THIS is the problem I am facing since 1970 onwards. The matter has to be brought to our honourable CM and it must be looked into vigourously with a vision to eradicate the menace.During 1970 there was a mission named ELEP which functioned for the eradication of leprosy. It was an european organisation who helped our people to eradicate leprasy. Like this some good hearted big houses must come forward to voluntarily help this menace. There are people to make projects for this kind of action. We shall organize some sort of groups to study and to help scientifically to eradicate the menace. If DINAMALAR leads for this health services many will join to work for this good cause. Let us first forward this matter to our CM and the same time we shall think of this.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
vedaiguru - zhaoqing,சீனா
23-நவ-201219:49:46 IST Report Abuse
vedaiguru i am ready to sort and proper handle the daily waste. also i am ready to keep covered drainage water.BUT..where is the dust bin? where is drainage s y stem? daily where can I through waste? even have waste bin, that will over flow always. IF HEAD IS PERFECT,TAIL WILL PERFECT. First govt. should arrange facilities. then maintain proper. last blame public. no bin...no maintenance...kuppaya correct..aa kottu..nnu sonna enga koturathu? my home in township. but can not see any drainage s y stem...almost all houses waste water going to their plantations or septic tank.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
தமிழவேல் - chennai,இந்தியா
23-நவ-201218:06:39 IST Report Abuse
தமிழவேல் நன்றி சந்திரமோகன்..இந்த நிலை அமைச்சர்களுக்கும் தெரிந்ததுதான் .. இவர்கள் அறிவிப்பின்றி நகர் வளம் வந்தாக வேண்டும் என்ற அவசியம் இல்லை.. இந்த நிலை பலகாலமாக உள்ளது .. இன்றைய அமைச்சர்கள் சில மாதங்களாகத்தான் அமைச்சர்களாக உள்ளனர். நீங்கள் கூறுவது போல பிளாஸ்டிக் களை தடை செய்ய வேண்டும். இப்போது இவர்கள் பிளாஸ்டிக் இலைகளுக்கும் தயாரிக்கும் உரிமையை தந்துள்ளனர்..இது குப்பையில் போட்டால் எப்போது மடியும் ? பிளாஸ்டிக் கப்புகளுக்கு பதில் வடக்கு ரயில்வேயில் மண்ணால் செய்த கப்புகள் பயன் படுத்தப்படுகின்றன..பிளாஸ்டிக் தட்டுகள் இலைகளுக்கு பதில் அட்டைதட்டுகள், பாக்கு மட்டை தட்டுகள் உலர்ந்த தாமரை, ஆல இலைகள் மட்டுமே அனுமதி பெறவேண்டும்.. அரசை நம்பிமட்டும் இருக்கக்கூடாது என்பது சரியான கருத்து .. வாசலில் தண்ணிரை தேக்குபவர்கள் அதில் தேவையான மருந்து தெளிக்க அடுத்தவீட்டு காரர்கள் நிர்பந்திக்க வேண்டும்..நகராட்சிகள் மருந்து தெளித்தாலும் நமது கொல்லைபுறம் உள்ள நீர்தேக்கக்களுக்கு உள்ளே வந்து தெளிப்பதில்லை என்பதால் நாம்தான் அவைகளை பராமரிக்கவேண்டும்.. இதை தட்டிக்கேட்பதற்கு அண்டை வீட்டுகாரர்களுக்கும் உரிமை உள்ளது..
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
mu.gopal - indian,இந்தியா
23-நவ-201217:34:56 IST Report Abuse
mu.gopal makkal purachi vedikkum kaalam vekutholaivil illai
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
ராம் Sethuraman - Mississauga,கனடா
23-நவ-201217:07:03 IST Report Abuse
ராம் Sethuraman டெங்கு,மெங்கு,டாங்கு,ராங்கு எல்லாம் வருவதற்கு காரணம் குப்பை அகற்றமால் மற்றும் சாக்கடை வேலை செயததும் தான் காரணம். போர் கால அடிபடையில் குப்பை அகற்ற பட வேண்டும். பேருண் குழிகள் தோண்டி அதை புதைக்கலாம். சாக்கடை சுத்த படுத்த மக்கள் முன் வர வேண்டும் இல்லை என்றால் விரைவில் மக்கள் இந்த நோய்களால் அவதிப்பட்டு உயிர்களை இழக்க நேரிடும். மக்கள் தான் விழிபுடுன் இருக்க வேண்டும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
ம.shankar - chennai,இந்தியா
23-நவ-201217:04:40 IST Report Abuse
ம.shankar எல்லாருக்கும் ஒரு முக்கிய செய்தி கொசுக்களை ஒழிக்க ஒரே வழி கன்புசிய மீன்களை மீன் வளர்ச்சி கழகத்திடம் vanghi அருகில் உள்ள ஏரி, குளம் போன்றவற்றில் விட்டால் அந்த மீன் கொசு முட்டைகளையும்,லார்வவயும் தின்றுவிடும்.1000 மீன்களின் விலை 50 ருபாய்.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.