வேலூர்: வேலூரில், பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் கொலை வழக்கில், ஆறு பேரை, போலீஸார் கைது செய்தனர்.வேலூர், ரங்காபுரத்தை சேர்ந்த டாக்டர் அரவிந்த்ரெட்டி, 38, ரங்காபுரம், கொசப்பேட்டை எல்.பி.எம். கோவில் தெரு மற்றும் சென்னையில் நீரிழிவு நோய் மருத்துவமனை நடத்தி வந்தார். பாரதிய ஜனதா கட்சி மருத்துவரணி மாநில செயலாளராகவும் இருந்தார்.
இவர், அக்டோபர், 23ம் தேதி, வேலூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். வேலூர் எஸ்.பி., ஈஸ்வரன் தலைமையில், ஐந்து தனிப்படைகள் அமைத்து விசாரித்தனர். நேற்று முன்தினம் இரவு, வேலூர் வசந்தபுரம் பகுதியில், போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, வேலூர் ஓல்டு டவுனை சேர்ந்த உதயா, 27, சத்துவாச்சாரியை சேர்ந்த தங்கராஜ், 26, கொசப்பேட்டையை சேர்ந்த சந்திரன், 25, ஆகிய மூன்று பேரையும், சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில், டாக்டர் அரவிந்த்ரெட்டியை கொலை செய்தது தெரிந்தது, மேலும், இவர்களுடன் ராஜா, 32, பெருமாள், 28, தரணிகுமார், 25, ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிந்து, ஆறு பேரையும், போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையில், ஆறு பேரும், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி வசூர் ராஜா என்பவர் கூறியதன்பேரில் கொலை செய்தது தெரிந்தது. தொடர்ந்து, போலீஸார் விசாரிக்கின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.