சென்னை: முன்னாள் தி.மு.க., அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பறவைக்காய்ச்சல் காரணமாக இறந்திருக்கலாம் என உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, அவரது உடலுக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி அஞ்சலி செலுத்தினார்.
சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் (75) நுரையீரல் பிரச்னை காரணமாக சென்னையை அடுத்த போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் கடந்த 17ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து ஆக்சிஜன் செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் அவரது உடல்நிலை மோசமானது. டாக்டர்கள் கடும் முயற்சி செய்தும், இன்று காலை 11.30 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. வீரபாண்டி ஆறுமுகம் உடலுக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி அஞ்சலி செலுத்தினார்.
பறவைக்காய்ச்சல் காரணமா?
இதனிடையே வீரபாண்டி ஆறுமுகம் பறவைக்காய்ச்சல் காரணமாக மரணடைந்ததாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 1957ம் ஆண்டு தி.மு.க.,வில் உறுப்பினரான வீரபாண்டி ஆறுமுகம், 1957 முதல் 70 வரை பூலாவரி ஊராட்சி ஒன்றிய உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 1970 ஊராட்சி ஒன்றிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் கடந்த 1962,67,71,89,96 மற்றும் 2006ம் ஆண்டில் சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டார். 1978 முதல் 84ம் ஆண்டு வரை சட்டமேலவை உறுப்பினராக பணியாற்றினார். கடந்த தி.மு.க., ஆட்சியில் வேளாண் துறை அமைச்சராக பணியாற்றினார்.
3 நாள் துக்கம்:
வீரபாண்டி ஆறுமுகம் மரணமடைந்ததைத் தொடர்ந்து, தி.மு.க., சார்பில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது. மேலும் கட்சிக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் 3 நாட்கள் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வீரபாண்டி ஆறுமுகம் மரணடைந்ததை தொடர்ந்து, தி.மு.க, பொருளாளர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். வீரபாண்டி ஆறுமுகம் மரணம் தி.மு.க.,விற்கு இழப்பு என கூறியுள்ளார்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.
திருச்சிக்கு வருவதாக இருந்த சூப்பர் ச்பெசியாளிட்டி மருத்துவமனையை சேலம் மற்றும் அதனை சுற்றயுள்ள மாவட்ட மக்கள் பயன்பெறுவதற்காக போரடி வாங்கிவந்த மகத்தான தலைவர் என்பதனை இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.சேலம் மற்றும் அதனை சுற்றயுள்ள மக்களின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறோம்.
ஒருவர் இல்லாத போதுதான் அவரின் பெருமையை மக்கள் பேசுவார்கள் என்பதற்கு மற்றும் ஒரு உதாரணம் தான் அய்யா அவர்கள் இவரால் தான் எனக்கு படிக்க உணவு கிடைத்தது ( இவர் தான் ஸ்டாலின் அவர்களிடம் சொல்லி எனக்கு hostelil தங்கி படிக்க வழி செய்தார் ) இன்றைக்கு நான் இங்கு இருந்து எழுத எனக்கு வழி செய்ததது திமுகவில் உள்ள சில நல்ல இதயங்கள் தான் வாழ்க அவரது புகழ்
சேலத்து சிங்கம் மறைந்தாலும் அவர் நினைவுகள் என்றும் நம்முடன் நிற்கும். அவர் தம் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
எதற்கும் அஞ்சாத மன ஆற்றல் கொண்ட அன்னாரது மறைவு ஈடு செய்ய இயலாத இழப்பாகும்.
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.