Stalin met with the family of his son in prison Ponmudi | சிறையில் பொன்முடி மகனை குடும்பத்துடன் சந்தித்தார் ஸ்டாலின் | Dinamalar
Advertisement
சிறையில் பொன்முடி மகனை குடும்பத்துடன் சந்தித்தார் ஸ்டாலின்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

கடலூர்:செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் கைதாகி, கடலூர் மத்திய சிறையில் உள்ள, அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதமசிகாமணியை, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், தன் குடும்பத்தினருடன் நேற்று சந்தித்தார்.விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்த பூத்துறை கிராமத்தில், செம்மண் குவாரி நடத்தி முறைகேடு செய்த வழக்கில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவர் மகன் கவுதமசிகாமணி உட்பட, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

கவுதமசிகாமணி, அவரது மைத்துனர் ராஜமகேந்திரன், குவாரி மேலாளர் புதுச்சேரியைச் சேர்ந்த சதானந்தம் ஆகியோர், கடலூர் மத்திய சிறையில் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை, ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் ஆகியோர், நேற்று மதியம், 1:15 மணி முதல், 1:30 மணி வரை சந்தித்து பேசினர்.
சந்திப்புக்கு பின், வெளியே வந்த ஸ்டாலின்நிருபர்களிடம் கூறுகையில், ""சிறையில் உள்ளமூவரும் அரசின் பொய் வழக்குகளை சந்திக்கும் வகையில் தெம்பாகவும், மன தைரியத்துடன்உள்ளனர். முன்னாள் அமைச்சர் வீரபாண்டிஆறுமுகத்தை கைது செய்து, அலைக்கழித்து, மன உளைச்சல் ஏற்படுத்தி, அவரது மரணத்திற்கு காரண மான தமிழக அரசும், முதல்வர் ஜெ.,வும் பதில்சொல்லும் காலம் வெகு விரைவில் வரும்,'' என்றார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
24-நவ-201216:39:23 IST Report Abuse
Pannadai Pandian இந்த கட்சி திருந்தாது. திருடனுக்கு ஜெயிலில் சென்று ஆதரவு தெரிவித்தால் ஊரையே மறுபடியும் கொள்ளையடிப்பான்
Rate this:
2 members
0 members
12 members
Share this comment
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
24-நவ-201214:22:02 IST Report Abuse
Matt P குடும்பம் ஒரு கழகம்....,,,தவறே செய்யாத உத்தமர்களாக இருப்பார்களோ தி மு கவினர் என்று எனக்கு திடீர்னு சந்தேகம் வந்து விட்டது. ...கருணாநிதி வள்ளுவரிடம் மிகுந்த ஈடுபாடு காட்டுவதால் அவர் எப்படி தவறுகள் செய்திருக்க முடியும்? ...கருணாநிதி ...நல்ல செயல்களில் நம்பிக்கை உள்ளவர். .....காந்தி அண்ணாதுரை காமராஜ் வழியில் உண்மையாக நாட்டுக்கு உழைப்பவர்...ஏழைகளுக்காக ஏழையாக வாழ்பவர். ..கருணாநிதி குடும்பம் கட்சி தொண்டர்களை மதிக்கும் குடும்பம். ... வீரபாண்டி ஆறுமுகத்துக்கு மன உழைச்சல் ஏற்படுதபட்டதால் இறந்து விட்டார்...அவர் மறைந்தது துரதிர்ஷ்டம் தான். .உலகமெங்கும் பலர் மன உழைச்சலில் தான் வாழ்கிறார்கள். ...நல்லதோ கேடோ எதையும் எதிர்கொண்டு எதிர்நீச்சல் போட்டு வாழ வேண்டும்....கருணாநிதி அவர்கள் அவரது அரசியல் வாழ்க்கையில் எவ்வளவு இன்ப துன்பங்களை அனுபவித்து இந்த வயதிலும் தைரியமாக இருக்கிறார். அவரிடம் இருந்து பாடம் கற்க வேண்டும்..எத்தனை வழக்குகளை சந்தித்திருப்பார். ...இனிமேலாவது தி மு க குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாமல் இருந்தால் ...தி மு கவுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது. ..கட்சி முக்கியமா? ...மக்கள்(நாடு)முக்கியமா?...குடும்பம் முக்கியமா?
Rate this:
2 members
0 members
10 members
Share this comment
Cancel
v. sundaramoorthy - Ariyalur,இந்தியா
24-நவ-201211:45:33 IST Report Abuse
v. sundaramoorthy கூட்டு களவாணிகள் கூடி பேசுவதும் கொட்டமடிப்பதுவும் தமிழ் நாட்டில் கௌரவமாகிவிட்டது.
Rate this:
4 members
0 members
19 members
Share this comment
Cancel
Tamilan - Chennai,இந்தியா
24-நவ-201209:39:15 IST Report Abuse
Tamilan இது என்ன கொடுமையா இருக்கு............... தப்பு செஞ்சனால ஜெயில் போட்டாங்க.............. இவங்க எல்லாரும் உத்தமனுங்கான இருந்த ஏன் தேர்தலல்ல மண்ணை கவ்வுரன்க்க
Rate this:
6 members
0 members
20 members
Share this comment
Cancel
விழுப்புரம் ஜீவிதன் - வில்லுபுரம்,இந்தியா
24-நவ-201206:37:37 IST Report Abuse
விழுப்புரம் ஜீவிதன் குடும்பத்தோடு வந்து சந்திப்பதால், கட்டாயம் நல்லாத் தான் வளர்ந்திருக்கிறார், சிகாமணிகள்.
Rate this:
5 members
0 members
19 members
Share this comment
Cancel
அறிவாலயம் - சென்னை,இந்தியா
24-நவ-201206:33:30 IST Report Abuse
அறிவாலயம் சிறை தண்டனை எல்லாம் போதாது. மண்ணைத் திருடியவர்களை அந்த மண்ணை மட்டுமே தின்று வாழவைக்கவேண்டும் அதுவரை ஜெயிலில் மண்சோறு சாப்பிட வைக்கலாம்
Rate this:
6 members
1 members
28 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்