சென்னை:"பழம் பெருமை வாய்ந்த அரக்கோணம் ரயில்வே பணிமனையை, வேறு இடத்திற்கு மாற்றக் கூடாது' என, மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, கோரிக்கை விடுத்துள்ளார்.பிரதமரிடம், அவர் அளித்துள்ள மனு:அரக்கோணத்தில், 120 ஆண்டு, பழமை வாய்ந்த, பாரம்பரியமிக்க ரயில்வே பணிமனை, சிறப்பாக இயங்கி வருகிறது. தெற்கு ரயில்வே, தென் மத்திய மற்றும் தென் மேற்கு ரயில்வே ஆகியவற்றிற்கு தேவையான, ரயில் தண்டவாளங்கள் மற்றும் பாலங்களுக்கான தளவாட சாமான்களை தயாரித்து வருகிறது.இம்மையத்தில், 1980 வரை, 3,500 தொழிலாளர்களுக்கு மேல் பணிபுரிந்தனர். தற்போது, 952 பேர் மட்டுமே உள்ளனர். இப்பணிமனையை வேறு இடத்திற்கு மாற்றக் கூடாது. இப்பணி மனையில், மேலும், 1,000 தொழிலாளர்களை பணி நியமனம் செய்ய வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.