Advertisement
மண் அரிப்பை தவிர்க்க "சணல் வலை' நீலகிரி மாவட்டத்தில் புதிய முயற்சி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2012,22:12 IST

ஊட்டி: விவசாய நிலங்களில் மண்ணரிப்பு, மண் சரிவு ஏற்படுவதை தவிர்க்க, "சணல் வலை'களை பொருத்தும் ஆராய்ச்சியை, ஊட்டியில் உள்ள, மண் வள ஆராய்ச்சி மையம் மேற்கொண்டுள்ளது.மலைப் பிரதேசங்களில், கன மழை, புயல் சமயங்களில் விவசாய நிலம், தோட்டங்களில் வேகமாக வழிந்தோடி வரும் மழை நீர், மண்ணரிப்பை ஏற்படுத்துகிறது. விவசாயப் பயிர்கள் நாசமாவதுடன், சத்து நிறைந்த மேல்மண் அரித்து செல்லப்படுகிறது. இதனால், பல இடங்களில் விவசாய நிலங்கள், பயனின்றி கிடக்கின்றன.


இதுபோன்ற, நிலங்களில் மண்ணரிப்பை தடுக்க, "சணல் வலை'களை அமைக்கும் திட்டத்தை, தேசிய சணல் வாரியம் ஊக்குவித்துள்ளது. இதற்கு, நெதர்லாந்தில் உள்ள, "அத்தியாவசிய பொருட்களுக்கான நிதி அமைப்பு' நிதியுதவி செய்கிறது. இத்திட்டத்தை, ஊட்டியில் உள்ள, மத்திய மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆராய்ச்சி மையம், ஆராய்ச்சி அடிப்படையில் மேற்கொண்டுள்ளது.


மைய தலைவர் டாக்டர் கோலா, முதுநிலை விஞ்ஞானி மணிவண்ணன், விஞ்ஞானி கண்ணன் கூறியதாவது:விவசாய நிலங்களில் மண்ணரிப்பு ஏற்படுவதை தடுக்க, பல லட்சம் மதிப்பில், தடுப்புச்சுவர் அமைக்க வேண்டியதில்லை. ஒரு ஹெக்டேரில், 200 கிராம் முதல், 1,000 கிராம் எடையிலான சணல் வலைகளை, நிலத்தின் பரப்பளவு, தன்மைக்கு ஏற்ப பொருத்தி, அந்நிலங்களில் தேயிலை, காரட், பீட்ரூட் என, பயிரிட முடியும்.


கன மழை சமயங்களில், விவசாய நிலத்தில் விழும் மழைநீர் வேகமாக வழிந்தோடி, செல்வதை சணல் வலைகள் கட்டுப்படுத்தும்; தவிர, மழைநீரை உறிஞ்சி வைக்கும். பயிர் வளர்ச்சிக்கு முக்கிய சத்துகளை வழங்கும், மேல்மண் அரிக்கப்படுவதையும் கட்டுப்படுத்தும்.ஓரிரு ஆண்டுகளில், இந்த சணல் வலை, மண்ணோடு மண்ணாக மக்கி, சணலில் உள்ள சத்துக்கள் மண்ணில் கலந்து, மண் வளத்தை பாதுகாக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இந்த ஆய்வு, ஊட்டியை தவிர, இமாச்சலப் பிரதேச மலைகளில் உள்ள, விவசாய நிலங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (3)
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
24-நவ-201214:59:41 IST Report Abuse
மதுரை விருமாண்டி அசத்தலான செய்தி.. இதிலும் அரசு அதிகாரிகள் ஊழல் செய்யாமல் இருக்கணும்.. மருந்தை நினைச்சா, கொரங்கும் நினைவுக்கு வருதே...
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
santhosh - villupuram,இந்தியா
24-நவ-201210:55:56 IST Report Abuse
santhosh சனல் நடுவதை விடுத்து வெட்டி வேர் செடியை நடவும் இது மண் அரிப்பை மிக சிறந்த வகையில் தடுக்கும் அது மட்டும் இல்லாமல் நிலத்தடி நீரை மிக வேகமாக உயர்த்தும்
Rate this:
1 members
0 members
2 members
Share this comment
ச வீரராகவன் - சேலம்,இந்தியா
24-நவ-201207:46:27 IST Report Abuse
ச வீரராகவன் இது போன்று உபயோகமான செய்திகளை வெளியிடும் தினமலருக்கு என் நன்றி
Rate this:
0 members
0 members
3 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.