The sudden death of former Minister Arumugam virapandi | மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் திடீர் மரணம் | Dinamalar
Advertisement
மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் திடீர் மரணம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

தி.மு.க., "மாஜி' அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், நேற்று சென்னையில்திடீரென மரணமடைந்தார்; அவருக்கு வயது 75.கடந்த, சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், வீரபாண்டி ஆறுமுகம் மீது தொடரப் பட்ட நில அபகரிப்பு புகார்களால், போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறைக்கு சென்றார். சேலம் அங்கம்மாள் காலனி குடிசை எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து, குண்டர் சட்டத்தில், வேலூர் சிறையில், 131 நாட்கள்அடைக்கப்பட்டிருந்தார்.விடுதலைக்கு பின், மகிழ்ச்சியுடன் இருந்த அவர், மூச்சுக்குழாயில் ஏற்பட்ட பிரச்னையால், சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை 11:07 மணிக்கு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


3 நாள் துக்கம்தமிழகம் முழுவதும் தி.மு.க., கொடிகள், அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டு உள்ளன. தி.மு.க., சார்பில் மூன்று நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.வீரபாண்டி ஆறுமுகம் நேற்று காலை, சென்னையில் இறந்ததை அடுத்து,சேலத்தில் பதட்டம் நிலவியதால், 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.திறந்து இருந்த, ஒரு சில கடைகளை, தி.மு.க.,வினர் அடைக்கும் படி மிரட்டியதால், உடனடியாக கடைகள் அடைக்கப்பட்டன.
40 ஆண்டு:வீரபாண்டி ஆறுமுகம், சேலம்மாவட்டத்தின் மாவட்ட செயலராக, தொடர்ந்து, 40 ஆண்டு இருந்துள்ளார். கட்சியை தன்கட்டுப்பாட்டுக்குள் வைத்து, தி.மு.க.,வை வளர்த்தார்.சேலம் மாவட்டம், வீரபாண்டிஒன்றியம் பூலாவரி கிராமத்தில், 1937ல், வீரபாண்டி ஆறுமுகம் பிறந்தார். 1962ல், தமிழக சட்டசபைக்கு வீரபாண்டிதொகுதியில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்ததேர்தலில் வெற்றி பெற்று, முதல் முறையாக எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


அதன்பின், 1967, 1971ம் ஆண்டுதேர்தலில், அதே வீரபாண்டி தொகுதியில் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.,வானார். 1972ல், சேலம் மாவட்ட, தி.மு.க.,செயலரானார். 1977 முதல், 82 வரை, எம்.எல்.சி.,யாகவும் பதவி வகித்தார்.கடந்த, 1989ம் ஆண்டு, சேலம், 2வது தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது உள்ளாட்சித்துறை மற்றும் வேளாண் துறை அமைச்சர் பதவி வகித்தார். 1991 தேர்தலில், அதே தொகுதியில் தோல்வியை தழுவினார். 1996
தேர்தலில், வீரபாண்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, வேளாண் அமைச்சரானார்.அதே தொகுதியில், 2001ல், தோல்வியை தழுவினார். 2006 தேர்தலில், சேலம், 2வது தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் வேளாண் துறை அமைச்சரானார்.


2011 சட்டசபை தேர்தலில், சங்ககிரி தொகுதியில் போட்டியிட்டு, தன் தம்பி மகள் விஜயலட்சுமியிடம், 35 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
கடந்த, 1972 முதல், 2012 வரை தொடர்ந்து, 40 ஆண்டு மாவட்ட செயலராக இருந்துள்ளார். வீரபாண்டி ஆறுமுகத்துக்கு, ரங்கநாயகி, லீலாவதி என, இரு மனைவிகள். ரங்கநாயகிக்கு, நெடுஞ்செழியன், வீரபாண்டி ராஜா, மகேஸ்வரி, நிர்மலா ஆகிய நான்கு குழந்தைகள்; லீலாவதிக்கு, பிரபு என்ற மகன் உள்ளார்.


வீரபாண்டி ஆறுமுகம் உடலுக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அவருடைய உடல், சொந்த ஊரான சேலம் மாவட்டம் பூலாவரியில் அடக்கம் செய்வதற்காக, சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது.இன்று மாலை, அவர் மகன் நெடுஞ்செழியன் சமாதி அருகில், வீரபாண்டி ஆறுமுகத்தின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
அழகிரி, ஸ்டாலின் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள், வீரபாண்டி ஆறுமுகம்உடலுக்கு அஞ்சலி செலுத்த, பூலாவரிக்கு இன்று வருகின்றனர்.


பறவை காய்ச்சலா?நுரையீரல் பாதிப்பால், சுவாச கோளாறு ஏற்பட்டு, வீரபாண்டி ஆறுமுகம் இறந்தார் என, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால், திடீரென, நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டதற்கு, அவர், பறவை காய்ச்சலை ஏற்படுத்தும், வைரஸ் தாக்குதலும் ஆளாகி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.இந்த வைரஸ் தாக்குதலின் வீரியத்தை பொறுத்து, இதன் பாதிப்பிற்கு ஆளாவோரின், கல்லீரல், இதயம், சிறுநீரகம், நுரையீரல் என, எந்த உறுப்பும் பாதிக்கப்படலாம்; இந்த தாக்குதலால்,வீரபாண்டி ஆறுமுகத்திற்கு, நுரையீரல் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என, மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.- நமது நிருபர் -


AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (15)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
28-நவ-201210:17:32 IST Report Abuse
Rangarajan Pg வீரபாண்டி ஆறுமுகம் மரணத்திற்கு இரங்கல். இதை தவிர ஒரு இறந்த மனிதரை பற்றி பேச தோன்றவில்லை. R .I .P அவர் மறைந்த பிறகாவது சேலம் இதை போன்ற அகோர அரசியல்வாதிகளின் பிடியில் இருந்து தப்பிக்கட்டும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Enna Ithu - Tooting,யுனைடெட் கிங்டம்
25-நவ-201203:16:09 IST Report Abuse
Enna Ithu தமிழின தளபதி வீரபாண்டி... கட்டபொம்மன்...சாரி..ஆறுமுகத்திற்கு அரசு மரியாதை குடுக்கப்படாததை வன்மையாக கண்டிக்கிறோம். வட நாட்டினர் ரவுடித்தனம் செய்தால் அரசு மரியாதை கொடுப்பதும், அதையே தென் நாட்டினர் ரவுடித்தனம் செய்தால் அரசு மரியாதை குடுக்க மறுப்பதும் கண்டிக்கப்பட வேண்டியது. இது தமிழினத்திற்கு செய்யப்பட துரோகம்...
Rate this:
2 members
0 members
11 members
Share this comment
Cancel
Daniel Joseph - SANAA,ஏமன்
24-நவ-201216:21:13 IST Report Abuse
Daniel Joseph எப்படியோ அவர் ஆத்மா சாந்தியடைய வாழ்த்துக்கள் ...........சேலம் மாவட்டத்தை உயர்ப்பித்த பெயர் என்றும் இவருக்கு உண்டு
Rate this:
16 members
1 members
8 members
Share this comment
Cancel
Kankatharan - newyork,யூ.எஸ்.ஏ
24-நவ-201216:01:17 IST Report Abuse
Kankatharan  மனித வாழ்வில் நடைபெறும் சம்பவங்களில் துக்ககரமான ஒன்று. அதையும் திமுக முன்னணியில் உள்ளவர்கள் அரசியலாக்குவதாக தெரிகிறது. ஆறுமுகம் கடைசி காலத்தில் சற்று சிரமப்பட்டுத்தான் விட்டார், விதி அது வலியது. இறந்தவர் சாந்தி பெறட்டும்.
Rate this:
14 members
1 members
10 members
Share this comment
Nathan - Manama,பஹ்ரைன்
24-நவ-201219:02:59 IST Report Abuse
Nathan74 வருடங்கள் அற்புதமான வாழ்க்கை . கடைசி ஒரு வருடம் மட்டும் துன்பம். என்ன விதி என்று புரிய வில்லை. சாந்தி உண்டாகுக....
Rate this:
5 members
1 members
10 members
Share this comment
Cancel
lakshmi pathy - chennai  ( Posted via: Dinamalar Android App )
24-நவ-201215:03:16 IST Report Abuse
lakshmi pathy தி்முக தொணி அவர்
Rate this:
7 members
0 members
4 members
Share this comment
Cancel
Anjukam Ramalingam - dindigul,இந்தியா
24-நவ-201214:35:40 IST Report Abuse
Anjukam Ramalingam ஸ்டாலினுக்கு அறிவுரை வழங்கும் நிலையிலிருந்த வீரபாண்டியார் இப்போது மறைந்து விட்டார் திமுக கப்பலின் சேலம் மாலுமி இப்போது இல்லை இனி இவரைபோல் ஒருவரை உருவாக்குவது கடினமே
Rate this:
13 members
0 members
10 members
Share this comment
Cancel
Babu. M - tirupur,இந்தியா
24-நவ-201213:49:48 IST Report Abuse
Babu. M நல்ல வேலை வெளிய வந்து செத்தார் இல்லாட்டி ஜெயா தலை உருண்டு இருக்கும் ,,,,
Rate this:
18 members
2 members
41 members
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
24-நவ-201213:10:46 IST Report Abuse
s.maria alphonse pandian கருத்துக்கள் முற்றும் மாறுபட்ட பாதாக்கரே அவர்கள் மரணத்துக்கு இரங்கல் தெர்வித்தது கலைஞரின் அரசியல் நாகரீகம்...வீரபாண்டியார் அவர்களின் ஊரில் ஆயிரமாயிர தாய்மார்களும் தொண்டர்களும் வயிற்றிலும் மாரிலும் இன்று அடித்துக்கொண்டு அழுத காட்சிகள் அவர்மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் அபாண்டமானவைஎன நிரூபித்துக்கொண்டிருக்கின்றன...அவர் சிறையில் இருந்த பொது நெஞ்சுவலி என கூறப்பட்டபோது எத்தனைபேர் அந்த கருத்துக்கு எதிர் கருத்துக்களும்..கேலிகளும் செய்தனர்...அவரது வார்த்தைகள் உண்மையானவைஎன இன்றேனும் ஒப்புக்கொள்வார்களா?
Rate this:
51 members
1 members
40 members
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
24-நவ-201213:00:27 IST Report Abuse
மதுரை விருமாண்டி இவர் சிறைப் பறவையாக இருந்த போது, இந்த பறவைக் காய்ச்சல் கிருமிகளை கொடுத்து சாய்த்தார்களோ ?? சுதந்திரப் பறவையாக வந்த பிறகு, தந்திரம் செய்து மாய்த்தார்களோ ??
Rate this:
22 members
3 members
46 members
Share this comment
Cancel
24-நவ-201209:54:51 IST Report Abuse
கிரிமினல் இன் politics ஒரு மிக பெரிய கட்சியின் அண்ணன் தம்பிகள் தாங்களுக்குள் ஏற்பட்ட யார் பெரியவர் என்கின்ற சண்டையில் விழுந்த இரண்டாவது உயிர் ...முதலில் ராமஜெயம் ...
Rate this:
18 members
4 members
54 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்