The Central Government in the Lok Sabha poll ... ready? | லோக்சபாவில் ஓட்டெடுப்புக்கு மத்திய அரசு...தயார்?| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (18)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

புதுடில்லி:சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீட்டை அனுமதித்த பிரச்னையில், தப்பிக்கப் பார்த்த மத்திய அரசுக்கு, எதிர்க்கட்சிகள் கடிவாளம் போட்டுள்ளன. "ஓட்டெடுப்புடன் கூடிய விவாதமே நடத்த வேண்டும்' என, ஒரே குரலில், நேற்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதால், பிரச்னையை எப்படி கையாள்வது என, ஆளும் காங்கிரஸ் கலக்கம் அடைந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை உடைக்க, புதிய வியூகம் வகுத்து வருகிறது.

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று முன் தினம், பா.ஜ.,வும், இடதுசாரி கட்சிகளும், சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீட்டு பிரச்னையை எழுப்ப, முலாயம் சிங்கின் சமாஜ்வாதி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிகள், வேறு சில பிரச்னைகளை எழுப்பி, அமளியில் ஈடுபட்டதால், பிரச்னை திசை திரும்பியது.அத்துடன், மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜியின், திரிணமுல் காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானமும் நிராகரிக்கப்பட்டதால், ஆளும் காங்கிரஸ் நிம்மதி அடைந்து.

ஆனால், இந்த நிம்மதிக்கு, நேற்று எதிர்க்கட்சிகள் அனைத்தும், வேட்டு வைத்தன. காலையில், லோக்சபா கூடியதும், வேறு எந்த அலுவல்களும் நடக்க, எதிர்க்கட்சிகள் அனுமதிக்கவில்லை. "சில்லரை வர்த்தகத்தில், நேரடி அன்னிய முதலீட்டை அனுமதித்தது தொடர்பாக, சபை விதி எண்184ன் கீழ், ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும்' என, ஒற்றைக் காலில் நின்றன. எதிர்க்கட்சிகளின் இந்த ஒருமித்த குரலால், ஆளும் தரப்பு சற்றே அதிர்ந்தது. முதலில், திரிணாமுல் காங்., - எம்.பி.,க்கள் அனைவரும், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர். "ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும்' என, கோஷமிட்டனர்.உடன், பா.ஜ., மற்றும் இடதுசாரிகள், அ.தி.மு.க., சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின்

ஐக்கிய ஜனதா தளம், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மத சார்பற்ற ஜனதா தளம், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் என, அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.,க்களும் எழுந்து, ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்திற்கு அனுமதிக்க வேண்டும் என, தொடர்ந்து குரல் கொடுத்தனர்."சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீடு தொடர்பாக, ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர, சமாஜ்வாதி கட்சி நோட்டீஸ் கொடுத்துள்ளது. அது என் பரிசீலனையில் உள்ளது' என, நேற்று முன் தினம், சபாநாயகர் மீரா குமார் தெரிவித்திருந்தார்.

அந்த நோட்டீஸ் ஏற்கப்படுவதாக அவர் அறிவித்து விட்டால், ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்திற்கு வாய்ப்பே இல்லாமல் போய் விடும் என்பதால், எதிர்க்கட்சிகள் தங்கள் கோரிக்கையில், நேற்று உறுதியாக இருந்தன. இதனால், கடும் அமளி நிலவி, நண்பகல், 12:00 மணி வரை, சபை ஒத்திவைக்கப்பட்டது.மீண்டும், சபை கூடிய போதும், சபையில் ரகளை தொடரவே, வேறு வழியின்றி, சபை நாள் முழுவதற்கும் ஒத்தி வைக்கப்பட்டது.சபையில், நேற்று அமளி

Advertisement

நிலவியபோது, தி.மு.க.,- எம்.பி.,க்கள் யாரும் இல்லை.சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீடு பிரச்னை குறித்து விவாதிக்க, வரும் திங்கள்கிழமை, அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு, பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளார். எதிர்க் கட்சிகள் எல்லாம் ஓரணியில் திரள்வதாக தெரிவதால், அனேகமாக ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்துக்கு, காங்கிரஸ் சம்மதிக்க நேரிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அதேநேரத்தில், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை உடைக்க, புதிய வியூகத்தையும் வகுத்து வருகிறது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (18)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheenu Meenu - cheenai,இந்தியா
25-நவ-201200:07:28 IST Report Abuse
Cheenu Meenu எப்பாடு பாட்டாவது நினைத்ததை,எந்த விலை கொடுத்தும் முடித்து விடவேண்டும் என்று நினைக்கும் காங்கிரஸ் எண்ணங்கள் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. இந்திரா காந்தி ஆட்சி தொடக்கம் முதல் தங்களுக்கு எது ஆதாயம் தருமோ அதை செய்து முடிப்பதிலேயே காங்கிரஸ் குறியாக இருக்கிறது. இவைகளுக்கு முடிவு கட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
ratthakatteri_modi - மோடி இல்லா தேசம் ,இந்தியா
24-நவ-201216:54:10 IST Report Abuse
ratthakatteri_modi உங்கள் கனவு பலிக்காது, காங்கிரஸ் வென்றே தீரும், நேற்றும் இன்றும் நாளையும்
Rate this:
Share this comment
Cancel
Daniel Joseph - SANAA,ஏமன்
24-நவ-201216:31:08 IST Report Abuse
Daniel Joseph சூப்பர் விளையாட்டு ஜெகதால கில்லாடிகள் நம்ம நாட்டு காங்கிரஸ் காரங்க
Rate this:
Share this comment
Cancel
p.saravanan - tirupur,இந்தியா
24-நவ-201214:48:10 IST Report Abuse
p.saravanan எது நன்றாக நடக்குமோ அது நன்றாக நடக்கும் .
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
24-நவ-201214:11:29 IST Report Abuse
Pugazh V அந்நிய சில்லறை வணிகம் எனில் வால்மார்ட் மட்டும் தானா? இப்போதே பல சில்லறை வணிகத்தில் சைனா உற்பத்திப் பொருட்கள் சந்தி சிரிக்கின்றனவே. என்னவோ பிற கட்சிகள் எல்லாம் அப்படியே மகாத்மாவின் வாரிசு மாதிரி காங்கிரஸ் ஊழல் கட்சி என்று இங்கே எழுதுகிறார்கள். வைத்திருப்பதெல்லாம் வெளி நாட்டு மொபைல் போன், வெளிநாட்டு கம்பெனி சிம், போடுவதெல்லாம் பாரின் ஜீன்ஸ், பாரின் பேனா, இன்னும் பிற. அதான் அந்நிய முதலீட்டை அவரவர் மாநிலங்களில் மறுத்துவிடுங்களேன். காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் மட்டும் வந்துவிட்டுப் போகட்டும். அங்கேயும் அடுத்த முறை காங். ஆளும் வாய்ப்பை இழந்தால் அடுத்து வரும் கட்சி அந்நிய முதலீட்டை துரத்தி விடலாமே. அந்நிய முதலீட்டால் துறைமுக மாநிலங்களுக்கும், தனிநபர் வருமானம் அதிகம் உள்ள மாநிலங்களிலும் பாரின் பொருட்கள் கிடைக்கும். மற்ற இடங்களில் இதை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பார்கள். முதலில் எல்லோரும் மொபைலில் பி எஸ் என் எல்லுக்கு மாறுங்கள். வோல்வோ பஸ்களைப் புறக்கணித்து டி வி எஸ், லேலண்ட் பஸ்களில் மட்டும் பயணம் செய்ய உறுதி மொழி எடுங்கள். வோல்வோ பஸ் கம்பெனிகள் முன்னால் போய் ஆர்ப்பாட்டம், மறியல் செய்யுங்கள். பி எம் டபிள்யூ போன்ற பாரின் கார் வைத்திருக்கும் சினிமா அதிபர் நடிகர்கள் வீட்டு முன்னால் மறியல் செய்யுங்கள். அதெல்லாம் முடியாது, காங்கிரசை திட்ட மட்டும் தான் முடியும். எலிமெண்டரி ஸ்கூல் பசங்க மாதிரி கூச்சல் போடற எம் பி க்கள். டி வி பாக்கற ஸ்கூல் பையன் கேட்கிறான், இவங்கல்லாம் இப்படி டிசிப்ளின் இல்லாம கூச்சல் போடறாங்களே என்று
Rate this:
Share this comment
Cancel
saravanan - Dares Salaam,தான்சானியா
24-நவ-201212:22:47 IST Report Abuse
saravanan இந்திய சந்தையில் நுழைவதற்காக அதிகாரத்தில் உள்ள சிலருக்கு லஞ்சம் கொடுத்ததற்காக வால்மார்ட் நிறுவனம் அதன் அதிகாரிகள் மீதே நடவடிக்கை எடுத்ததாகவும், இந்த ஊழல் விவகாரம் ஓரிரு நாளில் பெரிதாக வெடிக்கும் என்றும் நேற்று ஒரு செய்தி தொலைக்காட்சியில் பார்த்தேன்..... இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ????
Rate this:
Share this comment
Cancel
T.C.MAHENDRAN - LUSAKA,ஜாம்பியா
24-நவ-201212:09:04 IST Report Abuse
T.C.MAHENDRAN காங்கிரஸ் தனது பணபலத்தால் எதையும் சாதிக்கும் தற்போதைக்கு ,ஆனால் அடுத்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைவது நிச்சயம்.
Rate this:
Share this comment
Cancel
TAMILWASIM - coimbatore,இந்தியா
24-நவ-201211:26:11 IST Report Abuse
TAMILWASIM சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு மசோதாவை அவசரமாக கொண்டு வந்ததே அண்ணன் ஒபாமாவை அமெரிக்காவில் வெற்றி பெற செய்வதற்கு தான். ( தினசரி நாளிதழ் படிக்கும் வாசகர்களுக்கு அதற்க்கான காரணம் புரிந்திருக்கும்) இப்போது தான் அவர் வெற்றி பெற்று விட்டாரே... இனி இந்த மசோதாவை வைத்து அரசியல் செய்து ஒன்றுமில்லாமல் செய்து விடுவர் அன்னையின் கட்சியினர். இதற்க்கு அனைத்து கட்சிகளுமே கூட்டு தான். எதோ பெயருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது போல பாவனை செய்கிறார்கள். உலக அரசியலின் தாக்கமே நம் உள்ளூர் அரசியல் மாற்றத்திற்கு காரணம். குறிப்பாக அமெரிக்கா அரசியல்.
Rate this:
Share this comment
Cancel
S .கோவிந்தராஜன். - chennai,இந்தியா
24-நவ-201209:16:18 IST Report Abuse
S .கோவிந்தராஜன். காங்கிரஸ் ஆட்சி கவிழும் என்ற நிலை இருந்தால் நிச்சயமாகக் கவிழும்
Rate this:
Share this comment
Cancel
pangaali - gingee,இந்தியா
24-நவ-201208:47:48 IST Report Abuse
pangaali காங்கிரஸின் அறிக்கையை பார்த்தால் ஏதோ MP களை ஏற்கனவே விலை கொடுத்து வாங்கியது போல இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.