புதுடில்லி:"2ஜி' முறைகேடு குறித்து, சி.ஏ.ஜி.,யின் ஆய்வில், முரளி மனோகர் ஜோஷி குறுக்கிட்டதாக, புகார் எழுந்துள்ளது. இது குறித்து பார்லிமென்ட்டுக்கு வெளியே பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் சோனியா கூறுகையில்,""2ஜி விவகாரத்தை கிளப்பி, ஆதாயம் பார்த்த பாரதிய ஜனதாவின் சாயம் வெளுத்துவிட்டது. இது குறித்து, பா.ஜ., தலைவர்கள் விளக்க வேண்டும்,'' என்றார்.
இதற்கு பதிலளித்த, பா.ஜ. செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில்,"" ஓய்வு பெற்ற பிறகு சிங் புகார் தெரிவித்துள்ளார்; காங்கிரசின் கைப்பாவை ஆகிவிட்டார். சி.ஏ.ஜி., யை வலுவிழக்கச் செய்ய மத்திய அரசு முயல்கிறது. பொது கணக்கு குழு முன் ஆஜராகி சாட்சியம் அளித்த போது ஒன்றும் சொல்லாமல் இருந்துவிட்டு, இப்போது புகார் தெரிவிப்பது மர்மாக உள்ளது;இதை ஏற்க முடியாது,'' என்றார்.
மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறுகையில்,""2ஜியில் குறிப்பிடப்பட்ட இழப்பு குறித்து சந்தேகம் எழுந்தது. உண்மை நிலை என்ன என்பது இப்போது வெளியாகிவிட்டது. இதை மக்கள் அறிந்து கொள்வர்,'' என்றார்.
பா.ஜ., செயலரும் எம்.பி., யுமான பல்பீர் புஞ்ச் கூறுகையில்," " சிங்கின் புகார் அர்த்தமற்றது. இந்த விவகாரத்தில் இரண்டு உண்மை வெளிப்பட்டுள்ளது. அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதும், ஊழல் நடந்து இருப்பதும் உண்மை. இழப்பு இல்லை என்றால், 122 உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு இருக்காது; ராஜாவும் சிறைக்கு போயிருக்க மாட்டார்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
காங்கிரஸ் மீது உள்ள கரித்தூளை அகற்ற யாராலும் முடியாது. அது தெரியாமல் பேசுகிறார் இந்த சோனியா. சோனியாவின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு வேண்டும். ஜனாதிபதி, பிரதமர் என்று எல்லோரும் இவருக்கு தலை ஆட்டி கொண்டு, மற்ற நாடுகளின் பொருளாதார மேம்பாட்டுக்கு பல தேவை இல்லாத அந்நிய முதலீடு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து உள்ளார் இந்த திட்டத்தில் ௫௧% மற்ற நாட்டுக்கும் ௪௯% நம் நாட்டுக்கும் உள்ளது. இதன் படி, அதிக சதவிகிதத்தில் உள்ள மற்ற நாடுகள் தான், இதனை control செய்யும்
இந்தபுகாரை சிங்க் பதவியில் இருக்கும்போதே சொல்லியிருக்கலாமே. பார்லிமென்ட் கூட்டுக்குழுவில் கூறியிருக்கலாம். பொதுக் கணக்கு குழுவில் கூறி இருக்கலாம்.. ஒரு வருடம் கடந்துவிட்டது ஆ. ராசா கனிமொழி, தொலைத்தொடர்பு அதிகாரிகள் 2G ஊழல் சம்பந்தமாக பினைக்கைதிகளாக இருக்கிறார்கள். நேர்மையான அரசாங்க ஊழியராக இருப்பவர். இப்பொழுது அவிழ்த்துவிடும் விஷயங்களை தான் பதவி வகித்தபோதே கூறி இருக்கவேண்டும். முரளி மனோகர் ஜோஷிக்கும் CAG க்கும் என்ன சம்பந்தம். . முரளி மனோகர் ஜோஷி எதிர் கட்சிக்காரர். கணக்கை திருத்த சொல்லும் அளவுக்கு அவருக்கு என்ன அதிகாரம் இருந்ததது. சிங்க் ஜோஷிக்கு கீழே வேலை பார்த்தாரா.. ஒன்றுக்கு ஒன்று முரணாக இருக்கிறது. .

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.