ஆர்வ கோளாறில் முடிவெடுக்கிறது தேர்தல் ஆணையம்:சுப்ரீம் கோர்ட்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி:"சமீப ஆண்டுகளாக, தேர்தல் ஆணையம் சிறப்பாக பணியாற்றி வருகிறது; ஆனாலும், சில நேரங்களில், அதிக ஆர்வக் கோளாறில், ஓரிரு முடிவுகளை எடுத்து விடுகிறது' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.குஜராத் மாநிலத்தில், அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்காக, அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அதேநேரத்தில், பணபலம் மற்றும் ஆள்பலத்தை தடுப்பதற்காக, தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பணபலத்தை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் போது, குஜராத் மாநிலத்தில், வாகனம் ஒன்றை சோதனையிட்டு, அதிலிருந்த, 2.5 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதை எதிர்த்து, குஜராத் மாநில தொழில் வர்த்தக சபையினர், அம்மாநில ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர்.

இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கூறப்பட்டிருந்ததாவது: சட்டசபை தேர்தல் நடைபெறும் குஜராத் மாநிலத்தில், ஆங்காங்கே வாகனங்களை சோதனையிடுவதும், அதிலிருக்கும் பணத்தை பறிமுதல் செய்வதும், அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. இதுபோன்ற நடவடிக்கைகளை உடனே தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.வாகனங்களில் கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்வது, தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது. தேர்தல் ஆணைய நடவடிக்கைகளால், வர்த்தகர்கள், பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த, குஜராத் ஐகோர்ட், "வாகனங்களில் கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்யும்படி, தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு, அரசியல் சட்டத்திற்கு விரோதமானது; இதுபோன்ற நடவடிக்கைகளை, தேர்தல் ஆணையம் உடனே தடுத்து நிறுத்த வேண்டும்' என, உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் அப்பீல் செய்தது. அப்பீல் மனுவை விசாரித்த, நீதிபதி, டி.கே.ஜெயின் தலைமையிலான, "பெஞ்ச்' தெரிவித்ததாவது:

சமீப ஆண்டுகளாக, தேர்தல் ஆணையம் சிறப்பாக பணியாற்றி வருகிறது; அதை நாம் பாராட்ட வேண்டும். ஆனாலும், சில நேரங்களில், அதிக ஆர்வக் கோளாறில், ஒரு சில முடிவுகளை எடுத்து விடுகிறது.இந்த வழக்கில், இன்று எந்த உத்தரவையும் நாங்கள் பிறப்பிக்கவில்லை. வழக்கு விசாரணையை வரும் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கிறோம்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Giri Srinivasan - chennai ,இந்தியா
25-நவ-201200:02:16 IST Report Abuse
Giri Srinivasan சுப்ரீம் கோர்ட் கூட பல விசயங்களில் ஆர்வக்கோளாறாக உள்ளதே
Rate this:
Share this comment
Cancel
Alagarasu Natesan - Chennai,இந்தியா
24-நவ-201214:23:53 IST Report Abuse
Alagarasu Natesan தேர்தல் கமிஷன் மட்டுமல்ல யாரானாலும் அவர்களது முடிவுகளை பரிசீலிக்க மேலே ஒருவரோ அல்லது ஒரு நிறுவனமோ கட்டாயம் வேண்டும். தங்களது முடிவுகள் தராசில் வைத்து எடை போடப்படுகிறது என்று தெரிந்தால் தவறான முடிவுகள் எடுக்க எல்லோரும் யோசிப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
kailawsh - Pollachi,இந்தியா
24-நவ-201209:10:37 IST Report Abuse
kailawsh இந்த ஆர்வ கோளாரினால்தான் CAG , சலுகையில் பயன்பாட்டிற்கு சென்ற எண்ணிக்கையை கணக்கிட்டு இவ்வளவு சலுகை மக்களுக்கு கிடைத்தது என்று சொல்லாமல் அதை 'இழப்பு' என்று சொல்லி பரபரப்பை உண்டாக்கினார். இதே ஆர்வ கோளாறு உச்ச நீதி மன்றத்தையும் சூடேற்றி , வழக்கு நிலுவையில் உள்ள பொழுதே, "2G ஒதுக்கீடு ஏல முறையில்தான் விடப்பட வேண்டும் " என்று தீர்ப்பளித்தது. அதே உச்ச நீதி மன்ற பெஞ்ச் " இயற்கை வளங்களை, மக்கள் நலன் கருதி அரசு மலிவான விலையில் மக்களுக்கு வழங்க விரும்பினால், ஏல முறைதான் பின்பற்ற வேண்டும் என்கிற கட்டாயமில்லை " என்று சொல்லி தனது முந்தைய ஆர்வ கோளாறை மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளது
Rate this:
Share this comment
Cancel
24-நவ-201206:55:39 IST Report Abuse
விழுப்புரம் ஜீவிதன் ஆர்வக் கோளாறால் கோர்ட்டும் 2G விஷயத்தில் அதிகமாக செயல்படுகிறது என்ற குற்றச் சாட்டை சாட்ட முயலுவார்களே இந்த அரசியல் வாதிகள். அவர்களுக்கு ஒரு பாய்ன்ட் எடுத்துக் கொடுத்திருக்கிறீர். ஏற்கனவே CAG யை படாய்படுத்திக் கொண்டிருக்கின்றனர் இவர்கள். அதில் கருணாவும் சேர்ந்து கொண்டார்.
Rate this:
Share this comment
Cancel
24-நவ-201206:50:31 IST Report Abuse
விழுப்புரம் ஜீவிதன் இந்த கிடிக்கி பிடி கூட போடாவிட்டால், நம் அரசியல்வாதிகள் ரொம்ப ஆட ஆரம்பித்துவிடுவார்கள். எனவே இதில் நீதி மன்றம் குறுக்கீடு செய்யக் கூடாது. உரிய ஆவணங்கள் காட்டி பணத்தி பெறலாமே? உரிய ஆவணத்தோடு எடுத்து செல்லும் பணத்தை பறிமுதல் செய்யமாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
செந்தமிழ் கார்த்திக் - நாமக்கல்டுசென்னை,இந்தியா
24-நவ-201203:53:15 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் தேர்தல் ஆணையம் கூட கொட்டு வாங்குகிறதே ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்