The answer has got to be, not only the prime minister said on complaint | நடவடிக்கை இல்லை:பிரதமர் மீது ஜெயலலிதா புகார்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நடவடிக்கை இல்லை:பிரதமர் மீது ஜெயலலிதா புகார்

Added : நவ 23, 2012 | கருத்துகள் (43)
Advertisement
நடவடிக்கை இல்லை:பிரதமர் மீது ஜெயலலிதா புகார்

சென்னை:""தமிழகத்தின் பிரச்னைகளைத் தீர்க்க, பிரதமருக்கு கடிதம் எழுதினால், கடிதம் கிடைத்தது என, பதில் வருகிறது. ஆனால், நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை,'' என, முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டினார்.

அமைச்சர்கள் தங்கமணி, எடப்பாடி பழனிசாமி இல்லத் திருமணங்களை, சென்னை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நேற்று நடத்தி வைத்து, ஜெயலலிதா பேசியதாவது:ஒரு நிலையை அடைந்து விட்டாலும், சோதனைகள் நம்மை விட்டு விலகுவதில்லை. தமிழகத்தின் முதல்வராக உள்ள நான், மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுக்க வேண்டும் என, நினைக்கிறேன். இதற்கு, முட்டுக்கட்டைகளை, தடைகளை, சோதனைகளை, மத்திய அரசு ஏற்படுத்தி வருகிறது.

மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில், மத்திய அரசு செயல்படுகிறது. இதுகுறித்து, பிரதமருக்கு கடிதம் எழுதினால், "உங்கள் கடிதம் கிடைக்கப் பெற்றது' என்ற, வழக்கமான பதில் தான் வருகிறது. காவிரி நதி நீர் ஆணையத்தைக் கூட்டுவதில் கூட, மத்திய அரசு மவுனம் சாதித்தது.

சுப்ரீம் கோர்டை அணுகிய பின், பெரும் போராட்டங்களுக்கு பிறகே, காவிரியிலிருந்து ஓரளவு நீரை பெற முடிந்தது. தமிழகத்தின் மின் தட்டுப்பாட்டைப் போக்க, மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் கேட்டால், மத்திய அரசு வழங்கவில்லை. "மின்சாரம் வேண்டாம்' என, டில்லி அரசு அளித்த உபரி மின்சாரத்தைக் கூட வழங்க மறுக்கின்றனர்.இதற்காக, சுப்ரீம் கோர்ட்டை அணுகியுள்ளோம். எல்லா விஷயங்களிலும், தமிழகத்துக்கு பாதகமான அணுகுமுறையைத் தான் மத்திய அரசு கடைப்பிடிக்கிறது. முல்லைப் பெரியாறு பிரச்னையிலும், இதே நிலை தான். இதற்காக துவண்டுவிட மாட்டோம்.

மத்திய அரசு எத்தனை தடைகளை, முட்டுக்கட்டைகளை, சோதனைகளை உருவாக்கினாலும், அதையெல்லாம் முறியடித்து சாதித்துக் காட்டுவோம். தமிழகத்தின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் செயல்பட்டு வருகிறேன். மக்களின் ஆதரவோடு, நிச்சயம் செய்து முடிப்பேன்.

விருந்து சாப்பிட நினைக்கிறோம். அதில், வெறும் இனிப்பு மட்டும் இருந்தால், மன நிறைவு ஏற்படாது; உவர்ப்பு, புளிப்பு, காரமும் இருக்க வேண்டும். அப்போது தான் விருந்து உயர் தரமாய் அமையும். இதுபோல் தான் வாழ்க்கையும்.இன்பம், துன்பம், சுகம், துக்கம், வெற்றி, தோல்வி என, அனைத்தும் வாழ்வில் கலந்திருக்கும். தடங்கலை, வெற்றியின் தடங்கலாக கருதி, துணிச்சலுடன், ஒற்றுமையுடன் எதிர் கொண்டால் வெற்றி நிச்சயம்.இவ்வாறு, ஜெயலலிதா பேசினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
28-நவ-201212:59:33 IST Report Abuse
Sivagiri கடிவாளம், ஐயாவின் கையில் இருக்கும் போது . . . .
Rate this:
Share this comment
Cancel
Ajay ganesh - kumbakonam ,இந்தியா
24-நவ-201219:11:00 IST Report Abuse
Ajay ganesh After won the election jayalalitha met pm manmohan and requested power for tamil nadu but the response is zero, some readers compared nithis and modi they have the fecility to get electricity because of grid, now the need of the hour is effecient management and developing various sources only, congress mps from tamil nadu never mind about the situation and they are in full swing in earning money, people should have to suffer no way.
Rate this:
Share this comment
Cancel
Daniel Joseph - SANAA,ஏமன்
24-நவ-201216:15:38 IST Report Abuse
Daniel Joseph மொத்தத்தில் ஆணவத்தை குறைத்து தமிழ்நாட்டில் உள்ள மத்திய மந்திரிகளோடு உங்கள் எம் பி க்களை அனுப்புங்கள் அப்போது தான் எல்லாம் சரியாகும் சும்மா தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்கதீர்கள் அதோடு கூடங்குளம் கழிவை தட்டுவதற்கும் நல்ல இடம் தேர்ந்தெடுக்க வையுங்கள் அல்லது வேறு எதாவது மின் திட்டம் எதாவது செய்யுங்கள்
Rate this:
Share this comment
Cancel
JAI.RAMANAA - ILAVASA NAADU ,இந்தியா
24-நவ-201213:15:16 IST Report Abuse
JAI.RAMANAA முதலில் நீங்கள்" செயற்கையாக?" கொண்டுவந்துள்ள 16 மணி நேர மின்தடையை நீக்கி தத்தளித்து கொண்டிருக்கும் தமிழ் நாட்டு மக்களை காப்பாற்றும் வழியை பாருங்கள் !மத்திய அரசை குறை கூறிக்கொண்டே இருப்பதாலோ !,அவர்களின் மீது வழக்கு தொடுப்பதாலோ ! எந்த பயனும் இல்லை ? இது முழுக்க முழுக்க தமிழ் நாடு சம்பந்த பட்ட விஷயம் !அப்படியே மத்திய அரசின் சம்பந்தம் இருந்தாலும் இது வரை தமிழக அரசின் சார்பாக யாரும் மத்திய அரசை மின் தேவைக்காக சந்திக்கவில்லை ! தமிழ் நாட்டின் மின் பற்றாகுறை 4000 மெகவாட் என்கின்ற உங்களின் கணக்கு படி அதிக பட்சம் 8 மணி நேரம் தான் இருக்க வேண்டும்(சென்ற ஆட்சியில் 5 மணி நேரம் மட்டுமே !) ஆனால் நீங்கள் கொண்டு வந்துள்ளதோ 16 மணி நேர மின்தடை ,இது யாரை ஏமாற்றும் செயல் ! உங்களுக்கு வாக்களித்த தமிழ் நாட்டு மக்களுக்கு துரோகம் விளைக்காதீர்கள் ! இந்த நீலி கண்ணீர் யாருக்காக? மின்வெட்டு ,டெங்கு , நீங்கள் போர்கால நடவடிக்கை போல் செயல் பட்டு முடித்து விட்டு , இது போன்ற மற்ற அறிக்கை களை நீங்கள் விடவேண்டும் !
Rate this:
Share this comment
Cancel
saravanan - Dares Salaam,தான்சானியா
24-நவ-201212:37:37 IST Report Abuse
saravanan சரி.... இன்னைக்கு மத்திய அரசை குறை சொல்லி அறிக்கை விட்டாச்சு...... நாளைக்கு மறக்காம முந்தைய திமுக அரசை குறை சொல்லி அறிக்கை விட்டுருங்க...... அப்பத்தான் நீங்க முதலமைச்சரா இருக்குறது எல்லோருக்கும் தெரியும்... சரியா
Rate this:
Share this comment
Cancel
கார்த்திக் - திருப்பூர்,இந்தியா
24-நவ-201212:23:35 IST Report Abuse
கார்த்திக் அவர்களையும் இவர்களையும் குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு பிரச்சனைகளுக்கு போர்கால நடவடிக்கை எடுங்கள்...... ஆட்சிக்கு வந்து இத்தனை நாட்கள் ஆகியும் மின் தட்டுப்பாட்டிற்கு தாங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்....??.. எதாவது திட்டத்தில் மின் உற்பத்தி தொடங்கியதா.....?
Rate this:
Share this comment
Cancel
முகமது கனி, மதுரை - மதுரை,இந்தியா
24-நவ-201210:49:55 IST Report Abuse
முகமது கனி, மதுரை வெறும் கடிதம் எழுதிவிட்டுமட்டும் தன பொறுப்பைத் தட்டிக் கழிக்கக் கூடாது. ஜெயலலிதா முதலில் தான் தமிழக அரசிற்குத் தலைமை தாங்கும் முதலமைச்சர் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். பிரச்சினைக்குரிய விஷயங்களில், கடிதம் எழுதினால் கிடைத்தது என்ற பதில்தான் வரும். அவைகளை கடிதம் எழுதி அதன்மூலம் தீர்வுகாணமுடியாது. பேச்சுவார்த்தைமூலமே தீர்வு காணமுடியும். அதைவிடுத்து மத்திய அரசு மீதுமட்டும் பழிபோட்டுவிட்டு தான் ஒதுங்கிக்கொள்ள நினைப்பது சரியல்ல. மத்திய அரசின் தலைமை அமைச்சராக உள்ள பிரதமர் அல்லது அமைச்சர்களை தானோ அல்லது தனது அமைச்சரவை சகாக்கள் மற்றும் அதிகாரிகள் குழுவை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தி, எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காணவேண்டும். ...
Rate this:
Share this comment
Cancel
Moorthy - coimbatore,இந்தியா
24-நவ-201210:35:31 IST Report Abuse
Moorthy மோடியும்,நிதிஷ்குமாரும் இந்தியாவில்தானே இருக்கிறார்கள்????????
Rate this:
Share this comment
Cancel
IYYAPPAN - தசை,இந்தியா
24-நவ-201210:29:47 IST Report Abuse
IYYAPPAN உங்களுக்கு மதிய அரச குறை சொல்லிகிட்டே இருகிரதுதன் வேல
Rate this:
Share this comment
Cancel
gr - bangalore,இந்தியா
24-நவ-201209:49:10 IST Report Abuse
gr J is no doubt intelligent. but she lacks sometimes being politically savvy. y not she se n d a all party delegation to meet pm? she has already met him so she need not even go. it is really sad that in tamil nadu, j and karuna r like personal enemies. see how bjp leaders and cong leaders meet outside and discuss/talk/share jokes, etc. here only they take things personally. this tre n d should change. j can submit a white paper on the mosquito prob, electricity prob, etc. esp. when she has more potential , she has to come out of this shell and reach out to all. even to her enemies. she will then be invincible.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை