சென்னை:"மருத்துவப் படிப்புகளுக்கான தேர்வு மதிப்பீட்டில், மாற்றங்களை கொண்டு வர, தங்களுக்கு அதிகாரம் உள்ளது' என, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை, ஐகோர்ட்டில், பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கான, ஆண்டு தேர்வு மதிப்பீட்டு முறையில், புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது."இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறைகளுக்கு எதிரான, இவற்றை திரும்ப பெற வேண்டும்' எனக் கோரி, 50க்கும் மேற்பட்ட, மருத்துவ மாணவர்கள், ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.
இம்மனுக்கள், தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்' முன், விசாரணையில் உள்ளது.இவ்வழக்கில், பல்கலை சார்பில், தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு:தேர்வு மதிப்பீட்டு முறையில் மாற்றங்களை கொண்டு வர, கடந்த ஆண்டு, டிச., 19 ல் நடந்த, பல்கலை நிலைக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதுகுறித்து, அப்போது, மனுதாரர்கள் யாரும் கேள்வி எழுப்பாத நிலையில், தற்போது, வழக்கு தொடுக்க, அவர்களுக்கு உரிமையில்லை. தற்போது கொண்டு வரப்பட்டுள்ள, புதிய விதிமுறைகளுக்கு, இந்திய மருத்துவ கவுன்சிலின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்தும் வகையில், தேர்வு மதிப்பீட்டில், மாற்றங்களை கொண்டு வர, அதிகாரம் உள்ளது. எனவே, இம்மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு, பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணையை, "முதல் பெஞ்ச்' இம்மாதம், 26ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.