கல்வி வளர்ச்சிக்கு பிராந்திய மொழிகள் அவசியம்:விஞ்ஞானி பேச்சு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கோவை:கல்வி வளர்ச்சியின் ஒரு பகுதியாக பிராந்திய மொழிகள் இருப்பது அவசியம். இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிலையங்களால் மட்டுமே சிறந்த கல்வியை அளிக்க முடியும் எனும் நிலையை மாற்றி, கலாசாரத்துடன் ஒருங்கிணைந்த கல்வியை இளைஞர்களுக்கு வழங்க வேண்டும்,'' என, விஞ்ஞானி ராஜன் பேசினார்.இந்தியத் தொழில் கூட்டமைப்பு சார்பில், "கல்வியில் தரம்' என்ற தலைப்பில், 10வது மண்டல மாநாடு துவக்க விழா நேற்று கோவையில் நடந்தது.

இந்தியத் தொழில் கூட்டமைப்பு கோவை மண்டலத் தலைவர் அசோக் பக்தவத்சலம் வரவேற்றார். தேசிய தரமதிப்புச் சான்று, கல்வி மற்றும் பயிற்சி கழக தலைவர் சந்திரசேகர் பேசியதாவது:இந்தியாவின் பொருளாதாரம் வளர்ந்து வரும் அதேவேளையில் 40 சதவீதம் பேர் படிப்பறிவு இல்லாமல் இருப்பது வருந்ததக்கது. ஐ.நா., குழு நடத்திய சமீபத்திய ஆய்வில், இந்தியாவில் 50 சதவிதத்துக்கும் குறைவான கிராமப்புறக் குழந்தைகளே பள்ளிக் செல்கின்றனர் என, தெரிய வந்துள்ளது. இது இந்தியக் கல்வி தரத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. எதிர் வரும் 2025ம் ஆண்டில் அதிகளவு தகுதி வாய்ந்த மனித வளம் உள்ள நாடாக இந்தியா இருக்கும்.

கல்வித்துறையில் தனியார் மட்டுமே சிறந்த கல்வியை அளித்து வருகின்றனர். பொருளாதாரத்தில் தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டுமே சிறந்த கல்வி கிடைக்கிறது. இன்ஜினியரிங் துறையில் 20 சதவீத மாணவர்கள் மட்டுமே வேலைவாய்ப்பு பெறுகின்றனர். ஆனால் அவர்களுக்கும் பயிற்சிகள் தேவைப்படுகிறது. கல்வியின் அடித்தளமாக இருப்பது ஆரம்பக் கல்வி. அடித்தளம் சரியாக அமையவில்லை என்றால் மொத்த கல்வியும் சரியாக அமையாது. இந்தியாவின் 48 சதவீதம் பள்ளிகளில் அடிப்டை வசதிகளே இருப்பதில்லை. ஆரம்பக் கல்வியை வலுப்படுத்த அரசு பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அதற்கான தணிக்கை குழவை ஏற்படுத்தி ஆய்வு செய்ய வேண்டும். ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனையும் மேம்படுத்த வேண்டும். பள்ளிகளில் டிஜிட்டல் முறையில் பாடம் கற்பித்தால் மட்டுமே வளர்ந்த நாடுகளுடன் போட்டியிட முடியும். கல்வித் தரத்தில் போட்டியிடக்கூடிய நிறுவனங்களை உருவாக்கினால் மட்டுமே தரமான கல்வியை மாணவர்களுக்கு அளிக்க முடியும்.இவ்வாறு, அவர் பேசினார்.

தேசிய தரமதிப்புச் சான்று கழக தலைவர், ராஜன் பேசியதாவது:உலக அளவில் கல்வி வளர்ந்து வரும் நிலையில், இந்தியக் கல்வியின் தரம் கேள்விக்குறியாகவே உள்ளது. வளர்ந்து வரும் மக்கள்தொகைக்கு ஏற்ப கல்வி தரம் வளரவில்லை. தொழிற்சாலைகள் தரமான பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அளித்து லாபம் ஈட்டுவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன. ஆரம்பக் கல்வித் துறையின் மீது தொழிலகங்கள் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவில் 15 சதவீதத்தினர் மட்டுமே சிறந்த உயர்கல்வியை பெறுகின்றனர்.

பிளஸ்2 வகுப்புக்குப் பிறகு சாதாரண உயர்கல்வி எட்டு சதவீதத்தினருக்கு கிடைக்கிறது. 70 சதவீதம் மாணவர்கள் எந்தவித மேல் படிப்பையும் மேற்கொள்வதில்லை. வளர்ந்து வரும் கல்வியில் சில பிரச்னைகள் உள்ளன. பிரச்னைகளை களைந்து மாணவர்களுக்கு சிறந்த கல்வியை அளிக்க வேண்டும். மாணவர்களின் திறமைகளை தொழிலகங்களின் தேவைக்கேற்ப மாறுபடுத்திக்காட்ட வேண்டும். கல்வி வளர்ச்சியின் ஒரு பகுதியாக இந்திய மொழிகள் இருப்பது அவசியம். இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிலையங்களால் மட்டுமே சிறந்த கல்வியை அளிக்க முடியும் எனும் நிலையை மாற்ற வேண்டும்.

கலாசாரத்துடன் ஒருங்கிணைந்த கல்வியை இளைஞர்களுக்கு வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.இந்திய தொழில் கூட்டமைப்பு கோவை மண்டல துணைத் தலைவர் சுந்தரராமன், கல்வி ஒருங்கிணைப்பாளர் செந்தில் கணேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Giri Srinivasan - chennai ,இந்தியா
25-நவ-201200:12:53 IST Report Abuse
Giri Srinivasan அப்கோர்ஸ் .......
Rate this:
Share this comment
Cancel
KUNDRATTHU BAALAA - MARUTHAI,இந்தியா
24-நவ-201219:08:43 IST Report Abuse
 KUNDRATTHU BAALAA Language is a mere tool for communicating clearly of one&39s views to others & vice versa.. There is no need to give big importance to languages.. No where in the world make much more hue and cry for language except ours...
Rate this:
Share this comment
Cancel
Ram - Coimbatore,இந்தியா
24-நவ-201217:02:34 IST Report Abuse
Ram இப்படி பேசியர்வர்களின் பிள்ளைகளும் பேரபிள்ளைகளும் எங்கு படிக்கிறார்கள் என்று தெரிந்தால் சாயம் வெளுத்து விடும். ஊருக்கு உபதேசம் ரொம்ப ஈசி.
Rate this:
Share this comment
Cancel
Thiyagarajan S - Chennai,இந்தியா
24-நவ-201210:00:31 IST Report Abuse
Thiyagarajan S இதை தான் நாங்களும் சொல்லி வருகிறோம். தாய்மொழி வழி கல்வி தான் சிந்தனையை உருவாக்கும். அதனால் மற்ற மொழிகளை கற்றுக்கொள்ள கூடாது என்றில்லை.
Rate this:
Share this comment
Cancel
செந்தமிழ் கார்த்திக் - நாமக்கல்டுசென்னை,இந்தியா
24-நவ-201203:32:30 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் நன்றி தினமலர் , இதை இன்னும் பலரது காதுகளில் உரைக்கும் படி உரக்க சொல்லுங்கள் .... // தாய்மொழி கல்வியே சிறந்தது அதுவே சிந்தனையின் ஆணிவேராக மண்ணை துளைத்து நீண்டு வளரும் .. பல மொழியை கற்று கொள்ளுங்கள் ஆனால் தாய்மொழியில் கல்வி பயிலுங்கள் ... இதன் பயன் இப்போது புரியாது ..பிற்காலத்தில் தானாக உணருவீர்கள் ... நமது கல்வி முறையை மாற்றினால் ஒழிய ... அதாவது எண்பது சதவீதம் செய்முறை விதிக்கும் , இருபது சதவீதம் ஏட்டு எழுத்து அளவிற்கும் மாற்றினால் சிந்திக்கும் திறன் இன்னும் பெருகும் .. நீண்ட நாள் நினைவிலும் தாங்கும் , பணியிடத்தில் பயனுள்ளதாகவும் அமையும் .. சுருக்கமாக சொன்னால் ஒரு மாபெரும் கல்வி புரட்சியே இப்போதைய தேவை ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்