அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க ஒரு லட்சம் துண்டு பிரசுரம் வினியோகம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை:"தமிழக அரசுக்கு, பல்வேறு வகைகளில் வரிகளை செலுத்தும் மக்கள், தங்கள் குழந்தைகளை, அரசு பள்ளிகளில் சேர்த்து, இலவச கல்வி பெற ஆர்வம் காட்ட வேண்டும்' என, தமிழக துவக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது. இதை வலியுறுத்தி, ஒரு லட்சம் துண்டுப் பிரசுரங்களை வினியோகிக்க முடிவு செய்திருக்கிறது.

சங்க நிர்வாகி, அப்துல் மஜீத் வெளியிட்ட அறிக்கை:பெற்றோர், இலவச கல்வி தரும் பள்ளிகளில், தங்கள் குழந்தைகளை சேர்க்க முன்வர வேண்டும். அனைத்து பள்ளிகளிலும், தரமான ஆசிரியர்கள் உள்ளனர் . தமிழக அரசு, மாணவ, மாணவியருக்கு, இலவச கல்வி வழங்குவதுடன், பல்வேறு இலவச திட்டங்களையும் வழங்குகிறது.ஆண்டுக்கு, நான்கு ஜோடி இலவச சீருடை, நாள்தோறும், ஒரு முட்டையுடன், ஏழு வகை மதிய உணவு, வாழைப்பழம், இலவச பாடப் புத்தகங்கள், எழுது பொருட்கள், நோட்டுகள், சைக்கிள், "லேப்-டாப்' கம்ப்யூட்டர் என, பல்வேறு திட்டங்களை, தமிழக அரசு அளிக்கிறது. இதை, பெற்றோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பல்வேறு வரிகளை கட்டுகிற மக்கள், அதைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தங்கள் குழந்தைகளை, இலவச கல்வி அளிக்கும் அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.இதை வலியுறுத்தி, இன்று மற்றும் நாளை, ஒரு லட்சம் துண்டுப் பிரசுரங்கள், மக்களுக்கு வழங்கப்படும்.இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளார்.மக்களுக்கு வழங்க அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தில், அரசு பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க வேண்டியதன் அவசியம் மற்றும் நன்மைகள், இரண்டு பக்கங்களில் பட்டியலிடப்பட்டு உள்ளன..

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (18)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan - Madurai,இந்தியா
24-நவ-201216:59:29 IST Report Abuse
Loganathan மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலய பள்ளிகள் தரம் நன்றாக இருப்பதால் அங்கு சேர்ப்பதற்கு மக்கள் விரும்புகிறார்கள் இடம் தான் கிடைப்பதில்லை
Rate this:
Share this comment
Cancel
Daniel Joseph - SANAA,ஏமன்
24-நவ-201216:23:50 IST Report Abuse
Daniel Joseph நம் அரசு பள்ளிகளிலும் ஆங்கில வழி போதனையும் வையுங்கள் தமிழ் வழி போதனையும் வையுங்கள் அப்போ பிள்ளைகள் வரும் பொதுவாக ஆசிரியர் நியமனம் படித்து முடித்ததும் எதாவது சிறிய சம்பளத்துக்கு சேர்த்து பின்பு நிரந்தரமாக்குங்கள்
Rate this:
Share this comment
Cancel
malick batcha - chennai,இந்தியா
24-நவ-201216:03:24 IST Report Abuse
malick batcha முதலில் அரசு ஊழியர்கள் தங்கள் குழதைகள் அரசு பள்ளியில் தான் படிக்கவேண்டும் என்ற நெஞ்சுரத்தி கொள்வோம் . பின் நோட்டீஸ் எல்லாம் கொடுப்போம் . அரசு அணைத்து அரசு அலுவலகர் அரசு கல்விதான் கொடுக்க வேண்டும் என்று சொல்லட்டும் , முதலில் அரசு ஆசிரியர் அவர்கள் குழந்தை சேர்க்கட்டும். நாடு என்ன செய்தது என்பதை விட நாடுக்கு நீ என்னசெய்தாய் என்று யோசியும்.
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
24-நவ-201214:16:10 IST Report Abuse
christ இலவச திட்டங்கள் நான்கு ஜோடி இலவச சீருடை, நாள்தோறும், ஒரு முட்டையுடன், ஏழு வகை மதிய உணவு, வாழைப்பழம், இலவச பாடப் புத்தகங்கள், எழுது பொருட்கள், நோட்டுகள், சைக்கிள், "லேப்-டாப்&39 கம்ப்யூட்டர் என எல்லாம் கொடுத்திங்க நல்ல தரமான கல்விய கொடுத்திங்களா ?
Rate this:
Share this comment
Cancel
ரமேஷ் - கோயம்புத்தூர்,இந்தியா
24-நவ-201211:04:37 IST Report Abuse
ரமேஷ் நல்ல முயற்சி. எந்த அரசு பள்ளியின் தலைமை மற்றும் மற்ற ஆசிரியர்கள் அவர்களின் பிள்ளைகளை தாங்கள் பணிபுரியும் பள்ளியில் படிக்க வைக்கின்றனர். அப்படி ஏதாவது அரசு பள்ளி கோவையில் இருந்தால் சொல்லுங்கள். என் இரு குழந்தைகளையும் அதில் சேர்க்கிறேன். உங்களுக்கு புண்ணியமா போகும். ஏன்னா 1 -ம் வகுப்புக்கு வருஷம் 20000 பீஸ் கட்டற கொடுமை இங்க தான் இருக்கு.
Rate this:
Share this comment
Cancel
ஜ்கமர்நிஷா - Coimbatore,இந்தியா
24-நவ-201210:48:47 IST Report Abuse
ஜ்கமர்நிஷா அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க ஒரு லட்சம் துண்டு பிரசுரம் வினியோகம். வரவேற்கதக்க ஒன்று.
Rate this:
Share this comment
Cancel
சரவணன் p - முதனைவிருத்தாசலம்,இந்தியா
24-நவ-201210:43:56 IST Report Abuse
சரவணன் p அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் நல்ல முறையில் பாடம் கற்பித்தால் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்க்க அவசியம் இருக்காது எனவே அரசு அதிகாரிகளை திருத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
24-நவ-201209:44:36 IST Report Abuse
இராஜ.பாலமுருகேசன் ...அரசு பள்ளிகளும், அரசு உதவி பெரும் பள்ளிகளும், இருக்கும் பரிதாபகரமான நிலையில் யாரும் தங்களின் பிள்ளைகளை அங்கு வந்து சேர்க்க தயக்கம் காட்டத்தான் செய்வார்கள்... எண்களின் பகுதியில் இருக்கும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் நடைபெறும் ஊழல்களை மாவட்ட ஆட்சித்தலைவருக்கும், மற்ற லஞ்ச ஒழிப்பு துறை போன்ற அரசு துறைக்கும் சொல்லி... சொல்லி, எழுதி... எழுதி, தவித்துவிட்டோம்... எந்த வித நடவடிக்கையும் இல்லை... நடவடிக்கை எடுப்பதாக வருகிறார்கள், வந்தவுடன் என்ன நடக்கிறதோ தெரியவில்லை... பிறகு எந்த நடவடிக்கையும் நடைபெறுவதில்லை... மீண்டும் அதே மிக மோசமான நிலை... போதிய கட்டிட வசதி இல்லை, போதிய கழிப்பிட வசதி இல்லை, இலவச புத்தகங்கள் வெளியில் விற்கப்படுகின்றன, நோட்டு புத்தகங்கள் கிழித்து விற்கப்படுகின்றன, சத்துணவில் எதுவுமே போடுவதில்லை, வெறும் சுடு தண்ணி தான் ஊற்றப்படுகிறது... பொய்யாக பிள்ளைகளின் பெயர் எழுதப்பட்டு அரசிடம் இருந்து இலவசங்கள் பெறப்படுகின்றன... தயவுசெய்து உங்களை போன்ற பத்திரிகை காரர்கள் இது போன்ற பள்ளிகளுக்கு சென்று பார்த்து அரசுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தெரிவித்து நடவடிக்கை எடுக்கச்செய்தால் மிக நன்று... இது பற்றி ஒரு முடிவு எடுங்கள் நாட்டுக்கு நாளது ஏதாவது செய்வோம்... எங்களை மின்னஞ்சல் மூலம் எங்களை தொடர்பு கொண்டால், உங்களுக்கு ஒத்து போன்ற பள்ளிகளின் நிலையையும், மற்ற விவரங்களையும் தரத்தயார்... முயற்சி செய்யுங்கள்...
Rate this:
Share this comment
Cancel
ராம.ராசு - கரூர்,இந்தியா
24-நவ-201209:00:20 IST Report Abuse
ராம.ராசு சிறப்பான முயற்சி அதேசமயம் தங்களைப்பற்றிய சில உண்மைகளையும் அரசு ஆசிரியர்கள் உணரவேண்டும். அனைத்து அரசுப்பள்ளிகளிலும் தரமான ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்று சொல்லுவதும், துண்டு பிரசுரங்கள் கொடுத்தால் மட்டும் போதாது. முதலில் அரசு ஆசிரியர்கள், தங்களின் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கவேண்டும். அரசுப் பள்ளிகளுக்கு அரசு தருகின்ற வசதிகளை பட்டியலிடும் ஆசிரியர் கூட்டணி, தங்களுக்கு அரசு ஊதியம் இருப்பதால், தனியார் பள்ளிகளில் ஆங்கிலம் நன்றாகச் சொல்லித்தரப்படுகிறது என்பதற்காக அப்பள்ளிகளில் தங்களது குழந்தைகளை சேர்க்கும் மனோபாவம் மாறவேண்டும். அதைவிட்டு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்வது தங்களது பணிக்கு.. வேலைக்கு ஆட்களை சேர்க்கும் சந்தைப்படுத்தும் யுக்தி (மார்கெட்டிங் டெக்னிக்) என்றுதான் சொல்லவேண்டும். கணவன் மனைவியும் அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களாக இருந்துகொண்டு தங்களது குழந்தைகளை பிரபலமான தனியார்பள்ளிகளில் சேர்பவர்கள் இருக்கிறார்கள் என்பது ஆசிரியர் கூட்டணிக்குத் தெரியுமா.. அல்லது தெரியாதது போல இருக்கிறார்களா..? முதலில் அரசு ஆசிரியர்கள் தங்களது திறமையை வளர்த்துகொண்டு, தங்களது குழந்தைகளையும் அரசுப் பள்ளிகளில் சேர்த்துவிட்டு, பிறகு மற்ற பெற்றோர்களுக்கு அரசு பள்ளிகளின் சிறப்பை சொல்வதுதான் சரியானதாக இருக்கும். அதை விட்டு "ஊருக்கு உபதேசம் தனக்கில்லை" என்ற பழமொழிக்கேற்ப அரசு ஆசிரியர்கள் நடந்து கொள்ளக்கூடாது .
Rate this:
Share this comment
Cancel
24-நவ-201207:28:34 IST Report Abuse
விழுப்புரம் ஜீவிதன் நல்ல முயற்சி. இதில் தங்களது அதாவது தமிழக துவக்கப் பள்ளி ஆசிரியர் சுயநலன், பணிபாதுகாப்பு பற்றிய அச்சம் தெரிந்தாலும் இந்த முயற்சியை பாராட்டலாம். முதலில் இந்த ஆசிரியர்கள் எத்தனை பேர் அரசு கொடுக்கும் இலவச கல்வியை தங்களின் குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள் என்பது தான் கேள்வி? தமிழ்நாட்டில் பிறருக்கு தான் உபதேசம், தனக்கில்லை?
Rate this:
Share this comment
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
24-நவ-201213:15:34 IST Report Abuse
மதுரை விருமாண்டிஅந்த துண்டு பிரசுரம் செய்ய செலவிட்ட பணத்தைக் கூட அரசு பள்ளிகளின் முன்னேற்றத்திற்கு செலவிடாத அரசுகள் ... அடிப்படை தரமும் வசதியும் இல்லாமல், ஆளைச் சேர்க்கச் சொல்வது அரசும், அரசு நிர்வாகமும் சேர்ந்து அடிக்கும் முட்டாள்தனமான கூத்தே.. ஒரு லட்சம் இலவச வீடுகள் கட்ட பணம் செலவிட்டு சூறையாடுவார்கள், சதிகாரர்கள.. அதில் சில சதவீதங்களைக் கூட அரசு பள்ளி மேம்பாட்டுக்கு செலவழிக்க மாட்டார்கள்... இந்த கூத்தை நம்பி ஜால்ரா அடிக்கவும் ஒரு கூட்டம் இருக்கிறது......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்