Advertisement
கெஜ்ரிவால் கட்சிக்கு ஹசாரே குழுஆதரவு அளிக்கும்: கிரண்பேடி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

ஐதராபாத்:""அரவிந்த் கெஜ்ரிவால் துவக்கியுள்ள அரசியல் கட்சிக்கு, தேர்தலின் போது, அன்னா ஹசாரே குழு, ஆதரவு அளிக்கும்,''என, ஹசாரே குழு உறுப்பினர், கிரண் பேடி கூறினார்.ஓய்வு பெற்ற, ஐ.பி.எஸ்., அதிகாரியும், சமூக ஆர்வலர், அன்னா ஹசாரே குழுவின் உறுப்பினருமான, கிரண் பேடி, ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, நேற்று, ஐதராபாத் வந்தார். செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:அரவிந்த் கெஜ்ரிவால், தேசிய ஒருமைபாட்டுக்காகவும், ஊழலை ஒழிப்பதற்காகவும், பாடுபட்டு வருகிறார்.
அவரைப் போன்ற, நேர்மையானவர்களுக்கு எங்களின் ஆதரவு உண்டு. அவரது கட்சி, தேர்தலை சந்திக்கும்போது, அன்னா ஹசாரே குழு, அவருக்கு ஆதரவு அளிக்கும்.நாங்கள், அறப் போராட்டங்களின் மூலம், ஊழலை ஒழிக்க போராடுகிறோம். கெஜ்ரிவால், அரசியல் கட்சியை துவக்கி, ஊழலுக்கு எதிராக போராடுகிறார். எங்களுக்கு இடையில், எந்த கருத்து வேறுபாடும் இல்லை. இரு தரப்பின் நோக்கமும் ஒன்று தான்.லோக்பால் மசோதாவில், பிரதமர் பதவி வகிப்போருக்கு, விலக்கு அளித்திருப்பது குறித்து, விவாதம் நடத்த வேண்டும்.இவ்வாறு, கிரண் பேடி கூறினார்.


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.