Chadha namtari sudden arrest murder case | சத்தா கொலை வழக்கு நம்தாரி திடீர் கைது| Dinamalar

சத்தா கொலை வழக்கு நம்தாரி திடீர் கைது

Added : நவ 23, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி:மதுபான வியாபாரி பான்டி சத்தா சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில், உடன் இருந்த, உத்தரகண்ட் மாநில சிறுபான்மை கமிஷன் முன்னாள் உறுப்பினர் சுக்தேவ் சிங் நம்தாரியை, டில்லி போலீசார் நேற்று கைது செய்தனர்.உ.பி., உட்பட, சில மாநிலங்களில், மதுபான தயாரிப்பு நிறுவனங்கள், திரையரங்குகள், ரியல் எஸ்டேட் என, பல தொழில்களை நடத்திய தொழிலதிபரும், உ.பி., மாநில அரசியல்வாதிகளுக்கு மிகவும் நெருக்கமானவருமான, பான்டி சத்தாவும், அவரின் இளைய தம்பி ஹர்தீப்பும், ஒருவரை ஒருவர் மாறி மாறி சுட்டு இறந்தனர். கடந்த, 17ம் தேதி நடந்த இச்சம்பவம் குறித்து, டில்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்த சம்பவம், நடந்த போது, சத்தாவின் நண்பரும் உத்தரகண்ட் மாநில சிறுபான்மை கமிஷன் உறுப்பினர் சுக்தேவ் சிங் நம்தாரியும் இருந்துள்ளார். இது சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து, அவரை சிறுபான்மை கமிஷன் உறுப்பினர் பதவியில் இருந்து, உத்தரகண்ட் அரசு நீக்கியது.
இதற்கிடையில், நம்தாரி சம்பவத்தில் இருந்தது குறித்து, டில்லி போலீசார் சந்தேகத்துடன் விசாரித்து வந்தனர். இதில் துப்பு கிடைத்ததையடுத்து, டில்லி போலீஸ் குழு நேற்று முன்தினம் உத்தரகண்ட் மாநிலம் சென்றது. அங்கு உதம்சிங்நகர் மாவட்டம் பஜ்பூரிலுள்ள நம்தாரி வீட்டுக்கு சென்ற குழு, அவரை கைது செய்தது.


இது குறித்து, தெற்கு டில்லி துணை போலீஸ் கமிஷனர் சகாய சர்மா கூறுகையில், ""நம்தாரி உட்பட இன்று வரை ஒவ்வொருவரையும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளோம். குற்றவாளி யார் என்பதை கோர்ட்தான் முடிவு செய்ய வேண்டும்,'' என்றார். பஜ்பூரில் நிருபர்களிடம் கூறிய நம்தாரி, ""சம்பவத்திற்கு பின் நான் எங்கேயும் போகவில்லை. எப்.ஐ.ஆரில் என் பெயர் உள்ளது என தெரிந்ததும், போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருந்தேன்,'' என்றார்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை