Advertisement
சரப்ஜித் சிங்குக்கு மரண தண்டனை:இம்ரான் கான் கருத்துக்கு கண்டனம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : நவம்பர் 23,2012,23:47 IST
மாற்றம் செய்த நாள் : நவம்பர் 24,2012,05:24 IST

இஸ்லாமாபாத்:"பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, இந்தியர் சரப்ஜித் சிங்குக்கு, மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும்' எனகோரிய, பாக்., கிரிக்கெட் வீரர் இம்ரான் கானுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.பஞ்சாபை சேர்ந்த சரப்ஜித் சிங், குண்டு வெடிப்பு வழக்கில் மரண தண்டனை கைதியாக, பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளி, அஜ்மல் கசாப் சமீபத்தில், தூக்கிலிடப்பட்டான்.

இது குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், "தேரிக் -இ- இன்சாப்' கட்சியின் தலைவருமான இம்ரான் கான், "கசாப்பை தூக்கிலிட்டது போல, சரப்ஜித் சிங்கையும் தூக்கிலிட வேண்டும்' என்றார்.இவரது கட்சியைச் சேர்ந்த மற்றொரு தலைவரான நயீமுல்லா கான் குறிப்பிடுகையில், "கசாப் குற்றம் செய்ததாக நான்கு ஆண்டுகளுக்குள் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், சரத்ஜித் சிங்குக்கு, 22 ஆண்டுகளாக மரண தண்டனை நிறைவேற்றப்படாமல் உள்ளது.


இதற்கு, அதிபர் சர்தாரி, தடையாக இருக்கக்கூடாது' என்றார்.சரத்ஜித் சிங்கின் வழக்கறிஞர் அவைஸ் ஷேக், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் குறிப்பிடுகையில், "கசாப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் வேறு; இதை சரப்ஜித் சிங்கோடு ஒப்பிடுவது தவறு. மலிவான அரசியலுக்காக, சரத்ஜித் சிங் விஷயத்தை இந்த தலைவர்கள் பேசுவது கேலிக்குரியது. தேர்தலில் இரண்டு இடங்களில் கூட வெற்றி பெற முடியாத இம்ரான் கானின் இந்த கருத்தை, மக்கள் ஆதரிக்க மாட்டார்கள்' என்றார்.





வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
KUNDRATTHU BAALAA - MARUTHAI,இந்தியா
24-நவ-201213:45:10 IST Report Abuse
 KUNDRATTHU BAALAA லோக்கல் தாலிபான்கள் இந்த டுபாகூர் இம்ரானை தலையில் வைத்து கொண்டாடுவார்கள்..
Rate this:
0 members
0 members
2 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.