சபரிமலை:சபரிமலையில், கெட்டுப்போன அப்பங்கள் விற்பனை செய்யப்படுவதால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சபரிமலை அய்யப்பன் கோவிலில், தற்போது மண்டல உற்சவம் நடந்து வருகிறது. அதனால், சாமி தரிசனத்திற்காக, தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அப்படி வரும் பக்தர்கள், வீட்டிற்கு திரும்பும் போது, அப்பம், அரவணை போன்ற பிரசாதங்களை வாங்கிச் செல்கின்றனர்.
பக்தர்களுக்கு, இந்த பிரசாதங்களை தடையின்றி விநியோகிப்பதற்காக, ஏற்கனவே, 32 லட்சம் டின் அரவணையும், 10 லட்சம் பாக்கெட் அப்பமும் தயாரித்து, தேவஸ்தானம் தயார் நிலையில் வைத்துள்ளது.இம்மாதம், 17ம் தேதி, சபரிமலையில் விற்கப்பட்ட அப்பங்களை வாங்கிய பக்தர்கள் சிலர், அது கெட்டுப் போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக, புகார் கொடுக்கப்பட்டு, தேவஸ்தானம் விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், கேரளா, எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த, ஜெயன் என்பவரும் மற்றும் சிலரும், நேற்று முன் தினம் சபரிமலையில் தரிசனம் முடிந்து, எட்டாம் எண் கவுன்டரில், 1,200 ரூபாய் கொடுத்து, 48 பாக்கெட் அப்பங்களை வாங்கியுள்ளனர். அவற்றில், ஐந்து பாக்கெட்டுக்களை பிரித்து பார்த்த போது, அவை கெட்டுப் போயிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.அய்யப்பனை தரிசித்து விட்டு, அவரின் பிரசாதமாக வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுக்க, பக்தர்கள் வாங்கும் அப்பங்கள், கெட்டுப் போன நிலையில் விற்கப்படுவது, பக்தர்களை வருத்தம் மற்றும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.