சென்னை:சென்னை பாண்டிபஜாரில், இலங்கைப் போராளிகளுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டை சம்பவத்தில், புலித் தலைவர் பிரபாகரன் மீதான வழக்கை, சென்னை, செஷன்ஸ் கோர்ட் கைவிட்டது. வழக்கில் இருந்து, அவரது பெயரை நீக்கியது.பாண்டிபஜாரில், புலிகள் இயக்கத்தினருக்கும், "பிளாட்' இயக்கத்தினருக்கும் இடையே, 1982ம் ஆண்டு, மே மாதம், துப்பாக்கி சண்டை நடந்தது. அந்த சண்டையில், "பிளாட்' இயக்கத்தைச் சேர்ந்த ஜோதீஸ்வரன், உமா மகேஸ்வரன் ஆகியோர், காயத்துடன் தப்பினர்.
விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன், சிவகுமார், ஜோதீஸ்வரன் உள்ளிட்டோர் மீது, ஆயுத சட்டப்பிரிவு, கொலை முயற்சி பிரிவின் கீழ், மாம்பலம் போலீசார், வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கு, சென்னை, ஏழாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.இந்த வழக்கில், சி.பி.சி.ஐ.டி., போலீசார் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மனு:இலங்கையில் நடந்த போரில், பிரபாகரனின் உடல், 2009 மே மாதம், கண்டுபிடிக்கப்பட்டதாக, சர்வதேச போலீஸ் மூலம் தகவல் கிடைத்தது.
இந்தியாவை விட்டு, சிவகுமார் சென்றுவிட்டார்; அவர் எங்கிருக்கிறார் என்கிற தகவல் இல்லை. ஜோதீஸ்வரனும், வெளிநாட்டில் இருப்பதாக தகவல் உள்ளது. நிரஞ்சன் என்பவர் இறந்து விட்டார். எனவே, இவ்வழக்கில் இருந்து, இந்த நால்வரையும் நீக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இவ்வழக்கு, நீதிபதி கலியமூர்த்தி முன், விசாரணைக்கு வந்தது. பிரபாகரன் பெயரை நீக்கி, அவர் மீதான வழக்கை கைவிடுவதாக, நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை, டிச., 20ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.