சிலைமான்:திருப்பூரில் இருந்து கொண்டு வரப்படும் துணிகளின் சாயக்கழிவுகளை சுத்தம் செய்வதால், மதுரை வைகை ஆறு மாசடைந்து வருகிறது.ஜவுளி உற்பத்திக்கு புகழ் பெற்ற திருப்பூர், ஈரோடு, கோவை, கரூர் மாவட்டங்களில் சாயக்கழிவுகளால் நிலத்தடி நீர் பாழடைந்து விட்டது. இதனால், ஈரோடு ஒரத்தபாளையம் அணை வீணானது. அணையில் இருந்து படிப்படியாக சாயக்கழிவுகளை வெளியேற்றும்படி ஐ÷கார்ட் உத்தரவிட்டுள்ளது. எனினும், வெளியேற்ற முடியாத அளவுக்கு மாவட்ட நிர்வாகம் திக்குமுக்காடி வருகிறது. விவசாயத்திற்கும் வழியில்லை. சாயக்கழிவு கலந்ததால் கரூரில் அமராவதி நதி
வீணானது.அமராவதியாக மாறும் வைகை:கொங்கு மண்டலத்தில் சாயப்பட்டறைகளை நடத்த கெடுபிடிகள் இருப்பதால், ஜவுளி உற்பத்தியாளர்களின் பார்வை மதுரை பக்கம் திரும்பி உள்ளது. வைகை ஆற்றில் தேங்கியுள்ள சிறிதளவு தண்ணீரை பயன்படுத்தி, சாயக்கழிவுகளை சுத்தம் செய்கின்றனர். இதற்காக ஏஜன்ட்டுகள் மூலம் "ஆர்டர்கள்' எடுக்கப்படுகிறது. விரகனூர், சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில், துணிகளின் சாயக்கழிவுகளை கழுவி சுத்தம் செய்து வைகையை மாசயை செய்கின்றனர். நாள் ஒன்றுக்கு இரண்டு லட்சம் வேஷ்டி, சேலைகளின் சாயங்களை சோப்பு பவுடரில் கழுவி காயவைத்து திருப்பூர், ஈரோடு, கரூருக்கு அனுப்புகின்றனர்.தோல் நோயால் பாதிப்பு:ஷாஜகான், விரகனூர்: காலை 6 மணிக்கு ஆற்றுக்குள் வேலைக்கு வருவோம். மதியம் 2 மணிக்கு வேலை முடியும். சம்பளம் 300ரூபாய். புதுத்துணிகளை சோப்பு தண்ணீரில் முக்கி எடுத்து, காலால் மிதித்து சுத்தம் செய்வோம். காலில் புண்கள் ஏற்படுகிறது. வேறு தொழில் தெரியாது. பெண்களுக்கு சம்பளம் 150 ரூபாய்.சீனிவாசன், விரகனூர்: திருப்பூரில் இருந்து ஆர்டர்கள் மூலம் கொண்டு வரப்படும் துணிகளை வைகை ஆற்றில் சுத்தம் செய்து கொடுக்கிறார்கள். மழைக்காலங்களில் வேலை கிடைக்காது.இவ்வாறு கூறினர்.வைகையில் சாயக்கழிவு கலப்பதை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தா விட்டால் வைகையும், "அமராவதி நதி போல்' மாசடைந்து வீணாகும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.