மதுரை:மதுரையில், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பராமரிப்பு உதவித்தொகை மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி தொகை, மின்னணு பட்டுவாடா வழியாக, வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்காக, அருகில் உள்ள வங்கியில், பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயரில் "இணை கணக்கு' துவங்க வேண்டும். மேலும், வருவாய் துறையின்கீழ், மாதாந்திர உதவித்தொகை பெறவில்லை என்பதற்கான சான்றை, வி.ஏ.ஓ.,விடம் பெற்று, அதை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். 18 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு, எளிதாக வங்கி கணக்கு துவங்க, பாதுகாவலர் நியமனச்சான்று வழங்க, மாவட்ட உள்ளூர்க்குழு அமைக்கப்பட்டு, பதிவு எண்கள் வழங்கப்படுகிறது. உடனடியாக வங்கி கணக்கு துவக்க, மாற்றுத்திறனா
ளிகள் நல அலுவலரை அணுகலாம், என கலெக்டர் அன்சுல்மிஸ்ரா தெரிவித்துள்ளார்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.