| E-paper

 
Advertisement
"மதுபான தொழிற்சாலையை மூட வேண்டும்'சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை:வளசரவாக்கத்தில், மதுபான தொழிற்சாலையை மூடக்கோரி, சாலை மறியலில் ஈடுபட்ட, எம்.எல்.ஏ., உட்பட, 95 பேர் கைது செய்யப்பட்டனர்.வளசரவாக்கம், ஆற்காடு சாலை, செல்வ திருநகரில் உள்ள, தனியார் மதுபான தொழிற்சாலையில், நேற்று முன்தின இரவு, திடீரென, "தீ' விபத்து ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள், அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.இந்நிலையில், அப்பகுதியில் உள்ள, 300க்கும் மேற்பட்ட, பொதுமக்கள் மற்றும் மதுரவாயல் தொகுதி எம்.எல்.ஏ., பீம்ராவ் ஆகியோர், மதுபான தொழிற்சாலையை மூடக்கோரி, நேற்று காலை, 9:00 மணிக்கு, வளசரவாக்கம் ஆற்காடு சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.
வளசரவாக்கம் போலீசார், எம்.எல்.ஏ., பீம்ராவ் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்கள், தொழிற்சாலைக்கு, "சீல்' வைக்கும் வரை, பின்வாங்க போவதில்லை என, தெரிவித்தனர்.
பின், ஆர்.டி.ஓ., சண்முகம், பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம், "இதற்கு முன், மூன்று முறை விபத்து ஏற்பட்டுள்ளது. பல முறை புகார் அளித்தும், எந்த பயனும் இல்லை. எங்கள் உயிருக்கு பாதுகாப்பும் இல்லை. தற்போதைய தீ விபத்தால், குழந்தைகளுடன் உயிருக்கு பயந்து ஓடினோம். இந்த தொழிற்சாலையை மூடி, "சீல்' வைக்க வேண்டும்' என, அவர்கள் தெரிவித்தனர்.ஆர்.டி.ஓ., கூறுகையில், ""மாவட்ட ஆட்சியரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், இதற்கு சில நாட்கள் ஆகும். உடனடியாக செய்ய முடியாது,'' என்றார்.இதை ஏற்றுக் கொள்ளாத பொதுமக்கள், தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், எம்.எல்.ஏ., உட்பட, 95 பேர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.