சென்னை:சத்ய சாய்பாபாவின் 87வது பிறந்த நாள் விழாவையொட்டி, ஆர்.ஏ.புரத்தில், ஏழை எளியவர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.ராஜா அண்ணாமலைபுரத்தில், சத்ய சாய்பாபாவின் 87வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. சூரிய பிரபை வாகனத்தில், பாபா அலங்கரிக்கப்பட்டு எழுந்தருளினார்.தொடர்ந்து, சென்னை முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட ஏழை எளியவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன. நடைபாதைகளில் படுத்து உறங்கும், கைவிடப்பட்ட முதியோர்களுக்கு படுக்கைகள் வழங்கப்பட்டன.மாலையில், ஓ.எஸ்.அருண் குழுவினரின் பக்தி பாடல்கள் நிகழ்ச்சி நடந்தது. இரவு, 7:00 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் விழா நிறைவடைந்தது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.