சென்னை: மத்திய சென்னை லோக்சபா தொகுதியில், அகில இந்திய காங்., பொது செயலர் ராகுல் போட்டியிட வேண்டும் என, மேலிட பார்வையாளர் கங்காபவானியிடம், மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் மனு வழங்கினர்.
லோக்சபா தேர்தலை சந்திப்பதற்கு தயாராகும் வகையில், நாடு முழுவதும் வெற்றி வேட்பாளர்களை கண்டறிவதற்கான, 53 மேலிட பார்வையாளர்களை, காங்., பொது செயலர் ராகுல் அனுப்பியுள்ளார். தமிழகத்தில், நான்கு பார்வையாளர்கள் தலைமையில் ஆய்வுப் பணிகள் நடக்கின்றன.
விண்ணப்ப படிவங்களை கட்சியினரிடம் கொடுத்து, அதில் உள்ள கேள்விகளுக்கு பதில் எழுதி தரும்படி கேட்கின்றனர். அதில், தற்போதைய எம்.பி.,க்களின் செயல்பாடுகள், தேர்தலில் யாரை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு <உண்டாகும், அதற்கான காரணங்கள் என்ன என்பது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்படுகிறது. ஒரு தொகுதிக்கு மூன்று வேட்பாளர்கள் பெயர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது.
சத்தியமூர்த்திபவனில் நேற்று, மத்திய சென்னை, தென் சென்னை ஆய்வுக் கூட்டம் நடந்தது. மேலிட பார்வையாளர் கங்காபவானியிடம், "மத்திய சென்னை தொகுதியில் ராகுல் அல்லது கார்த்தி சிதம்பரத்தை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு உறுதி' என்ற மனுவை, இளைஞர் காங்., மாநில பொது செயலர் வழங்கினார்.
மத்திய சென்னை தொகுதியில், 1989 மற்றும் 91ம் ஆண்டு தேர்தலில், காங்., வெற்றி பெற்றுள்ளது. பின் நடந்த தேர்தலில், அத்தொகுதி தி.மு.க., வசம் உள்ளது. தற்போது, கார்த்தி சிதம்பரத்திற்கு போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்ற மனுவை, சிலர் வழங்கினர். மத்திய அமைச்சர் வாசன் போட்டியிட வேண்டும் எனவும், மனுக்கள் வழங்கப்பட்டன.
மத்திய சென்னைக்கு, முன்னாள் எம்.பி., அன்பரசு, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செல்லக்குமார், பலராமன், சிரஞ்சீவி, ரங்கபாஷ்யம், வழக்கறிஞர் தாமோதரன் ஆகியோரும் சீட் கேட்டு மனுக்கள் அளித்தனர்.தென் சென்னை தொகுதியில், "நாசே' ராமச்சந்திரன் போட்டியிட வேண்டும் என்ற மனுவை, இளைஞர் காங்., உறுப்பினர் ஒருவர் வழங்கினார். ஆய்வுப் பணிகள் முடிந்ததும், மேலிட பார்வையாளர்கள் டில்லி சென்று, விண்ணப்பங்களை ராகுலிடம் வழங்க உள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.