ஊட்டி:நீலகிரி கல்வி துறையில், துப்புரவாளர் பணி நியமனம் பெற்ற, குன்னூரை சேர்ந்த இளம் பெண், திருமண கோலத்தில் பணி நியமன ஆணையை பெற்று, "இன்ப அதிர்ச்சி' அடைந்தார்.மாநிலத்தில், கல்வி துறையில், 5,000 துப்புரவாளர், காவலாளி பணியிடங்களுக்கு தேர்வானவர்களுக்கு, "ஆன்-லைன்' முறையில் மாநிலம் முழுவதும், நேற்று பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில், 19 துப்புரவாளர், ஆறு காவலாளி பணியிடங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. ஊட்டி மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் விசுவநாதன், மாவட்ட கல்வி அதிகாரிகள் லட்சுமணன் (குன்னூர்), கனகசபை (கூடலூர்) ஆகியோர் பணி ஆணை வழங்கினர்.
இதில், குன்னூரை சேர்ந்த கவிதா என்ற பெண்ணுக்கும் பணி ஆணை காத்திருந்தது. அவருக்கு, நேற்று காலை குன்னூரில் திருமணம் நடந்தது. "பணி ஆணையை வந்து பெற்றுக் கொள்ளுங்கள்' என, கல்வி அதிகாரிகள் அவருக்கு மொபைல் போனில் தொடர்பு கொண்டு தகவல் கூற, "எனக்கு இன்னிக்கு கல்யாணம் சார், 10:00 மணிக்கு முகூர்த்தம்; சாயங்காலம் வந்து வாங்கி கொள்றேன் சார்' என, கவிதா கூற, அதிகாரிகள் சந்தோஷப்பட்டு கொண்டனர்.
திருமணம், வரவேற்பு அனைத்தும் முடிந்து, நேற்று மாலை, திருமண கோலத்தில், தனது கணவர் பாஸ்கருடன் வந்து, அதிகாரிகளிடம் பணி நியமன ஆணையை பெற்று கொண்டார். "இந்த பணி ஆணை, அரசின் திருமண பரிசு, சிறப்பாக பணி செய்யுங்கள்' என, அதிகாரிகள் வாழ்த்தினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.