Advertisement
காந்திக்கு லத்தி பரிசளித்ததை நினைவு கூறும் விழா பீகார் மாநிலத்தில் கோலாகல கொண்டாட்டம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பாட்னா:தேசப்பிதா மகாத்மா காந்திக்கு, லத்தி பரிசளித்ததை நினைவு படுத்தும் வகையில், பீகார் கிராம மக்கள், "லத்தி மகோத்சவம்'என்ற விழாவை, ஆண்டு தோறும், விமரிசையாக கொண்டாடுகின்றனர்.தேசப்பிதா மகாத்மா காந்தி, 1934ல், பீகார் மாநிலத்தில் உள்ள, கோர்காட் என்ற கிராமத்துக்கு வந்திருந்தார்.நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஆறுதல் கூறுவதற்காக, அவர் வந்திருந்தார். அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள், மூங்கில் லத்திகளை தயார் செய்யும் தொழிலில் தேர்ச்சி பெற்றவர்கள்.

பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு தேவையான, லத்திகளையும், இந்த கிராம மக்கள் தான், தயார் செய்து கொடுத்தனர்.சுதந்திர போராட்டத்தில் ஈடுபடும், இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, இந்த லத்திகளைத் தான், பிரிட்டிஷ் அதிகாரிகள் பயன்படுத்தினர்.இந்த தகவல் தெரிந்ததும், கிராம மக்களை அழைத்த, காந்தி, "இந்தியர்களை தாக்குவதற்கான லத்திகளை, தயாரித்து கொடுப்பதை நிறுத்தங்கள்' என, அன்புடன் வேண்டுகோள் விடுத்தார்.காந்தியின் கோரிக்கையை, கோர்ட்காட் கிராம மக்கள் ஏற்றுக் கொண்டனர்.

தங்களின் அன்பு பரிசாக, ஒரு மூங்கில் லத்தியை, காந்திக்கு அளித்தனர். இந்த சம்பவத்தை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், குறிப்பிட்ட நாளில், "லத்தி மகோத்சவம்'என்ற பெயரில், மிகப் பெரிய விழாவாக, கிராம மக்கள் கொண்டாடுகின்றனர்.இந்தாண்டுக்கான விழா, நேற்று துவங்கியது. மூன்று நாட்களுக்கு, இந்த விழா நடக்கும். காந்திக்கு, லத்தியை பரிசளித்தவர்களில், போதன் பஸ்வான், 103 என்பவர், இன்னும், இந்த கிராமத்தில் வசிக்கிறார். இந்தாண்டு விழாவில், அவரும் பங்கேற்கிறார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.