Future pine, pine India, the company has over Rs .2,000 crore scam! | பைன் ப்யூச்சர், பைன் இந்தியா' நிறுவனம் மீது ரூ.2,000 கோடி மோசடி புகார் !| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (6)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

கோவை:""பைன் ப்யூச்சர், பைன் இந்தியா, பெஸ்ட் வே நிறுவனங்களின் மீது, கோவை எஸ்.பி.,யிடம், 3,000 பேர் புகார் அளித்துள்ளனர்; இப்புகார்களை விசாரிக்க, போலீஸ் தனிப்படை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது,'' என, கோவை எஸ்.பி., உமா கூறினார்.

கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த செந்தில்குமாரும், அதே பகுதியில் வசிக்கும் கேரளாவை சேர்ந்த விவேக்கும், "பைன் ப்யூச்சர், பைன் இந்தியா, பெஸ்ட் வே, வேஸ் டூ சக்சஸ், பெஸ்ட் இன்வெஸ்ட்மென்ட்' என்ற பெயர்களில், நிதி நிறுவனங்களை நடத்தினர்.

"ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம், 8,500 ரூபாய் வீதம், ஐந்தாண்டுகள் பணம் வழங்குவதாகவும், அதன்பின், முதலீடு செய்த பணம் திரும்ப கொடுக்கப்படும்' என, விளம்பரம் செய்தனர்; முதலீட்டாளர்ளுக்கு சில மாதம் பணம் வழங்கினர்.கடந்த இரு மாதங்களாக, பணம் வழங்கவில்லை. பணம் வசூலித்த முக்கிய ஏஜன்ட்டுகளும் தலைமறைவாகினர்.

தலைமறைவாக உள்ள செந்தில்குமார், விவேக் மற்றும் முக்கிய ஏஜன்ட்களை கைது செய்து, முதலீடு செய்த பணத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும் என, கோவையில், 3,000 பேர் புகார் அளித்துள்ளனர். நேற்றும், 300 பேர், கோவை எஸ்.பி., யிடம் புகார் அளித்தனர்.

போலீஸ் அதிகாரிகளிடம் முதலீட்டாளர்கள் கூறியதாவது:ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதம், 8,500 வீதம் வழங்குவதுடன், முதலீட்டாளர்களை பிடித்து கொடுக்கும் ஏஜன்ட்டாக செயல்பட்டால், ஒரு லட்சத்திற்கு, 2,000 ரூபாய் கமிஷன்; 50 லட்சம் முதலீடு சேர்த்து கொடுத்தால், 44 ஆயிரம் ரூபாய் போனஸ் வழங்கினர்.


அதிக முதலீட்டாளர்களை சேர்த்து கொடுக்கும் முகவர்களுக்கு, ப்ரிஜ், வாஷிங்மெஷின், ஹோம் தியேட்டர், "டிவி' போன்றவைகளை ஊக்கப் பரிசாக வழங்கினர். 100 பேரை சேர்த்தால், சிறப்பு ஊக்கப் பரிசாக கார் வழங்குவதாக தெரிவித்தனர். இதற்காக மைசூர், கொச்சி, பெங்களூரு, கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், மதுரை, திருச்சி, சென்னையில் அடிக்கடி ஆலோசனை கூட்டம் நடத்தி, "மெகா விருந்து' கொடுத்தனர்.

முதலீடாக பெறும் பணத்தில், "ரியல் எஸ்டேட், மல்டி காம்ப்ளக்ஸ், கமர்சியல் மால், தங்கம் மற்றும் வைர வியாபாரம், ஒவ்வொரு நகரிலும், டிபார்ட்மென்ட் ஸ்டோர் அமைக்கிறோம்' என, தெரிவித்தனர்.முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படும் பிரத்யோக கார்டு மூலம், "பைன் மற்றும் பெஸ்ட்' நிறுவனங்களில், 50 சதவீதம் சலுகை கிடைக்கும் என்றனர். அதை நம்பி, படித்த இளைஞர்கள் நிறைய பேர், ஏஜன்டுகளாக செயல்பட்டு, முதலீட்டாளர்களை சேர்த்தனர். செந்தில்குமார், விவேக் ஆகியோரின் கீழ், 15 பேர், முக்கிய ஏஜன்டுகளாக செயல்பட்டனர்.எம்.எல்.எம்., முறையில், மாநிலம் முழுவதும், ஒரு லட்சம் பேரிடம், 2,000 கோடி ரூபாய்

Advertisement

வசூலித்துள்ளதாக, மீட்டிங்கில் தெரிவித்து, பல்வேறு புள்ளி விவரங்களை காண்பித்தனர். கடந்த இரு மாதமாக செந்தில்குமார், விவேக் மற்றும் முக்கிய ஏஜன்ட்கள், 15 பேர் தலைமறை வாகி விட்டனர்.இவ்வாறு, போலீஸ் அதிகாரி களிடம் தெரிவித்தனர்.

கோவை எஸ்.பி., உமா கூறியாவது:திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கோவை மாவட்டத்தில், "பைன் இந்தியா, பைன் ப்யூச்சர், பெஸ்ட் வே' நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாந்ததாக, கோவையில், இதுவரை, 3,000திற்கும்மேற்பட்டவர்கள் புகார் கொடுத்துள்ளனர். அனைவரும் ஒரே மாதிரி புகார் கொடுத்துள்ளதால், ஒரு வழக்கு பதிவு செய்து, அனைத்து புகார்களும் அதில் சேர்க்கப்படும்.
யாரிடம் பணம் செலுத்தினர், எவ்வளவு பணம் செலுத்தினர் என்பதற்கு, எந்த ஆதாரமும் இல்லை.

ஒரு சிலர் பணம் செலுத்தியதற்கு ரசீது வைத்திருந்தாலும், அதில் அலுவலக முகவரி, கையெழுத்து, சீல் எதுவும் இல்லை. மேலும் சிலர், 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் நிறுவனத்தின் பெயரில் கையெழுத்து போட்டுள்ளனர். அதிலும் ஆதாரப்பூர்வ தகவல் இல்லை.அதனால், இந்த வழக்கை விசாரிக்க தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. முழுமையாக விசாரித்து, வழக்கு பதிந்து, நடவடிக்கை எடுக்க, கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.இவ்வாறு, எஸ்.பி., உமா கூறினார்.
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (6)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chenduraan - kayalpattanam,இந்தியா
24-நவ-201214:39:35 IST Report Abuse
Chenduraan இப்போ கொஞ்ச நாளுக்கு முன்புதான் ஈமு கோழி ஊழல். இப்போது இன்னொன்று. ஒன்று தெரியாமல் தான் கேட்கிறேன், சேலம், கோயம்புத்தூர் ஈரோடு பகுதிகளில் தான் இந்த மாதிரி ஊழல்கள் நடக்கிறது. அந்த பகுதி மக்கள் எல்லாரும் இளிச்சவாயர்கள் என நினைத்து ஏமாற்றுகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
Pragasam - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24-நவ-201213:42:11 IST Report Abuse
Pragasam நானும் இந்த மாதிரி பிசினஸ் செய்யலாமுன்னு இருக்கேன், இந்த மாதிரி கோமாளிகள் இருக்கும் வரை பிசினஸ் சூப்பரா போகும். கொஞ்சமாவுது மூளைய use பண்ணுங்க மக்களே.
Rate this:
Share this comment
Cancel
KAMAL - saudia,இந்தியா
24-நவ-201212:45:23 IST Report Abuse
KAMAL இதற்க்கு தனி படை அமைத்து விசாரணை செய்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் இந்த சோம்பேறிகள் பணத்தை கொடுத்து ஏமாந்ததுக்கு தனி படை அமைத்து காவல் துறையின் நேரத்தை வீண் விரயம் செய்யாதீர்கள் எத்தனை முறை ஏமாந்தாலும் இந்த சோம்பேறிகளுக்கு அறிவு என்பதே வராது
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
24-நவ-201212:28:48 IST Report Abuse
pattikkaattaan பேராசை பெரு நஷ்டம் ... என்ற பழமொழிக்கு இது சிறந்த உதாரணம் ... அரசாங்க வங்கியில் முதலீடு செய்தால் உங்கள் பணம் பத்திரமாக இருக்கும் .. ஆனால் இவர்கள் ஆசை காட்டுவதுபோல அதிக வட்டி கிடைக்காது ... நம் மக்களுக்கு உழைத்து சம்பாதிப்பதை விட , நோகாமல் காசு வரவேண்டும் என்று ஆசை ... என் நண்பர் ஒருவர் இதில் பணம் போடுகிறேன் என்று சொல்லும்போது, நான் "வேண்டாம் பணம் போடாதே " என்று அறிவுறித்தினேன். நான் சொன்னதை கேட்காமல் இப்போது பல லட்சங்களை இழந்து நிற்கிறார் .. ஆரம்பத்தில் இந்த மோசடி பேர்வழிகள் ஒழுங்காக பணம் கொடுப்பதுபோல் நடிப்பார்கள் ... அப்போதுதான் இன்னும் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் மக்கள் பணத்தை கொண்டுவந்து கொட்டுவார்கள் ... இதில் ஏஜெண்டுகளை நியமித்து அவர்களுக்கும் கமிசன் கொடுப்பதால் அவர்கள் பல பேரிடம் பேசி பணத்தை கொண்டுவந்து மேலும் மேலும் குவிப்பார்கள் ..இப்படி வந்த பணம் சில நூறு கோடிகளை தாண்டும்வரை பொறுத்திருந்து , ஒரு நாள் அனைத்தையும் சுருட்டிக்கொண்டு அட்ரஸ் இல்லாமல் ஓடி விடுவார்கள் ... புதிய பெயரில், புதிய ஊரில் , புதிய வியாபாரத்தை தொடங்குவார்கள் ... மக்கள் மீண்டும் பணத்தை கொண்டுபோய் கொட்டுவார்கள் ... மக்கள் பேராசை நிற்கும்வரை இதுவும் நிற்கப்போவதில்லை ..
Rate this:
Share this comment
Cancel
Mohanraj - Coimbatore,இந்தியா
24-நவ-201211:30:26 IST Report Abuse
Mohanraj அட போங்கடா..10000000000 பெரியார் வந்தாலும் நீங்க திருந்த மாடீங்க.
Rate this:
Share this comment
Cancel
தமில்குடிகாதமகன் - கோவைCity,இந்தியா
24-நவ-201210:19:35 IST Report Abuse
தமில்குடிகாதமகன் அட கோமாளிகளா பேராசை பேரு நஷ்டம். இதுவரை எவ்வளவு மோசடி என் தமிழகம் கண்டுள்ளது, ஏண்டா திருந்தவே மாடீன்களா என் தமிழ் மாக்கானுகளா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.