"ஆம் ஆத்மி கட்சி": புதிய கட்சியின் பெயரை வெளியிட்டார் கெஜ்ரிவால்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி : புதிதாக அரசியல் கட்சி துவங்கி கிட்டதட்ட 2 மாதங்களுக்கு பிறகு தனது கட்சியின் புதிய பெயரை அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அறிவித்தார். சாதாரண மனிதனின் கட்சி என பொருள்படும் வகையில் ஆம் ஆத்மி கட்சி என அவர் தனது கட்சிக்கு பெயரிட்டுள்ளார். முன்னதாக, பிரசாந்த் பூஷன் மற்றும் கட்சியின் 300 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கட்சியின் பெயர் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் தனது கட்சிக்கு ஆம் ஆத்மி கட்சி என அவர் பெயரிட்டுள்ளார். எனினும் இந்த அறிவிப்பு முறைப்படி இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளது.

பெயர் மாற்றம் ஏன்?:


"ஊழலுக்கு எதிரான இந்தியா" என்ற பெயரில் தனது புதிய அரசியல் கட்சியை அக்டோபர் 2ம் தேதி கெஜ்ரிவால் முறையாக துவங்கினார். இருப்பினும் சமூக சேவகர் அன்னா ஹசாரே, ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற இயக்கம் தனது தலைமையிலான குழு என்றும், அப்பெயரை அரசியல் கட்சியின் பெயராக அறிவிக்க கூடாது தெரிவித்ததை அடுத்து தனது கட்சியின் பெயரை மாற்ற அரவிந்த் கெஜ்ரிவால் தீர்மானித்தார். இதனால் அக்டோபர் 2ம் தேதி கட்சி துவங்குவது தொடர்பான ஆவணங்களை மட்டும் தயார் செய்த கெஜ்ரிவால் கட்சியின் பெயரை அறிவிக்காமல் இருந்து வந்தார். தனது ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கும் முன் மக்களின் கருத்துக்களையும் அவர் கேட்டு வந்தார்.
முறைப்படி பதிவு:


அரவிந்த் கெஜ்ரிவால் தனது கட்சியை நவம்பர் 26ம் தேதி டில்லியில் உள்ள ஜன்தர் மந்திரில் துவக்க உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இதற்கான வீடியோடேப் உள்ளிட்ட ஆவணங்களை இன்று நடைபெறும் கட்சி கூட்டத்தில் அவர் சமர்ப்பிக்க உள்ளார். கட்சி தொடர்பான 300 உறுதிச் சான்றுகள் உள்ளிட்ட முறைப்படியான நடவடிக்கைகளுடன் கட்சி பெயரையும் அடுத்த வாரம் தேர்தல் ஆணையத்திடம் கெஜ்ரிவால் சமர்ப்பிக்க உள்ளார்.

மக்கள் ஆதரவு:


அரவிந்த் கெஜ்ரிவாலின் புதிய கட்சிக்கு நாடு முழுவதிலும் அமோக ஆதரவு எழுந்துள்ளது. கடந்த 2 மாதங்களில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் 35,000 கருத்துக்கள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வந்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை கெஜ்ரிவாலின் அரசியல் கட்சியின் பெயர் குறித்த கருத்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றவைகள் லோக்பால் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகள், அதற்கான உறுப்பினர்கள் தேர்வு குறித்ததாகும்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
25-நவ-201210:44:17 IST Report Abuse
pattikkaattaan கொள்ளைக்கார அரசியல்வாதிகளிடமிருந்து நாட்டை காக்க ஒருவர் வேண்டும் ... அது யார் என்று இன்னும் தெளிவாக தெரியவில்லை ...இவர் நடவடிக்கைகளை பொறுத்திருந்து பார்ப்போம் ... நேர்மையான ஒருவர் அரசியலுக்கு வந்தால், நாம் ஆதரவு தெரிவிக்கலாம் ... அடுத்த சந்ததி நலமுடன் வாழ, நம்மால் இயன்ற நல்லதை செய்வோம் ...
Rate this:
Share this comment
Cancel
Giri Srinivasan - chennai ,இந்தியா
25-நவ-201200:19:33 IST Report Abuse
Giri Srinivasan தொகுதிக்கு ஒரு ஒட்டு உண்டு ?????? நீயாலாம் அரசியல்வியாயாதியானாலும் .....,,,
Rate this:
Share this comment
Cancel
Chenduraan - kayalpattanam,இந்தியா
24-நவ-201217:15:58 IST Report Abuse
Chenduraan இப்போதிலிருந்து கட்சிக்கு உறுப்பினர்களை பதிவு செய்து கொள்ளும் வகையில் நடவடிக்கை எடுத்து நல்ல முறையில் மக்களை வழிநடத்த வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
uv - kerala  ( Posted via: Dinamalar Android App )
24-நவ-201216:44:11 IST Report Abuse
uv vallethukkal
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
24-நவ-201216:31:26 IST Report Abuse
villupuram jeevithan சோனியா மருமகன் ஏற்கனவே நம்மை பார்த்து, மாம்பழ மக்கள் என்று சொல்லிவிட்டாரே?
Rate this:
Share this comment
Cancel
tamilnambi - new delhi,இந்தியா
24-நவ-201216:06:12 IST Report Abuse
tamilnambi யார் இந்த பரம யோக்கியன் பாரதிய ஜனதா தனது சொந்த முகத்தை காட்டி வாக்கு கேட்க்க யோக்கியதை இல்லை என்பதால் பாபா ராம் தேவ் ,அன்ன ஹசாரே ,கேஜ்ரிவால் என்று இப்படிப்பட்ட கடந்த நன்கு வருடங்களில் மட்டுமே சிலருக்கு தெரிந்த இந்த பரம யோக்கியன்களை கொண்டு இப்படி சில பல நாடகங்களை நடத்தி வருகிறது இவன் யோக்கியமானவன் என்று நம்பி மக்கள் வாக்கு அளித்தால் ஆளும் மத்திய அரசையே மிரட்டி பிழைப்பு நடத்தும் இவன் பதவிக்கு வந்தால் நாடு என்ன ஆவது
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
24-நவ-201215:39:42 IST Report Abuse
Pugazh V கேஜ்ரிவாளின் தமிழக சொம்புகளுக்கு : இந்த ஆள் தமிழ்நாடு பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாத ஆள் என்று இப்போதாவது புரிகிறதா? கட்சி பேரே வாயில் நுழையாத மாதிரி வெச்சுருக்கார். நாங்க ஸ்கூல்ல படிக்கும் போது, ஆம் என்றால் மாம்பழம் என்று சொல்லித்தந்ததாக நினைவு. இப்போ ஆம் என்றால் சாதாரண மனிதன் என்கிறார்கள். என்ன கண்றாவியோ? பரிதாப தமிழர்கள் பாவம். அர்த்தம் தெரியாத கட்சிக்கு ஆதரவும் வாழ்த்துக்களும் எதிர்பார்க்கிறேன்,
Rate this:
Share this comment
Cancel
panneerselvam - Thanjavur,இந்தியா
24-நவ-201209:05:40 IST Report Abuse
panneerselvam வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்