மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் கடந்த திங்கள் கிழமை கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்கு அபிஷேகம் மூலவர் சுந்தரேசுவரருக்க வெகு விமரிசையாக நடைபெற்றது.
பழுதுபட்ட பழமையான சங்குகளில் புனித நீர் நிற்காமல் ஒழுகுகிறது, யாராவது 1008 சங்கு நன்கொடையாக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று சொன்ன அடுத்த கணமே ,"நான் தருகிறேன் 'என்று தினமலர் வெளியீட்டாளர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி ஒத்துக்கொண்டு கடந்த ஒராண்டாக, இதற்கான சங்குகளை பல லட்ச ரூபாய் செலவில் சேகரித்து நன்கொடையாக வழங்கினார்.
மேள தாளங்கள் மங்கள ஒலி எழுப்ப, அர்ச்சகர்கள் மந்திரம் சொல்லியபடி ஒவ்வொரு சங்கிலும் இருந்த புனித நீரை சுந்தரேசுவரர் மீது அபிஷேகம் செய்ய பக்தர்கள் மனம் சிலிர்த்தபடி கண்களில் ஆனந்த கண்ணீர் வடிய பார்த்தபடி இருந்தனர்.
கருவறையில் ஒரே நேரத்தில் நூறு சங்குகளைக்கூட வைக்கமுடியாது, ஆனால் 1008 சங்குகளை வைத்து அபிஷேகம் செய்வது எப்படி என்று பார்த்தபோது, அபிஷேகம் செய்வதற்கு ஏதுவாக சங்குகளை மரப்பலகையில் வைத்து அடுக்கி தருவதும், அபிஷேகம் செய்து முடித்த சங்குகளை அதே போல மரப்பலகையில் வைத்து எடுத்து வெளியே கொண்டுவருவதுமான பணியில் வெகு வேகமாக ஒருவர் ஈடுபட்டு இருந்தார்.
விசாரித்த போது அது உண்மை என்றானது
இதுதான் வாழ்க்கை என்று நம்மைப் போன்றவர்கள் நினைத்துக் கொண்டிருக்க, இதுவல்ல வாழ்க்கை என்று திடுமென நந்தகுமார் முடிவெடுத்தார்.
இதுவரை படித்தது படிப்பல்ல இனிமேல் படிப்பதுதான் படிப்பு என்று திருவாசசகத்தையும், தேவராத்தையும், சொக்கநாதர் அந்ததாதியையும், திருமந்திரத்தையும், அபிராமி அந்தாதியையும் ஆழ்ந்து படித்தார். அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினார், சொக்கநாதா என் கடன் உனக்கு பணி செய்து கிடப்பதே என்று புதிய மனிதனாக கோயிலுள் நுழைந்தார்.
அன்றாட பூஜைப்பொருட்கள் போக, சிறப்பு விழா நாட்களில், 1008 சங்காபிஷேகம் நடைபெறும் நாட்களிலும் இன்னும் கொஞ்சம் கூடுதலாக சுத்தம் செய்யும் பணிவரும். அதை இன்முகத்துடன் ஏற்று செய்கிறார்.
இவரது பணிக்காக ஒரு பைசா கூட யாரிடமும் சம்பளமாகவோ, சம்பாவனையாகவோ, சன்மானமாகவோ வாங்குவது கிடையாது. வற்புறுத்தி தரும்போது அதை அப்படியே சுவாமிக்கு விளக்கு போட எண்ணெய், நெய் வாங்கக் கொடுத்துவிடுவார். இவரது இந்த குணத்தால் இவரை நம்பி பலரும் பல பொறுப்புகளை செய்து தருவார்கள் அதன்படி பள்ளியறை சிம்மாசனம், வெள்ளிப்பலகை, தீபாராதனை வெள்ளித்தட்டு, பைரவருக்கு வெள்ளி கவசம் போன்றவைகளை உபயதாரர் மூலமாக செய்து கொடுத்துள்ளார்.
- எல்.முருகராஜ்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவருக்கு நாம் செய்யும் தொண்டு இவரை அவர் போக்கில் விட்டு விடுவதேஅதிக விளம்பரம் துதி எல்லாம் அவரை திசை திருப்பி விடும் இது தான் ஞானானந்தர் போன்ற பெரிய மகான்களுக்கே நிகழ்ந்தது எங்கோ முகையூர் அருகே சின்ன கிராமத்தில் அமைதியாய் ஆனந்தமாய் ஏழை எளியோருக்கு இறைபணி செய்து கொண்டு இருந்தவரை இங்கே கொண்டு வந்து எங்கோ அனுப்பி விட்டார்கள்
மூச்சு விடுவது கூட சமுதாய தொண்டுதான் . உன் மூச்சால் பல தாவரங்கள் வாழ்கின்றன. தனது பதவி , அதிகாரம் , பணம் அனைத்தையும் துறந்து ஒருவன் வருவதே பெரிய விஷயம் . கோவில் என்பது பலரது தனம்பிகையை துண்டும் இடம் . கடவுள் இருக்கிறார் சரி செய்வார் என்ற நம்பிக்கையில் தான் நாம் அவரிடம் ப்ரிசினைகளை ஒப்படைத்து விட்டு தினம் நம்பிக்கையுடன் செயல் படுகிறோம் . அப்படிப்பட்ட கோயிலுக்கு ஒருவன் தொண்டு செய்கிறான் என்றால் . அது பெரிய விஷயம் தான் . பயன் இல்லாத மனிதரோ மிருகமோ இந்த உலகத்தில் இல்லை . உங்களால் வாரத்தில் ஓர் ரெண்டு மணி நேரம் ஒதுக்கி உளவார பனியோ இல்லை நாலுபேருக்கு இலவசமாக கல்வி கர்பிபதோ எதாவது முடியுமா . முயன்று பாருங்க . குறை சொல்லும் உலகத்தில் சரி செய்ய வாருங்கள் ....
கடவுளிடம் உண்மையாக அன்பு செலுத்துபவர் மிகவும் அன்பாக இருப்பார்கள். நிறைய பேர் இதென்ன பெரிய கோயில் வேலை என்பார்கள்.பலன் பாராமல் செய்யும் எந்த வேலையும், நல்ல மனிதராக மாற வழி வகுக்கும். அந்த மன நிலை தான் அதன் பலன். கடவுளுக்கு பணி செய்வது மனதில் அன்பை வளர்க்கும். சிறு சிறு தவறுகள் இருந்தாலும், கடவுளின் பால் அன்பு செலுத்துபவர்களை ஊக்கபடுத்த வேண்டும்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.