2G row: UPA to move motion for discussion in Parliament on RP Singh's charge | 2 ஜி விவகாரம் தொடர்பாக விவாதம்: பா.ஜ.,வை சமாளிக்க காங்கிரஸ் புது வியூகம்| Dinamalar

2 ஜி விவகாரம் தொடர்பாக விவாதம்: பா.ஜ.,வை சமாளிக்க காங்கிரஸ் புது வியூகம்

Updated : நவ 24, 2012 | Added : நவ 24, 2012 | கருத்துகள் (9)
Advertisement
2 ஜி விவகாரம் தொடர்பாக விவாதம்: பா.ஜ.,வை சமாளிக்க காங்கிரஸ் புது வியூகம்

புதுடில்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி மீது குற்றம் சாட்டி மத்திய கணக்கு தணிக்கைக்குழு முன்னாள் டைரக்டர் ஜெனரல் தெரிவித்த கருத்து குறித்து பார்லிமென்ட்டில் விவாதம் நடத்த காங்கிரஸ் தயாராகி வருகிறது. அன்னிய முதலீடு தொடர்பாக விவாதம் நடத்தக்கோரிய பா.ஜ.,வுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் இப்பிரச்னையை கையில் எடுத்திருப்பதாக தெரிகிறது.
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 22ம் தேதி துவங்கியது. இக்கூட்டத்தில் சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீடு குறித்து, விதி எண் 184ன் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ., மற்றும் இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், திடீர் திருப்பமாக, தனியார் டி.வி., ஒன்றிற்கு பேட்டியளித்த மத்திய கணக்கு தணிக்கை அலுவலகத்தில் டைரக்டர் ஜெனரலாக இருந்த ஆர். பி. சிங், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து தணிக்கை அறிக்கை தயார் செய்த தான், அதில் எவ்வித இழப்பு பற்றியும் குறிப்பிடப்படவில்லை என்றும், தனது உயர் அதிகாரிகள் ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு என யூகமாக அறிக்கை தயார் செய்து தன்னிடம் கட்டாயப்படுத்தி கையெழுத்தி வாங்கி விட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். சி.ஏ.ஜி.,யின் நடவடிக்கையில், பொதுக்கணக்கு குழுத்தலைவராக இருந்த பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் தலையீடு அதிகமாக இருந்தது என்றும் தெரிவித்திருந்தார்.

அன்னிய முதலீட்டு விவகாரத்தில் கையை பிசைந்து கொண்டிருந்த காங்கிரசுக்கு, சிங்கின் கருத்து பா.ஜ.,வுக்கு எதிரான ஒரு பெரும் வாய்ப்பாக கிடைத்து விட்டது. இதையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக பார்லிமென்ட்டில் விவாதம் நடத்த காங்கிரஸ் தயாராகி வருகிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தி.மு.க., மூலமாக இதை செயல்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது. இரு தரப்பினரும் மல்லுக்கு நிற்பதால் திட்டமிட்டபடி பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நடக்குமா அல்லது மழைக்கால கூட்டத்தொடர் போல முற்றிலும் முடங்கி விடுமா என்ற கவலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sombu - chennai,இந்தியா
25-நவ-201211:15:07 IST Report Abuse
sombu மத்தியில் ஒரு கட்சி ஆட்சி நடந்தாலொழிய, இதையெல்லாம் அனுபவித்துதான் ஆக வேண்டும். பார்ப்போம் 2014 தேர்தலுக்கு பிறகாவது நல்லது நடக்குமா என்று.
Rate this:
Share this comment
Cancel
S.Govindarajan. - chennai ,இந்தியா
25-நவ-201207:36:13 IST Report Abuse
S.Govindarajan. ஆத்தில் விழுந்தவன் ஒரு சிறிய துரும்பு கிடைத்தாலும் அதை வைத்து கரையேற நினைப்பான்.அதே நிலை தான் காங்கிரஸ் அரசுக்கும். பிரச்சனையை எப்படியாவது திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள். அதாயமில்லாமலா கம்பெனிகள் தனி நபர்களுக்கும ,தொலைக்காட்சிக்கும் கோடிகோடியாக கொட்டிக்கொடுத்தன. யார் செய்தாலும் தவறு தவறுதான் .இதில் ஜாதி அரசியலைப் புகுத்தக்கூடாது. 2g ,நிலக்கரிஊழல் ,ஆதர்ஷ் ஊழல், போபார்ஸ் ஊழல், வதேரா ஊழல், என்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் ஊழல் வளர்ந்து வருகிறது. இந்த அழகில் காங்கிரஸ் மற்றவைகளை மிரட்டியும், திசை திருப்பியும் ஆட்சியைத் தக்கவைக்கப் பார்க்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
24-நவ-201215:31:25 IST Report Abuse
Pugazh V அகில இந்திய அரசியலில் என்னவோ சூழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. இதில் அநியாயமாக ஒரு மாநிலக் கட்சி(தி மு க) தண்டனை அனுபவிக்கிறது. தி மு க வை , யோசிக்காமலே தண்டித்த தமிழ் மாநில மக்களும், இப்போ தண்டனை அனுபவிக்கிறார்கள். கலைஞர் சொன்னது போல, அவர் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்தவர் என்பதால் தான் ராஜா பகடைக் காய் ஆக்கப்பட்டாரோ? ஜோஷி குறுக்கு சால் ஓட்டியிருப்பது இப்போ தானே அம்பலம் ஆகிறது. ஒய்வு பெற்ற கிரண் பேடி, கேஜ்ரிவால் எல்லாம் ஏதாவது சொன்னால் யோசிக்காமல் (2G விஷயத்தில் யோசிக்காமல் நம்பியது போல) நம்புகிறார்கள். அதே போல ஒய்வு பெற்ற வி பி சிங் சொன்னால் நம்ப மாட்டார்களா?
Rate this:
Share this comment
Hari Doss - Pollachi,இந்தியா
25-நவ-201210:29:19 IST Report Abuse
Hari Dossஅந்த ஆள் ஓய்வு பெறுவதற்கு முன்னாள் சொல்லி இருந்தால் நம்பலாம். ஓய்வு பெற்றபின் சொல்வதால் தான் நம்பிக்கை இல்லை. வேண்டுமென்றால் பாருங்கள் இன்னும் சில நாட்கள் கழித்து இந்த ஆள் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார். எனக்குச் சந்தேகமே இல்லை....
Rate this:
Share this comment
Cancel
K.Chandramohan - TAMILNADU,இந்தியா
24-நவ-201214:55:22 IST Report Abuse
K.Chandramohan ""ஜோசி"" மிரட்டி வற்புறுத்தி கையெழுத்து போட சொன்னதாகவே இருக்கட்டும் , ஒன்றே முக்கால் லட்சம் கோடி ஊழல் செய்யவில்லை என்றாலும் 2 G விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளது உண்மை என்பது உண்மைதானே ( பத்து ரூபாய் ஊழல் செய்திருந்தாலும் நம்பி வாக்களித்த மக்களுக்கு செய்த துரோகம் தானே) === ஒன்றேமுக்கால் என்று சொன்னால்தான் உண்மை ஓரளவாவது வெளிவந்தது ==== உதாரணத்திற்கு கலைஞர் தொலைகாட்சிக்கு பணம், பரிமாற்றம் , மற்றும் ஏர்செல் மேக்ஸிஸ் விவகாரங்கள் வெளிவந்தது === நடந்த ஊழலுக்கு முதலில் பதில்சொன்னபிறகுதான் , மற்ற பிரச்சனைகளை பற்றி எந்த அரசியல் கட்சியும் விவாதிக்க வேண்டும் === இன்றைய கால கட்டத்தில் பொதுமக்களுக்கு தேவை === ""ஊழல் எவ்வளவு,== ஊழல் செய்தவனுக்கும்,== செய்ய உதவியவனுக்கும்,== செய்ய துண்டியவனுக்கும் என்ன தண்டனை ???????? நன்றி
Rate this:
Share this comment
Cancel
saravanan - Dares Salaam,தான்சானியா
24-நவ-201213:37:25 IST Report Abuse
saravanan எப்படியாவது விஷயத்தை திசை திருப்பி அந்நிய முதலீட்டை உள்ளே கொண்டுவர காங்கிரஸ் துடிக்கிறது.... அதற்கு தற்போதைய பலிகடா ஆர்.பி. சிங் கிடைத்துள்ளார்.....
Rate this:
Share this comment
Cancel
naagai jagathratchagan - mayiladuthurai ,இந்தியா
24-நவ-201212:31:45 IST Report Abuse
naagai jagathratchagan எதுவும் நடக்கலாம் ...எது நடந்தாலும் அதை பார்லியில் காங்கிரஸ் சமாளிக்கும் ....ஆனால் மக்கள் மன்றத்தில் எப்படி முடியும் அதற்கான பயிற்சியை காங்கிரஸ் மேற்கொள்ளுமா ....எப்படியும் ஊழலை ஒட்டுமொத்தமாக மறைக்கவேண்டும் ..ஊழலை மட்டும் ஒழிக்கமுடியாது
Rate this:
Share this comment
Cancel
chandru - chennai,இந்தியா
24-நவ-201212:12:22 IST Report Abuse
chandru 2G விவகாரத்தில் இரண்டு தரப்பிலுமே மக்களை ஏமாற்றுகிறார்கள். இது ஊழலை விட கொடுமையானது. தன்னை முட்டாளாக்கிய நண்பனைவிட தன் பணத்தை திருடிய எதிரி பரவாயில்லை என்ற மனோபாவம் மக்களிடம் உண்டு. எனவே இரு தரப்புமே சம்பந்தப்பட்ட அனைவரையும் ஒன்று சேர்த்து பொது விவாதம் நடத்த வேண்டும். இப்படி பார்லி-யை முடக்கி நாட்டின் முன்னேற்றத்தை முடக்குவது நல்லதல்ல.
Rate this:
Share this comment
Cancel
V.N.M.பாலசுப்பிரமணி - பெருந்துறை,ஈரோடு மாவட்டம்,இந்தியா
24-நவ-201211:40:38 IST Report Abuse
V.N.M.பாலசுப்பிரமணி எங்கப்பா ஒரு கருத்தும் சொல்லல... பிஜேபி சொம்ப்புக கமெண்ட் அடிங்கப்பா.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை