சென்னை: கூடங்குளம் அணுக்கழிவு கோலார் தங்க வயலில் கொட்டப்படமாட்டாது என மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணுஉலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நடந்த வாதத்தின் போது, கூடங்குளம் அணுஉலையில் மின் உற்பத்திக்குப்பின் மீதமாகும் கழிவுகள், கர்நாடக மாநிலம் கோலாரில் உள்ள தங்க வயலில் சேமிக்கப்படும் என மத்திய அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு கோலார் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக ஒருநாள் பந்த்தும் அனுசரிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் நாராயணசாமி, கூடங்குளம் அணுஉலையிலிருந்து வெளிவரும் கழிவுகள் மிகச்சிறிய அளவே இருக்கும் என்றும், இக்கழிவுகள் கோலார் தங்க வயலில் கொட்டப்படாது என உறுதியுடன் தெரிவிப்பதாக கூறினார். இது தொடர்பாக, கோலார் தொகுதி எம்.பி.,யும், மத்திய அமைச்சருமான முனியப்பாவுடனும் மற்றும் தனது அமைச்சரவை அதிகாரிகளுடனும் பேசியிருப்பதாகவும் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அணு உலை கழிவை எடுத்துக் கொண்டு கோலார் பக்கம் வந்தால் &39கால் இருக்காது&39 என கன்னடன் கண்டணம் செய்கிறான்...
கூடங்குளம் அணு உலைய மூடி விடுங்கள் என கேரள காம்ரேட் கதறுகிறான்...
கூடங்குளம் அணு உலையால் எங்களுக்கு &39கதிர்வீச்சு&39 அபாயம் என்று சிங்களவன் சீறுகிறான்...
ஆனால் தமிழனோ போராடும் மக்களைப் பார்த்து அன்னிய கைக்கூலி, மதம் என்று எகத்தாளம் பேசுகிறான்...
நம் எதிரிக்கு இருக்கும் அக்கறை கூட நம் சொந்த இனத்திற்கு இல்லாமல் போனதே...
தமிழா உன்னை கண்டு வியக்கிறேன்...
என்ன கொடும நாராயணா...
மத்திய அரசினால் ஏன் மற்ற மாநிலத்திடம் சொல்லமுடியாது அதாவது அணுக்கழிவுகளை கொட்ட இடம் கொடுக்கும் மாநிலங்களுக்கு மட்டுமே மின்சாரம் பகிர்ந்துக் கொடுக்க முடியும் என்று? தமிழ்நாடு என்ன குப்பைக் காடா கண்டதைக் கொட்டுவதற்கு? ஏற்கனவே கேரளாவைச் சார்ந்தவர்கள் மருத்துவக் கழிவுகளை இங்கே கோவையில் கொட்டுகிறார்கள்... கேட்டால் அது கடவுளின் நாடாம்... அதைத் தடுத்து நிறுத்த நம்மால் முடியவில்லை. ஏனெனில் நம்மில் இருக்கும் ஒற்றுமை. தமிழன் சாதியால், இனத்தால், கட்சியால், வேறுபட்டுக் கிடக்கிறான். யாராவது நல்லது செய்யும் போது இவன் தமிழனா, கன்னடமா, மலையாளியா அல்லது மராத்தியனா என்று பார்த்து அவனை நோகடிக்கிறார்கள். பிறகு எப்படி அவன் நல்லது செய்வான்? முதலில் இந்த வேற்றுமைகளைக் களைந்து நம் பூமி, நாம் வாழ்வதற்கு ஏற்றவாறு மாற்றுவோம், சாதித்துக் காட்டுவோம்.
போராட்டம் நடத்துவதற்கு என்று சிலர் நமது நாட்டில் இருக்கிறார்கள். பெயர் பத்திரிகைகளில் வரவேண்டும். என்ற வீண் ஆசை. காரணமே இல்லாமல் போராட்டம் முன்பு கம்யுனிஸ்ட் கட்சியினர்தான் இது போன்ற போராட்டங்களை செய்து வருவார்கள். இப்போது விளம்பரத்திகாக அனைவரும் செய்கிறார்கள். பொழுதுபோக இது ஒரு வழி அவ்வளவே வாழ்க போராட்டங்கள்

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.