மதுரை: மதுரை ஆதீனம் தொடர்ந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம்கோரி நித்யானந்தா மனு தாக்கல் செய்துள்ளார். மதுரை ஆதீன மடத்திற்குள் நித்யானந்தா மற்றும் அவரது சீடர்கள் நுழைய தடை விதித்தும், மதுரைஆதீனமும், இளைய ஆதீனமாக நித்யானந்தா இருந்தபோது துவக்கிய அறக்கட்டளை கலைக்கப்பட்டது தொடர்பாக மதுரை ஆதீனம் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்குகளில் பதில் அளிக்க கோரி நித்யானந்தாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நித்யானந்தா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கால அவகாசம் கேட்டார். இதனையடுத்து நவம்பர் 27ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.