பெரம்பலூர்: தமிழக முதல்வர் மற்றும் அரசை விமர்சித்த வழக்கில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேரில் ஆஜராக, பெரம்பலூர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி பெரம்பலூரில் தே.மு.தி.க., சார்பில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் தமிழக முதல்வரையும், தமிழக அரசையும் விமர்சித்து பேசினார். இதையடுத்து, அரசு வழக்கறிஞர் குலோத்துங்கன் விஜயகாந்த் மீது நேற்று (நவம்பர் 23) வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ராமசாமி, விஜயகாந்த் வரும் டிசம்பர் 21ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.