புதுடில்லி: புதிய கட்சி துவங்கியுள்ள சமூக சேவகர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது கட்சிக்கு ஆம் ஆத்மி" என பெயரிட்டுள்ளார். ஆனால் ஆம் ஆத்மி என்பது தங்கள் கோஷம் என்பதால் அதை விட்டுக்கொடுக்க முடியாது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதனால் அரவிந்த் கெஜ்ரிவாலின் முதல் முயற்சியே தற்போது சிக்கலில் உள்ளது.
"ஊழலுக்கு எதிரான இந்தியா" என்ற பெயரில் தனது புதிய அரசியல் கட்சியை அக்டோபர் 2ம் தேதி கெஜ்ரிவால் முறையாக துவங்கினார். இருப்பினும் சமூக சேவகர் அன்னா ஹசாரே, ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற இயக்கம் தனது தலைமையிலான குழு என்றும், அப்பெயரை அரசியல் கட்சியின் பெயராக அறிவிக்க கூடாது என தெரிவித்ததை அடுத்து தனது கட்சியின் பெயரை மாற்ற அரவிந்த் கெஜ்ரிவால் தீர்மானித்தார். இதனால் அக்டோபர் 2ம் தேதி கட்சி துவங்குவது தொடர்பான ஆவணங்களை மட்டும் தயார் செய்த கெஜ்ரிவால் கட்சியின் பெயரை அறிவிக்காமல் இருந்து வந்தார்.
இந்நிலையில், இன்று தனது கட்சிக்கு "ஆம் ஆத்மி" என கெஜ்ரிவால் பெயர் சூட்டியுள்ளார். இதுகுறித்து கெஜ்ரிவால் கூறுகையில், இன்று சாதாரண ஆண், பெண், குழந்தைகள் இங்கு கூடி புதிய கட்சியை உருவாக்கியுள்ளோம். சாதாரண மனிதர்கள் அரசின் ஊழல்களால் வெறுப்படைந்துள்ளனர். இதுவே புதிய கட்சியின் உருவாக்கத்திற்கு காரணம். எனவே கட்சிக்கு சாதாரண மனிதனை குறிக்கும் வகையில் ஆம் ஆத்மி என பெயரிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இப்பெயரை மாயங் காந்தி பரிந்துரைத்துள்ளார்.
காங்கிரஸ் எதிர்ப்பு:
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
என்ன கொடுமை ஒரு பெயர் கூட வைக்க விடமாட்டேன் என்றால் என்ன செய்ய சோனியா காங்கிரஸ் என்ற பெயரையா வைத்து விட்டார், இல்லையே எதோ தன்னுடைய சொத்தையே பிடுங்கிய மாதிரி கூப்பாடு போடுராங்களே, காங்கிரஸ் ....... இதுவே இந்திரா காங்கிரஸ் இன்னும் எத்தனையோ..... யோ காங்கிரஸ் இன்னு இருக்கு அதவே ஒன்னும் சொல்லல .... ஆம் ஆத்மி க்கு ஏன் சண்டை வச்சிட்டு போறாங்க விடுங்க, அப்புறம் &39காங்கிரஸ் எதிரி கட்சின்னு&39 பெயர் வைக்க போறார் .
People should record this day in history, he&39ll magic in the future through this party. India will prosper thorough this party. Both BJP and Congress are useless and corrupt parties. They are not going to change. We people of India has to change and support this party. Kudos to Kejriwal, the last hope in our country.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.