சென்னை: தமிழக அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு முட்டுக்கட்டையாக உள்ளது என்ற முதல்வர் ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் வாசன் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து வாசன் கூறுகையில், கடந்த 8 ஆண்டுகளில் மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தமிழகத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. தற்போது நடந்து வரும் பல திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சியில் மத்திய அரசின் பங்கு உள்ளது என பெருமையாக கூறலாம். காவிரியில் இருந்து தண்ணீர் திறக்க கர்நாடகத்துக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார். கூடங்குளத்தில் நிலவி வரும் பிரச்னைகளை தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பிரச்னைகளை தீர்க்கப்பட்ட பின்னர், தமிழகத்தில் மின்பிரச்னை தீர்க்கப்படும். கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் அதிகளவு தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழக காங்கிரஸ் உறுதியாக உள்ளது. இதற்காக நாங்கள் போராடுவோம். தற்போது தமிழகத்தில் மின்பிரச்னை நிலவி வருகிறது. துரதிர்ஷ்டவசமாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தவறிவிட்டது. தமிழகம் அதிகளவு மின் உற்பத்தி செய்ய மத்திய அரசு உதவி வருகிறது. தவறான தகவல் அடிப்படையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என தவறாக கணக்கிடப்பட்டுள்ளது என தற்போது தெரியவந்துள்ளது. இதில் எதிர்கட்சிகளின் பங்கு உள்ளது. உரிய நேரத்தில் உண்மை வெளிவரும். பிரதமர் கூறியபடி சி.பி.ஐ.,தலைவர் பதவி காலியாக வைக்க முடியாது. இதனை பொது மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். பார்லிமென்ட் முடக்கி வைப்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எப்.டி.ஐ.,ஆனாலும், எந்த விவகாரம் ஆனாலும் பார்லிமென்டில் விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது. இதற்கு எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பிரதீபா காவேரி தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம். சம்பளம் மற்றும் பாக்கித் தொகையை கப்பல் உரிமையாளரிடமிருந்து பெற்றுத்தர மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது என கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
அதிகாரத்தை எல்லாம் மத்திய அரசு கையில் வைத்துகொண்டு தமிழக அரசை குறைகூறுவதில் அர்த்தமில்லை. வட சென்னை அனல் மின் நிலையத்திற்கு சுற்று சூழல் சான்றிதழ் கேட்டு சில வருடங்கள் ஆகின்றன.ஆனால் இதுவரை சான்றிதழ் வழங்கப்படாமல், தற்போது புதிதாக விண்ணப்பிக்க கோருவதன் மர்மம் என்ன? காங்கிரஸ் கட்சியினருக்கு தமிழகத்தின் மின் தட்டுப்பாடு தெரியாதா? வடமாநிலங்களில் இருந்து மின்சாரம் கொண்டுவருவதில் தடை இருப்பின், நெய்வேலி மின்சாரத்தில் கூடுதலாக ஒரு பகுதியை தமிழகத்திற்கு கொடுக்கலாமே? எல்லாவற்றிலும் அரசியல் செய்வதினால், கட்சிகளுக்குள் இருக்கும் பகை உணர்சிகளால் வீணாக பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.