ஸ்ரீநகர்: தவறுதலாக மனிதர்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்த கரடிக்கு, கும்பல் ஒன்று தீ வைக்க முயன்ற சம்பவம் காஷ்மீரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிக்குள் கரடி ஒன்று நுழைந்தது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் கரடியை துரத்த ஆரம்பித்தனர். இதனால் பயந்து போன கரடி, ஒரு மரத்தின் மீது ஏறிக்கொண்டது. எனினும் விடாமல் துரத்திய மக்களில் ஒரு சிலர், நீளமான கம்பு ஒன்றில் துணியை கட்டி அதற்கு தீவைத்து, அந்த கம்பைக் கொண்டு கரடிக்கு தீ வைக்க முயன்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்க கரடி ஒரு பெரிய போராட்டமே நடத்தியது. ஆனால் கரடியின் போராட்டத்தைக் கண்ட மக்கள் பெரும் உற்சாகக் குரல் எழுப்பி மகிழ்ந்தனர். அந்த கரடி அவர்களிடமிருந்து தப்பியதா என்பது தெரியவில்லை. இச்சம்பவம் நடந்து ஒரு வாரம் இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது இந்த சம்பவத்தின் வீடியோ பதிவு கிடைத்துள்ளதையடுத்து சம்பவம் குறித்து தெரியவந்துள்ளது. இச்சம்பவம் காஷ்மீரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.