காஞ்சிபுரம்: நகை வாங்கிதருவதாக கூறி மோசடி செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டார். சென்னையை சேர்ந்தவர் மீனாட்சி. இவர் தீபாவளி சீட்டு நடத்தி வந்தார். இதற்காக நகை மற்றும் பட்டாசு வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதற்காக இவரிடம் பலர் பணம் செலுத்தியுள்ளனர். காஞ்சிபுரத்தில் உள்ள உறவினர் ஒருவர் மீனாட்சியை அணுகி, காஞ்சிபுரம் தனியார் வங்கியில் பணிபுரியும் உஷா என்பவர் சுத்தமான நகை வாங்கி தருவார் என கூறி அழைத்து வந்ததுள்ளார். உஷா, மீனாட்சியிடம் 20 லட்ச ரூபாய் வாங்கியுள்ளார், ஆனால் நகை வாங்கி தரவில்லை பணத்தையும் தரவில்லை. இதனையடுத்து மீனாட்சி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் உஷாவை கைது செய்தனர். உஷா, கலா என்பவரிடம் உதவிக்காக 35 சவரன் நகை மற்றும் 2 லட்ச ரூபாய் பெற்றுள்ளார். இதனையும் உஷா திருப்பித்தரவில்லை. இதனையடுத்து கலா கொடுத்த புகாரின் பேரிலும் போலீசார் உஷாவை கைது செய்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.