சென்னை : புதிய தேர்வு முறைக்கு எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவ மாணவர்கள் மேற்கொண்டிருந்த உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையின் முடிவில், தேர்வு முடிவுகள் இன்னும் ஒருவாரத்தில் வெளியிடப்படும் என்று உறுதியளிக்கப்பட்டதையடுத்து, மாணவர்கள், தங்களது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளனர்.