தூத்துக்குடி: தூத்துக்குடி அனல்மின் நிலைய 5 வது யூனிட்டில், பாய்லர் பஞ்சர் காரணமாக, 210 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது.தமிழக அரசுக்கு சொந்தமான, இந்த அனல்மின் நிலையத்தில், நிலக்கரி மூலம், தலா 210 மெகாவாட் மின்உற்பத்தி செய்யக் கூடிய, மொத்தம் 5 யூனிட்டுகள் உள்ளன. நேற்றுமுன்தினம் நள்ளிரவு 11:30 மணியளவில், 5வது யூனிட்டில், பாய்லர் பஞ்சராகி, ஓட்டை விழுந்தது. அதன் இயக்கம் நிறுத்தப்பட்டதால், 210 மெகாவாட் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது. பழுதை சரிசெய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டனர். இப்பிரச்னையால், மின்வெட்டு நேரம், மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அடிக்கடி பழுதாவது ஏன்: இங்கு, 3வது யூனிட்டில், இதே காரணத்தால், நவ.,19 மாலை, மின்உற்பத்தி நிறுத்தப்பட்டு, பின், பழுது சரி செய்யப்பட்டது. இங்குள்ள இயந்திரங்கள் 25 ஆண்டு காலத்தை கடந்து உழைத்து வருவதால், அடிக்கடி பழுது, விபத்து ஏற்பட்டு, மின்உற்பத்தி பாதிக்கப்படுவது தொடர்கதையாகிறது. இந்த அனல்மின்நிலையத்தை ஒட்டுமொத்தமாக, புதுப்பிக்க வேண்டும் என, தொழிற்சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.