சென்னை:அய்யப்பாக்கத்தை சேர்ந்தவர் தேன்ராஜ், 42. இவர், அங்குள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், மொத்த வியாபார கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, கடையை மூடிவிட்டு, வீட்டுக்கு சென்றுவிட்டார். வழக்கம் போல் கடையை திறக்க முயன்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு, பொருட்கள் சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். திருமுல்லைவாயல் போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் வந்து பார்த்தனர். சுமார் 80 ஆயிரம் ரூபாய் மதிப்பு சிகரெட்களை மட்டும், மூட்டைக்கட்டி எடுத்து சென்றது தெரிந்தது.இதுகுறித்து, போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ""இந்த திருட்டு புதிதாக இருக்கிறது. 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சிகரெட்கள் திருடப்பட்டு இருந்தாலும், அனைத்தும் புகையாகி இருந்தால், எப்படி கண்டுபிடிப்பது,'' என, நகைச்சுவையாக தெரிவித்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.