கடலூர்:கடலூரில் சாய்பாபாவின் 87வது பிறந்த நாள் விழா நடந்தது.கடலூர், கூத்தப்பாக்கம் சத்ய சாய் சேவா சமிதியில் சாய்பாபாவின் 87வது பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. இதனை யொட்டி காலை குத்துவிளக்கேற்றப்பட்டது. தொடர்ந்து, சுப்ரபாதம், சங்கீர்த்தனம் நடந்தது. நடராஜன் கொடியேற்றினார்.பின்னர், அபிஷேகம், கணபதி ஹோமம், இலவச மருத்துவ முகாம் நடந்தது. மாலையில் நடந்த விழாவில் கன்வீனர் சந்தான கிருஷ்ணன் வரவேற்றார். அப்பன்ராஜ், கலியபெருமாள் ஆகியோர் சத்ய சாய் பாபாவின் சிறப்புகள் பற்றி விளக்கிக் கூறினர்.தொடர்ந்து, குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், பஜனைகள், தீபாராதனை நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக டாக்டர்கள் கணபதி, அனுஷா, பத்மாவதி மற்றும் கோவிந்தசாமி பங்கேற்றனர். விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.