திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம், அணைப்பட்டி, அரசு, "கள்ளர் சீரமைப்பு' மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்தில் மோசடி செய்ததாக, தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.இப்பள்ளியில் பணிபுரிந்து, மாறுதலாகிச் சென்ற ஆசிரியர்கள் பெயரில், கருவூலத்தில் சம்பளம் பெற்று, தன் வங்கிக் கணக்கில் தலைமை ஆசிரியர் சரவணன், 43, வரவு வைத்துள்ளார். இதற்கு, இளநிலை உதவியாளர் சிவகுமார் உதவியுள்ளார். கடந்த, 2010 முதல், 2012 வரை, 16 லட்சம் ரூபாய், கருவூலத்தில் முறைகேடாக பணம் பெற்றுள்ளனர். மாறுதலாகி சென்ற ஆசிரியர்கள், தாங்கள் பணியில் சேர்ந்த பள்ளியில் சம்பளம் பெற்றுள்ளனர்.ஒரே ஆசிரியர், இரு இடங்களில் சம்பளம் பெற்று மோசடி செய்துள்ளதை, கருவூலத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து விசாரணை நடத்தினர். உதவி கருவூல அலுவலர் தனசேகரன், மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். தலைமையாசிரியர் சரவணனை, போலீசார் கைது செய்து, திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்; சிவகுமார் தலைமறைவானார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.