ஐதராபாத்:"" ஆந்திராவின் மசூலிப்பட்டினத்தில், ஏவுகணைச் சோதனை மையம் அமைக்க, திட்டமிடப்பட்டுள்ளது,'' என, மத்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகமான, டி.ஆர்.டி.ஓ., தலைவர், வி.கே.சரஸ்வத் கூறினார்.
கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக, ஐதராபாத் வந்த, டி.ஆர்.டி.ஓ., தலைவர், வி.கே.சரஸ்வத் கூறியதாவது:ஆந்திராவின் மசூலிப்பட்டினத்தில், ஏவுகணைச் சோதனை மையம் மற்றும் ஏவு தளத்தை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், சோதனை மையம் அமைக்க திட்டமிட்டுள்ள இடம், கிருஷ்ணா-கோதவரி ஆற்றுப் படுகையில் உள்ளது. இதனால், மத்திய பெட்ரோலிய அமைச்சகத்திடம் அனுமதி பெற வேண்டியிருந்தது.
இது குறித்து, எங்களுக்கும், பெட்ரோலிய அமைச்சகத்துக்கும், கருத்து வேறுபாடு இருந்தது உண்மை தான். தற்போது, பிரச்னைக்கு சுமுக தீர்வு காணப்பட்டுள்ளது. பெட்ரோலிய அமைச்சகத்துடன், இந்த பிரச்னை குறித்து, சுமுகமாக பேசி தீர்க்கப்பட்டுள்ளது.
ஆனாலும், ஆந்திர மாநில அரசுடன், தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. மாநில அரசின் அனுமதி கிடைத்ததும், கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளும் முயற்சி துவங்கும். சோதனை மையத்தை அமைக்கும் பணி, நிறைவடைவதற்கு, மூன்று ஆண்டுகள் ஆகும். இந்த திட்டத்தை மேற்கொள்வதற்காக, 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்படவுள்ளது. இவ்வாறு வி.கே.சரஸ்வத் கூறினார்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.